search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stream"

    • புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த வாரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அப்போது குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பின்னர் மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்நது.

    இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2726மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080மி.கனஅடி. இதில் 673மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 186 கனஅடி தண்ணீர் வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645மி.கனஅடி. இதில் 3115 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் 162 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21.98 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் மொத்தம் 11757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 8811 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொன்னேரி பகுதியில் பெய்த பலத்த மழை காணமாக ரெயில்வே சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் காணப்படுகிறது. தடபெரும்பாக்கம் காலனி, துரைசாமி நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. நேற்று இரவு முதல் பொன்னேரி மீஞ்சூர் சோழவரம், திருப்பாலைவனம் பழவேற்காடு மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    • உடுமலை- பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது.
    • 2 புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகரின் நுழைவுப்பகுதியில் உடுமலை- பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது. இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற உபரிநீர் செல்கிறது. இந்த ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரபட்டு அதன் 2 புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தூர் வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை முழுமையாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வர வில்லை. இதனால் அவை சரிந்து மீண்டும் ஓடையை ஆக்கிரமித்துக் கொண்டது. இதன் காரணமாக ஓடை தூர்வாரப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி உள்ளது. அத்துடன் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வருகிறது. தூர்வார வேண்டும் இதனால் ஓடை முழுவதும் செடிகள், புற்கள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. அவை அருகில் வசித்து வருகின்ற பொதுமக்களை தாக்கியும் வருகிறது. ஏற்கனவே சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் சூழலில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அதில் தேங்கியுள்ள தண்ணீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இது குறித்து அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தங்கம்மாள் ஓடையை முழுமையாக தூர்வாரி அதன் மண்ணை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வெட்டாற்று கதவணையில் நீரோட்டத்தை பார்வையிட்டு கரைகளை ஆய்வு செய்தார்.
    • மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் வட்டத்திற்கு ட்பட்ட கங்களாஞ்சேரி, ஓடாச்சேரி, மாங்குடி ஆகிய பகுதிகளில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கங்களாஞ்சேரி கிராமத்தில் வெட்டாற்று கதவணையில் நீரோட்டத்தினை பார்வையிட்டு கரைகளை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, ஓடாச்சேரி கிராமத்தில் வெட்டாறு நீரொழுங்கி, மாங்குடி கிராமத்தில் பாண்டவயாறு கதவணை ஆகிய பகுதிகளில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதனை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், உதவி பொறியாளர் தங்கமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

    இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×