search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem news"

    சேலம் வழியாக செல்லும் கோவா ரெயிலில் கூடுதலாக ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
    சேலம்:

    கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம், ஈரோடு, கரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்  என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி நேற்று கூடுதல் ஏ.சி. பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டது.  வருகிற ஜூன் மாதம் 27ந் தேதி வரை  தற்காலிகமாக இயக்கப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில் செல்லும் வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 17316) கூடுதலாக 2 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு  நாளை முதல் வருகிற ஜூன் மாதம் 28ந் தேதி தற்காலிகமாக இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி படிப்பு அங்கீகாரம் பெற சேலம், நாமக்கல் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்வி அமைச்சகம் அழைப்பு
    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி அமைச்சகம் தேசிய கவுன்சில் வகுத்துள்ளபடி ஆசிரியர் கல்விக்கான 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பில்  இணைய கல்வி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது. 

    தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி பி.ஏ பி.எட் .,  பி.எஸ்சி. பி. எட்., பிகாம் பி. எட் ஆகிய படிப்புகள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பரிசார்த்த அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. இந்தப் படிப்புகளில்  சேருவதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.

    கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ன் படி இதற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. இதில் ஒரு மாணவர் ஆசிரியர் கல்வியோடு சேர்த்து தனக்கு வேண்டிய கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிகம் ஆகிய சிறப்புத் துறைகளில் பட்டம் பெற உதவுகிறது. 

    இந்த ஒருங்கிணைந்த படிப்பானது அதிநவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல், உள்ளடக்கிய கல்வி மற்றும் இந்தியா மற்றும் அதன் மதிப்புகள், நெறிமுறைகள், கலை, மரபுகள் பற்றிய புரிதல் ஆகியவற்றிலும் ஒரு அடித்தளத்தை நிறுவும்.

    கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகாரம், விதிமுறைகள் மற்றும் நடைமுறை) திருத்த விதிமுறைகள், 2021-ஐப் பார்க்கவும். மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மே மாதம் 1 -ம் தேதி முதல் மே மாதம் 31 -ந்தேதி (இரவு 11:59 மணி வரை) சமர்ப்பிக்கலாம்.

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட  மாவட்டங்களில்  ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள்  பல இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    சேலத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கடனுதவியை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில்  “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை” தொடங்கி வைத்தார். 

    சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இந்த ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலி மூலமாக ஓளிபரப்பப்பட்டது.

    அயோத்தியாபட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டார்.விழாவில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9,770  மதிப்பிலான மானியத்துடன் கூடிய இடுபொருட்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும்  கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வம், வேளாண் இணை இயக்குநர் கணேசன், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு  தலைவர்  புவனேஸ்வரி செந்தில்குமார் மற்றும் விவசாயிகள்  கலந்துகொண்டனர்.
    சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தின்னப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன். இவர் இன்று காலை தனது மனைவி முத்துமாரி, மகன் சிலம்பரசன் ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார். 

    அப்போது  மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை  ஊற்றி 3 பேரும்  தீக்குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை பீச்சி அடித்து  அவர்களை மீட்டனர். 

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த சக்திவேல் என்பவர் நிலத்தை கேட்டபோது பா.ம.க. பிரமுகர் சேகர் என்பவரிடம் 1.50 லட்ச ரூபாய்க்கு நிலத்தை விலைக்கு வாங்கி விட்டதாக கூறி இருவரும் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சேலம், நாமக்கல்லில் சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு பொது தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.
    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.  

    இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ.    10-ம் வகுப்பு  மாணவ- மாணவிகளுக்கு  பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, இன்று   (திங்கட்கிழமை) கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்திற்கான  தேர்வு நடைபெற்றது. 

    இந்த தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு  நாளை (24-ந்தேதி) தகவல்  தொழில்நுட்பம் பாடத் தேர்வுடன் முடிவடைகிறது.

    இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி  11.30 மணி அளவில் நிறைவடைகிறது.
    சேலம் சன்னியாசிகுண்டு அருகே என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலியானார்.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை ராமநாதபுரம் ரஷிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெய்விஷ்வா (வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சீலநாயக்கன்பட்டி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சன்னியாசி குண்டு பிரிவு ரோடு அருகே  ெசன்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய ேமாட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே அங்கு வந்த உறவினர்கள் ஜெய்விஷ்வாவின் உடலை பார்த்து கதறி அழுதனர் இந்த சம்பவம் அந்த பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது.
    சேலம்:

    1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

     
    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்  10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதி வருகின்றனர். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகிற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.

    இதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது.

    இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளது.

    இந்த நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
    சேலம் இரும்பாலை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அகே உள்ள மாரமங் கலத்துப்பட்டி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் ஹரிபிரகதீஷ் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். 

    இவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. 

    தகவல்அறிந்த இரும்பாலை போலீசார் அங்கு விரந்து சென்று அவரது உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம அரசு ஆஸ்பத்திரிக்கு அனுபபி வைத்தனர்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?  என்பது குறித்து போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
    தாரமங்கலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள எடயபட்டி கிராமம் கலர்பட்டி காலனி பகுதியை சேர்ந்த மாணவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியின் எதிரே உள்ள கம்மங்கூழ் கடையில் உள்ள சேரில் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர்   மாணவனிடம் உட்கார கூடாது என்று கூறி கட்டையால்  தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மாணவர் ஜலகண்டாபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச் சைக்கு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     
    இதுபற்றிய புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் ராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள மல்லிக்குட்டை கிராமம் மன்னாதன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சதிஷ்.  இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில்  அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் மோதிக்கொண்டனர்.

    இதுபற்றிய புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பை சேர்ந்த  சேர்ந்த நடேசன்,  ராமகிருஷ்ணன், சதிஷ், தனபால், பார்த்திபன், சின்னத்தங்கம், கவிதா, சந்தியா ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலத்தில் நடைபெற உள்ள உதவி பேராசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
    சேலம்:

    இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

    இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு அவசியம். இந்தத் தேர்வுகள் இந்திய அரசின்  தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

    மொத்தம் 82 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. கணினி மூலமாக இந்தத் தேர்வு காலை, மாலை என 2 ஷிப்டுகளாக நடைபெறும். சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு காகாபாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுவது வழக்கம்.

     
    இந்த நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022-ம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ேதர்வுக்கு  விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள் இந்த மாதம்  20-ம் தேதி என அறிவித்து இருந்தது.

     இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
     
    இந்த நிலையில்  யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி வரை என   நீட்டித்து உள்ளது.  இந்த  தகவலை   யூ.ஜி.சி. சேர்மன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
    மேட்டூர் காவிரி கிராஸ் அருகே கால்வாய் கரையில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காவிரிக்கரை பகுதியில் உள்ள கால்வாய் கரையில் ஒரு மோட்டார்சைக்கிள் கிடந்தது. அது தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. 

    அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த மோட்டார்சைக்கிளை கைப்பற்றினர். 

    அதை தீவைத்து எரித்தவர்கள் யார்? அந்த மோட்டார்சைக்கிளில் வந்தவர் யார்? முன்விரோதத்தில் மோட்டார்சைக்கிளை  கடத்தி கொண்டு வந்து தீ வைத்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×