Minimum Balance: வாடிக்கையாளர்களிடம் இருந்து 3 ஆண்டுகளில் அபராதமாக ரூ.8,000 கோடி வசூலித்த வங்கிகள்!

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான (SMS) கட்டணமாக மட்டும் ரூ.3,387.77 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
Minimum Balance: வாடிக்கையாளர்களிடம் இருந்து 3 ஆண்டுகளில் அபராதமாக ரூ.8,000 கோடி வசூலித்த வங்கிகள்!
Published on

கடந்த மூன்று ஆண்டுகளில் 11 பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத கணக்குகளிலிருந்து அபராதமாக மொத்தம் ரூ.8,092 கோடி வசூலித்துள்ளன.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2022-23 நிதியாண்டில் ரூ.2,407 கோடி, 2023-24 நிதியாண்டில்: ரூ.2,909 கோடி, 2024-25 நிதியாண்டில்: ரூ.2,775 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான (SMS) கட்டணமாக மட்டும் ரூ.3,387.77 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com