என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "womens entitlement amount"

    • திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
    • ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்

    2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் அரசின் கொள்கைகள் நாட்டிற்கே வழிகாட்டுகிறது.

    * பெரியார் வழியில் வந்த திராவிட மாடல் அரசு சமூகநீதியைக் காத்து நிலைநாட்டிட பாடுபட்டு வருகிறது.

    * திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.

    * சமூகநீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும்.

    * மெட்ரோ ரெயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    * மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்.

    * அந்த கொந்தளிப்பு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆள்கிறார் என்றே அர்த்தம்.

    * மகளிர் உரிமைத்தொகை திட்டமானது நாட்டிற்கே வழிகாட்டும் திட்டமாக உள்ளது.

    * தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கி உள்ளார் முதலமைச்சர்.

    * ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்

    * தமிழ்நாடு பிற மாநிலங்களுடன் போட்டி போடவில்லை. வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது.

    * தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டி போடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களின் முன்னேற்றம், குழந்தைககளின் வாழ்க்கைகாக தான் இதுபோன்ற நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம்.
    • அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி அண்ணனுடன் தங்கைகளாக நிற்க வேண்டும்.

    மயிலாடுதுறை:

    பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, 'சிங்கப்பெண்ணே எழுந்து வா' மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறையில் பெண்கள் மத்தியில் சவுமியா அன்புமணி கலந்துரையாடினார். அவருக்கு பெண்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மயிலாடுதுறை தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சவுமியா அன்புமணி பங்கேற்று பேசியதாவது:-

    பெண்களின் முன்னேற்றம், குழந்தைககளின் வாழ்க்கைகாக தான் இதுபோன்ற நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம்.

    டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று கொண்டு வந்ததில் அன்புமணியின் முயற்சியும், போராட்டத்தையும் யாரும் மறுக்க முடியாது.

    கொள்ளையடித்த பணத்தில் இருந்து ஓட்டுக்காக பணம் கொடுத்தனர். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். தேர்தல் நெருங்கி வரும்போது ஆயிரம் ரூபாய் எத்தனை ரூபாயாக பெருகுகிறது என்று தெரியாது. நீங்கள் ஏமாற வேண்டாம்.

    பெண்கள் வெற்றி பெற்றால் தங்கள் பகுதிகளுக்கு வேண்டிய சாலை வசதி, மின்விளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உங்களால் செய்து கொள்ள முடியும்.

    எனவே அதிக அளவில் மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மது கடைகள் மூடப்படும், நமது குழந்தைகளின் எதிர்காலம் காக்கப்படும். எனவே, அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி அண்ணனுடன் தங்கைகளாக நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்டம்.
    • விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கம்.

    தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறுகின்றனர்.

    இதில், விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தால் மேலும் 17 லட்சம் பேர் உரிமைத்தொகையை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க. திட்டங்கள் குறித்து மக்கள் பேசும்போது பெருமையாக இருக்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    * தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படும்.

    * மகளிருக்கு ரூ.1000 கொடுப்பது சாத்தியமில்லை என அ.தி.மு.க.வினர் கூறினர்.

    * மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை பாதியில் நிறுத்தி விடுவார்கள் என வதந்தி பரப்பினர்.

    * பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.

    * நமது திட்டங்களை பிற மாநிலங்கள் முன்மாதியாக எடுத்துக்கொண்டுள்ளன.

    * இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    * எங்கள் அண்ணன் மாதந்தோறும் கொடுக்கும் சீர் மகளிர் உதவித்தொகை என மகளிர் கூறுகின்றனர்.

    * வதந்திகளை நம்பாதீர்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்போதும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடரும்.

    * நியூயார்க் தேர்தலில் கட்டணமில்லா பேருந்து பயணம் வாக்குறுதியை தந்ததால் வெற்றி பெற்றுள்ளனர்.

    * கனடாவிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    * பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தி.மு.க.வின் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    * போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், நம் பணி மக்களுக்கு பணி செய்வதே.

    * தி.மு.க. திட்டங்கள் குறித்து மக்கள் பேசும்போது பெருமையாக இருக்கிறது.

    * தி.மு.க. ஆட்சி 2.o உறுதியாகி விட்டது

    * தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

    * வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    * திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் எதிரிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

    * உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா? என்று ஆராயுங்கள்.

    * எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நலத்திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது.
    • மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்கமாட்டோம் என சாத்தூர் ராமச்சந்திரன் பேசி உள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் முள்ளிச்சேவலில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மனு கொடுக்க வந்தனர்.

    அந்த பெண்களிடம், இப்படி நகை போட்டு வந்தால் எப்படி பணம் கிடைக்கும்? நகை அணிந்து வந்தால் உரிமைத்தொகை கிடைக்காது என்று நகைச்சுவையாக அவர் கூறினார்.

    இதுதொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது:

    * நலத்திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

    * விருதுநகர் அருகே உரிமைத்தொகை கேட்ட பெண்களிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நாகரிகமற்ற வகையில் பேசி உள்ளார்.

    * மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்கமாட்டோம் என சாத்தூர் ராமச்சந்திரன் பேசி உள்ளார்.

    * அரசு பதவியின் மாண்பை மறந்து இதுபோன்ற கேலி கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

    * ரூ.1000 உரிமைத்தொகை வாங்குவோர் எல்லாம் நகை போடக்கூடாதா?

    * உரிமைத்தொகை கேட்ட பெண்களிடம் நாகரிகமற்ற வகையில் பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • திட்டம் தொடங்கப்பட்டு 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்து விட்டது.

    சென்னை:

    அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ந்தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நகர்ப்புறத்தில் 1428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2135 முகாம்களும் நடத்தப்படுகின்றன.

    வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சாதிசான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் பயன்பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள், ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் போன்ற பல கோரிக்கைகளுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏராளமானோர் மனு கொடுத்து வருகின்றனர்.

    திட்டம் தொடங்கப்பட்டு 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்து விட்டது. மாநிலம் முழுவதும் இதுவரை 3,600 முகாம்கள் நடந்து உள்ளன.

    இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

    இந்த மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் மனுக்கள் மீதான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் விண்ணப்பித்த பலருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என தெரிகிறது.

    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
    • இந்தத் திட்டத்தில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்

    சென்னை:

    தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

    விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து ,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.

    விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
    • தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் தகுதியான 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் பணி தொடங்கியது.

    அதன்பின்னர், விடுபட்ட 7 லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 11 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    அதில் 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

    இந்த உரிமைத்தொகை, ரேஷன் கார்டில் உள்ள குடும்பத்தலைவிக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற முடியவில்லை.

    எனவே தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் வருகிற 29-ந்தேதி முதல் இந்த உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பெண்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத்திற்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை, மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கான முகாம் தமிழகம் முழுவதும் 29-ந்தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தகுதி வாய்ந்த சில குடும்பத் தலைவிகள் இன்னும் இதில் இணையாமல் உள்ளனர்.
    • அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட சிலர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட் டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி யன்று அவரவர் வங்கிக் கணக்கில் இந்த உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த சில குடும்பத் தலைவிகள் இன்னும் இதில் இணையாமல் உள்ளனர்.

    இதுவரை மூன்று கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு தகுதி வாய்ந்த பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், தகுதி பெறாதவர்களை கண்டறிந்து அதில் சிலரை நீக்கமும் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் மாதம் ரூ.1000 கிடைக்காத பெண்கள், எங்களுக்கும் மாதம் ரூ.1000 வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.

    இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூன் மாதம் 4-ந்தேதி (அடுத்த மாதம்) மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் விடுபட்ட பெண்கள் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக இத்திட்டத்தில் பணியாற்றிய தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் எங்கெங்கு நடத்த வேண்டும் என்ற விவரங்களும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் தற்போது குதூகலத்தில் உள்ளனர்.

    ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் இணையலாம்.

    அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட சிலர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை.

    சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1.14 கோடி பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
    • 9000 இடங்களில் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

    கலைஞர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்தால் தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் கூறியதாவது:

    * மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியான அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும்.

    * 1.14 கோடி பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    * மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    * கலைஞர் உரிமைத்தொகை பெற ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.

    * மக்களுடன் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் ஜூனில் 4-ம் கட்டமாக 9000 இடங்களில் முகாம் நடத்தப்படும்.

    * 9000 இடங்களில் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

    * தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் உரிமைத் தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    • எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அங்கு உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2002-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டதிற்கு பொது வினியோக நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலை கடை அமைந்திருக்கும் விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்.

    குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்ப தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

    குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்ப தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

    திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர்.

    ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க செய்யலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.

    5 ஏக்கருக்கு குறைவாக நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புஞ்சை நிலம் வைத்துள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

    பொருளாதார தகுதிகளுக்காக தனியாக வருமான சான்று அல்லது நில ஆவணங்களை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க தேவையில்லை.

    விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ஆண்டுக்கு ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டினால் உரிமைத்தொகை பெற இயலாது.

    அதேபோன்று ஆண்டு வருமானமாக ரூ.2½ லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துவர்களும் விண்ணப்பிக்க இயலாது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் இதில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர) அதாவது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உரிமைத்தொகை பெற முடியாது.

    சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் விண்ணப்பிக்க இயலாது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

    இவர்கள் திட்டத்தின் பிற தகுதிகளை பூர்த்தி செய்து, எந்தவித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லையெனில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

    இவ்வாறு வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

    • செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
    • இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். பல்வேறு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக பயனாளிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ரேஷன் கடை அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய திட்டம்.

    இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கூட்டம் இது.

    தலைமுறை தலைமுறையாக பயனளிக்கப் போகும் திட்டம் இது.

    சமூக நீதி என்ற கோட்பாட்டுடன் இந்த அரசு செயல்படுகிறது.

    பெண்களின் உழைப்பு ஆண்களின் உழைப்புக்கு நிகராகவே இருக்கிறது.

    செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஒரு கோடி விண்ணப்பங்களை ரேஷன் கடைகள் மூலம் விநியோகித்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

    உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் இத்திட்டம் பயனாளிகளைச் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சாலையோரம் வசிப்பவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    ×