என் மலர்

  நீங்கள் தேடியது "banks"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் நடப்பு 2022-2023ம் நிதியாண்டில் ரூ. 4 ஆயிரத்து 267 கோடி கடன வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 81 சதவீதமும், சிறு, குறு தொழிலுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9 சதவீதமும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கிகள் ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்து கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசுகையில்,

  பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் நடப்பு 2022-2023ம் நிதியாண்டில் ரூ. 4 ஆயிரத்து 267 கோடி கடன வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இதில் விவசாய கடன்களுக்காக ரூ.3 ஆயிரத்து 470 கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ.450 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 347 கோடியும் கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ 147 கோடி ரூபாய் வங்கிகளுக்கு கூடுதலான இலக்கு நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.

  இந்த நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 81 சதவீதமும், சிறு, குறு தொழிலுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9 சதவீதமும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையின்படி அனைத்து வங்கிகளும் இலக்கினை அடைய முழுவீச்சில் செயல்படவேண்டும். வங்கியாளர்கள் அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

  கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல உதவி பொதுமேலாளர் கோடிஸ்வராவ், முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் பிரபாகரன், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆனந்தி மற்றும் அனைத்து வங்கி கிளை மேலாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
  • வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும்.

  சென்னை:

  அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது.

  இக்கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

  இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

  வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். 2010-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் 27-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

  இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும். மேலும் வேலைநிறுத்தம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் 25-ந் தேதி மற்றும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வங்கி விடுமுறை நாட்களாகும்.

  அதனால் 3 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். வங்கி பணிகள் பாதிக்கக்கூடும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் முடிவடைவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Bank #IncomeTaxDepartment
  சென்னை:

  நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் நாளை (31-ந்தேதி)யுடன் முடிவடைவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  பொது மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படமாட்டாது. அரசு துறைகளின் கருவூலங்கள் சார்பில் பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெறும். கருவூல கணக்குகளை சரிபார்த்தல், காசோலை, வரைவு காசோலை மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மட்டும் நடைபெறும்.

  பொது மக்கள் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் மட்டும் செலுத்தலாம். வழக்கமான பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற பணிகள் நடைபெறாது. அதே வேளையில் மாதத்தின் 5-வது சனிக்கிழமையாக இன்று உள்ளதால் வங்கிகள் செயல்படுகின்றன.

  மேலும் ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. வங்கி கணக்குகள் முடிவடைவதையொட்டி அன்று வங்கிகள் திறந்து இருந்தாலும் சேவை நடைபெறாது. பண பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை பரிவர்த்தனை நேரடியாக மேற்கொள்ள இயலாது. இணையதளம், செல்போன் வழியாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.  எந்திரங்கள் வழியாக பணம் டெபாசிட் செய்வதில் எந்த சிக்கலும் கிடையாது என்று வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.

  வங்கிகள் நாளை செயல்படுவது போல வருமான வரித்துறை அலுவலகமும் இயங்குகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான தாமதிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட வருமானவரி படிவங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

  அதனால் வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்றும் நாளையும் வருமானவரி அலுவலகம் வழக்கம் போல் செயல்படும்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித்துறை மண்டல அலுவலகங்களிலும் வழக்கமான வேலை நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குகிறது.

  சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி சொத்துவரி இலக்கு வைத்து வசூலில் ஈடுபட்டு வருகிறது. நாளையுடன் நிதியாண்டு நிறைவடைவதால் நாளை அனைத்து மாநகராட்சி சொத்து வரி அலுவலகங்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  சொத்து வரி வசூலில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) சொத்து வசூல் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

  மேலும் அரசு இ.சேவை மையங்களும் நாளை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இ.சேவை மையங்களை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம். #Bank #IncomeTaxDepartment
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் கியாஸ் மானியத் தொகை திடீரென்று நிறுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. #GasSubsidy
  சென்னை:

  தமிழகத்தில் 2 கோடி பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம் கிடையாது.

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 14.2 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400 முதல் ரூ.450 வரை இருந்தது. ஆனால் தற்போது கியாஸ் சிலிண்டர் விலை ரூ.896 ஆக உயர்ந்துள்ளது. அதற்கான மானியத் தொகை ரூ.405 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

  ஆனால் கியாஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும்போது ரூ.896 கொடுத்து வாங்க வேண்டும். சிலிண்டரை கொண்டு வந்து கொடுக்கும் தொழிலாளர்களுக்கு சரியாக ரூ.20 அல்லது ரூ.30 கொடுக்க வேண்டி இருக்கிறது.

  சிலிண்டரின் முழு தொகையை கொடுக்க முடியாமல் ஏழை-எளிய மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதில் இன்னொரு சிக்கலையும் வாடிக்கையாளர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஒரு சிலரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் மானியத் தொகை திடீரென்று நிறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

  இந்த மானிய தொகையை மீண்டும் பெற வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.

  இதுகுறித்து கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூறுகையில், “ஏழை நடுத்தர மக்கள் சுமார் ரூ.900 கொடுத்து கியாஸ் சிலிண்டர் வாங்குவதில் சிரமம் உள்ளது. அதன்பிறகு வங்கி கணக்கிற்கு வரும் மானிய தொகையை எடுப்பதிலும் சிரமம் உள்ளது.

  எனவே வங்கியில் மானியம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக சிலிண்டர் விலையை குறைத்து ரூ.400-க்கு வழங்க வேண்டும்” என்றனர். #GasSubsidy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பின்பற்றாதவர்களிடம் இருந்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அபராதமாக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BankBalance #BanksMinimumBalance
  புதுடெல்லி:

  வங்கிகள் பொதுமக்களின் பணம் மற்றும் பொருட்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிலை மாறி, தற்போது அவை பொதுமக்களின் பணத்தை பல்வேறு சட்டரீதியான காரணம் கூறி பறித்து வருகிறது. மினிமம் பேலன்ஸ் பின்பற்றுவது, ஏ.டி.எம் பராமரிப்பு என கிடைக்கும் காரணங்களில் எல்லாம் பணம் எடுக்கப்படுகிறது.

  அதன்படி, தற்போது வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2017-18ம் ஆண்டில் சுமார் 4,989.55 கோடி ரூபாய் அபராதமாக பிடித்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் மிக அதிகமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2,433.87 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து இருக்கிறது. இதையடுத்து, தனியார் வங்கியான எச்.டி.எப்.சி ரூ.590.84 கோடியை அபராதமாக வசூலித்து உள்ளது.

  குறைந்தபட்ச இருப்புத் தொகையை பின்பற்ற முடியாதவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருக்கும் நிலையில், அபராதமாக பிடித்தம் செய்தது ஏழைகளின் அன்றாட சேமிப்பு பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும், தொழிலதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் பல ஆயிரம் கோடி கடன் அளித்து, அதில் நஷ்டமடைந்து தற்போது அவற்றை ஈடு செய்ய ஏழைகளின் சேமிப்பில் வங்கிகள் கைவைத்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. #BankBalance #BanksMinimumBalance
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
  புதுக்கோட்டை:

  மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

  புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை பெறவிண்ணப் பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற 15-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

  மேலும் செப்டம்பர் 1-ந் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகைக்கான இணையதளத்தில், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை செப்டம்படர் 15-ந்தேதிக்கு முன்பும், புதியதிற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ந்தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

  மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்தில் உள்ள சொத்துக்கள் என் பெயரில் இல்லை எனவும் சொத்துக்கள் எதையும் பறிமுதல் செய்ய இயலாது எனவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya
  லண்டன்:

  இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில் கடன் பாக்கிக்காக விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அவர் நடத்தி வந்த கிங்பி‌ஷர் விமான நிறுவனம் ரூ.800 கோடி பாக்கி வைத்து இருந்தது. அதற்காக அவரது ஏ319 ஜெட் சொகுசு விமானம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.35 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்தது.

  இந்த நிலையில் வங்கி கடனுக்காக இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்கும்படி அந்நாட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  வழக்கை விசாரித்த கோர்ட்டு லண்டன் அருகே ஹார்போர்ட் ஷையரில் விஜய் மல்லையா தங்கியிருக்கும் லேடி வால்க் அன்ட் பிரம்பிள் லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அனுமதி வழங்கியது.

  இந்த நிலையில் லண்டனில் தங்கியிருக்கும் விஜய் மல்லையா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது “இங்கிலாந்தில் உள்ள எனது சொத்து விவரங்களை கோர்ட்டில் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறேன்.

  எனவே அவற்றை முடக்கி கடனுக்காக வங்கிகள் பறிமுதல் செய்து கொள்ளலாம். எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் சொத்துக்கள் எதுவும் என் பெயரில் இல்லை. ஆடம்பர மாளிகை எனது குழந்தைகள் பெயரிலும், லண்டனில் உள்ள வீடு எனது தாயார் பெயரிலும் உள்ளது.

  எனவே சொத்துக்கள் எதையும் பறிமுதல் செய்ய இயலாது. சில கார்கள், சில நகைகள் உள்ளது. வேண்டுமானால் அவற்றை பறிமுதல் செய்யட்டும். அதில் எந்த தடையும் இல்லை.

  நானே அவற்றை ஒப்படைக்கிறேன். அதற்கான நாள், நேரம் மற்றும் இடத்தை தெரிவிக்கட்டும் என பதட்டமின்றி மிரட்டும் பாணியில் பதில் அளித்தார்.

  சொத்துக்கள் பறிமுதல் குறித்து டுவிட்டரில் ஏற்கனவே பதில் அளித்து இருந்தார். அதில் இந்திய குற்றவியல் அமலாக்கத்துறை இந்தியாவில் உள்ள எனது சொத்துக்களை முடக்கி இருக்கலாம். ஆனால் அவற்றை விற்க முடியாது. சிறிதளவு வட்டியை மட்டும் வசூலித்து கொள்ளலாம்” என தெரிவித்து இருந்தார். #VijayMallya
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துக்களை ஸ்டேட் வங்கி தனது கடனுக்காக இன்று ஏலம் விட்டுள்ளது.#Mallya #statebank

  புதுடெல்லி:

  பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங்பி‌ஷர் விமான நிறுவனத்துக்கு 13 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி தலை மறைவாகி விட்டார்.

  அவர் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கப் பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் பதிவு செய்துள்ளன. அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

  வங்கி கடனுக்காக விஜய் மல்லையாவின் மும்பை, கோவா, பெங்களூர் உள்பட பல இடங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டும், கையகப்படுத்தி ஏலம் விடப்பட்டும் வருகிறது.

  இந்த நிலையில் விஜய் மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துக்களை ஸ்டேட் பாங்கி தனது கடனுக்காக இன்று ஏலம் விட்டது.

  இதற்கிடையே 13 இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் லண்டனில் உள்ள மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை சோதனையிடவும், கையகப்படுத்தி ஏலம் விட்டு பணத்தை பெறவும் அனுமதி கேட்டு இங்கிலாந்து ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

  கடந்த மாதம் 26-ந்தேதி இதற்கு அனுமதி அளித்து லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி லண்டன் லேடிவாக் சொகுசு பங்களா, குயின் ஹுலேன், டெவின், வெல்வின் கட்டிடங்களில் சோதனை நடத்தி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  இதன் மூலம் இந்திய வங்கிகள் அந்த சொத்துக்களை கைப்பற்றி ஏலம் விட்டு பணத்தை திரும்ப பெற வழி வகுத்துள்ளது.

  இதற்கிடையே லண்டன் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது. #Mallya #statebank

  ×