search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Summer hot"

  • கோடை வெயில் காலத்தில் கோழி களின் எடை குறைகிறது.
  • ரம்ஜான் பண்டிகை காரணமாக கறிக்கோழி விற்பனை மேலும் குறைந்துள்ளது.

  பல்லடம் :

  திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன.தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்ப டுகின்றன. கோடை வெயில் தாக்கம் காரணமாக கோழி கள் அதிக அளவில் இறக்கி ன்றன.இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:- வழக்கமாக கோடை வெயில் காலத்தில் கோழி களின் எடை குறைகிறது. தற்போது ரம்ஜான் பண்டி கை காரணமாக கறிக்கோழி விற்பனை மேலும் குறைந்து ள்ளது.கோடை வெயில் தாக்கம் காரணமாக 10 சதவீதம் வரை கோழிகள் இறக்கின்றன. பண்ணைகள் அமைவிடத்தை பொறுத்து சில இடங்களில் இறப்பு சதவீதம் கூடுதலாக இரு க்கும். வெப்ப அலற்சி காரணமாக ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கமும் கோழிகளின் இறப்புக்கு காரணமாகிறது.

  இது போன்ற பாதிப்புகளால் இழப்பு ஏற்படாமல் இருக்க பண்ணைகளை காற்றோ ட்டமாக வைத்திருக்க வேண்டும். தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தல், பண்ணையை சுற்றி மரங்கள் வளர்த்தல் என தடுப்பு நடவடிக்கை களை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

  • தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
  • நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

  தாராபுரம் :

  வாட்டி வதைக்கும் வெயிலால் தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:- வெய்யில் காலத்தில், சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தண்ணீர் குறைந்தளவு குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதே இதற்கு காரணம்.அனைத்து காலங்களிலும், சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். மிகவும் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் அதிகளவு உள்ள பழங்களை உட்கொள்ளலாம். ஜூஸ் ஆக குடிக்காமல், நேரடியாக பழங்களாக உட்கொள்வது நல்லது.

  தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது, அதிக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே அதைத் தவிர்க்கலாம்.

  மாமிச உணவுகளை வாரம் ஒரு முறை உட்கொள்ளலாம். கோழி இறைச்சி, மீன் உட்கொ ள்ளலாம். அனைத்து விதமான பேக்கரி உணவு, உப்பு அதிகம் இருக்கும் சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் தவிர்க்க வேண்டும்.

  சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் ஒரு சில கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர் ஆகியவற்றை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். உலர் பழங்களை குறைவாக எடுக்க வேண்டும்.பிளாக் டீ, காபி, கிரீன் டீ, ஆகியவற்றை தவிர்க்கலாம். சுடு தண்ணீர், குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்வதற்குபதில், சாதாரணதண்ணீர் குடிப்பது சிறந்தது.கார்பன், செயற்கை நிறமிகள் நிறைந்த குளிர்பா னங்களை, முற்றி லும் தவிர்க்க வே ண்டும். முக்கி யமாக மது அருந்துவது கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.உணவியல் நிபுணர்(டயட்டி சியன்) கவிதா கூறியதாவது:

  வெய்யில் காலத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம்எடுத்துக் கொள்ளலாம். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள், கம்மங்கூழ், கேப்பைக்கூழ் உட்கொள்ளலாம். இனிப்பு வகைகள், அதிக காரம் உள்ள உணவு, எண்ணெயில் பொறித்த உணவு, துரித உணவு, உப்பு அதிகம் உள்ள உணவு, காபி, டீ, செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். கம்மங்கூழ், கேப்பைக்கூழ் ஆகியவற்றை, 200 மி.லி., அளவு எடுக்க வேண்டும். நீர் மோர் குடிக்க லாம். இவையனைத்துக்கும் மேல், தண்ணீர் குடிப்பதே சிறந்தது.செயற்கை குளிர்பானங்களில், சர்க்கரை அதிகம் இருப்ப தால், அவற்றால் எந்த பயனும் இல்லை. சர்க்கரை நோயாளிகள், நீர்ச்சத்து காய்கறி எடுத்துக் கொள்ள லாம்.இவ்வாறு அவர் கூறினார். 

  • பஞ்சாப், அரியானா மாநிலங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேலே வெப்பநிலை சென்றது.
  • 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

  புதுடெல்லி :

  நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. அத்துடன் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல நகரங்களில் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரியை எட்டியிருக்கிறது.

  தலைநகர் டெல்லியை பொறுத்தவரை 2-வது நாளாக நேற்றும் அனல் காற்று வீசியது. அங்கு இயல்பான அளவை விட 5 டிகிரி வெப்பநிலை அதிகரித்து இருந்தது.

  இதைப்போல பஞ்சாப், அரியானா மாநிலங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேலே வெப்பநிலை சென்றது. ராஜஸ்தானின் சுருவில் நிலவிய 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

  கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

  இவ்வாறு வாட்டி எடுக்கும் வெப்பமும், அனல் காற்றும் மக்களை பெரும் துயரில் தள்ளியிருக்கிறது. இதனால் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

  நாளுக்கு நாள் அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலையால், திரிபுரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் கல்வி நிறுவனங்களை மூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
  நகரி:

  ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை.

  இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வீட்டுக்குள் வெப்ப காற்று வருவதால் மக்கள் தூங்க முடியவில்லை.

  வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விஜயநகரத்தில் 2 பேரும், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, சித்தூர், கடப்பா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகினர். மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட 340 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  நேற்று அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டம் பாதிரி பேட்டில் 114.26 டிகிரி வெயில் பதிவானது

  நெல்லூர் வெங்கடகிரியில் 113.36 டிகிரியும், சித்தூர் தொட்டம்பேடு, குண்டூர் மச்சவரத்தில் 113.18 டிகிரியும், கடப்பா மாவட்டத்தில் முட்டனூரில் 113 டிகிரியும் வெயில் கொளுத்தியது.


  மேலும் மற்ற மாவட்டங்களில் 107.6 டிகிரி முதல் 113 டிகிரிவரை பதிவானது. இதனால் ஆந்திரா முழுவதும் வெயில் தாக்கம் உள்ளது.

  இந்த நிலையில் ஆந்திராவில் வருகிற 25-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்ப காற்று கடுமையாக வீசும் என்று அம்மாநில வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சமயத்தில் பல மாவட்டங்களில் 113 டிகிரி முதல் 118.4 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும் இதில் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளான குண்டூர், பிரகாசம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

  அதேபோல இந்திய வானிலை மையமும் வெப்ப காற்று குறித்து எச்சரித்து உள்ளது. 25-ந்தேதி முதல் ராயலசீமாவில் வெப்ப காற்று கடுமையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.

  காற்றில் ஈரப்பதம் குறைந்ததே வெப்ப காற்று கடுமையாக வீச காரணமாகும்.

  இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

  சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் நிலையில் 5 நாட்கள் வெப்ப காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது பொது மக்களை பீதியடைய செய்துள்ளது.
  வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  சென்னை:

  தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர்இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் உடல் நலத்தை பேணிகாப்பதில் கவனம் செலுத்தும் விதமாகவும் ஜூன் 3 -ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளி வைக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.

  வெயிலின் தாக்கம் காரணமாக சின்னம்மை மற்றும் சரும நோய்கள் வராமல் தடுக்கவும், மாணவர்களின் உடல்நலம் பாதுகாக்க வேண்டும், கற்றலும், கற்பித்தலும் சிறப்பாக நடந்திட மாணவர்களின் உடல்நலம் மிகவும் அவசியம்.

  வெயிலின் கடுமையினாலும் மழை பொய்த்துப் போனதால் வறட்சியினால் தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்து காணப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதத்தைத் தாண்டி 106 டிகிரி வரை சுட்டெரிக்கிறது.

  அனல் காற்றும் வீசுவதால் பெரியவர்களாலேயே வெளியில் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. அப்படியிருக்க பள்ளிச்சிறார்கள் எப்படி இந்த வெயிலைத் தாங்கமுடியும்.

  எனவே மாணவர்களின் உடல் நலத்தினை கருத்தில் கொண்டும் பெரும்பாலான பெற்றோர்களின் வேண்டுகோளின்படியும் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3 -ந்தேதி திட்டமிடப்பட்டுள்ள பள்ளிகள் திறப்பதை இரண்டு வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முதலமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  ×