என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக முதலமைச்சர்"
- கீழடி அகழாய்வு அறிக்கையை இன்று வரை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது.
- 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர்.
நெல்லையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பொருநை, தமிழரின் பெருமை; இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. தெற்கில் இருந்துதான் வரலாற்றை எழுத வேண்டும்
என்ற நமது கூற்றுக்கு சான்றாக உள்ளது.
கீழடி அகழாய்வு அறிக்கையை இன்று வரை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது.
கீழடி, பொருநை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட வேண்டும்.
தனித்துவமான தமிழர்களின் வரலாற்று பெருமையை வெளிக்கொணரும் எந்த ஆய்வும் நடைபெறக்கூடாது என மத்திய அரசு தடுக்கிறது.
இல்லாத சரஸ்வதி நதி நாகரீகத்தைத் தேடி அலைவோருக்கு, கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரியவில்லை. அதற்காக நாம் விட்டுக் கொடுக்க முடியுமா? 2000 ஆண்டுகால சண்டை இது, தோற்றுப் போக மாட்டோம்.
100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கியது குறித்து, போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி மூச்சு கூட விடவில்லை.
காந்தியின் பெயரை நீக்கியதுடன், 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
- நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.
தென்னிந்தியாவின் ஆகஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவ னங்கள் அதிகம் உள்ளன.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய, மாநில அளவில் நெல்லை மாவட்டம் கல்வியில் சாதனை படைத்து வருகிறது. உயர் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளும் நெல்லையில் அதிகமாக உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள், விஞ்ஞானிகள் என பலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயர் அறிவியல் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க பாளையங்கோட்டையில் அண்ணா, கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்று அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் மாணவ-மாணவிகள், போட்டி தேர்வாளர்கள், உயர் கல்வி கற்பவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டுமென்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார். மேலும் முதலமைச்சரிடமும் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து நூலகம் அமைப்பதற்காக பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு தேர்வு செய்தார். அந்த இடத்தில் நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அங்கு 3 ஏக்கர் நிலத்தில் 69 ஆயிரத்து 414 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைப்பதற்கு இடம் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நூலகம் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இதில் உயர் கல்வி கற்பதற்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்கள், போட்டி தேர்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அரங்கம், மாநாட்டு கூடம் வசதி, குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் படிப்பதற்கு தனி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெறுகிறது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்றே அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படு கிறது. இங்கு போட்டித் தேர்விற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகிறது. இந்த நூலகம் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டுக்கு மேலும் ஒரு பெருமையை சேர்க்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
- ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம்.
நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் கட்டிடத்தில் 1,585 பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கொற்கை கட்டிடத்தில் பாண்டியர்களின் கடல் வணிகம், முத்துக்குளித்தல் தொடர்பாக பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிவகளை கட்டிடத்தில் 5,300 ஆண்டுக்கு முந்தைய இரும்பு உருக்கும் தொழில்நுட்பம், நெல் மணிகள், பழங்கால பொருட்களை காணலாம்.
தமிழர்களின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம். பொருநை அருங்காட்சியகத்தில் கடல் வழி வணிகம், முத்துக்குளித்தல் போன்றவற்றை திரைப்பட பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் காணலாம்.
பண்டைய தமிழர்களின் பாரம்பரிய முறையில் முற்றம், தாழ்வாரம் அமைத்து பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் திறந்தவெளி திரையரங்கு, மூலிகை தோட்டம், கைவினைப்பொருட்கள் விற்பனையகம் உள்ளது.
மலையடிவாரத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளதால் அங்கிருந்து நெல்லை மாநகர் அழகை பார்க்கும் வசதியும் உள்ளது.
- சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.
- சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைவரும் ஒற்றுமையாக ஒருவர் மீது ஒருவர் அன்போது இருக்க வேண்டும்.
வெறுப்புணர்வு பாவங்களை செய்ய தூண்டும்; அன்பு என்பது அத்தனை பாவங்களை போக்கும்.
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்கள் ஒருதாய் வயிற்று பிள்ளையாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும்.
சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.
சிறுபான்மையினர் நலனில் எப்போதும் உண்மையான அக்கறை கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
ராமநாதபுரம் மூக்கையூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த புனித யாக்கோபு தேவாலயம் ரூ.1.42 கோடியில் புனரமைக்கப்படும்.
தமிழக அரசின் அணுகுமுறையால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 1,439 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 11 மாவட்டங்களில் ரூ.597 கோடியில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள 16 தேவாலயங்களில் ரூ.2.16 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கூடுதலாக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் மூலம் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளும் காலை உணவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்.
- கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நெல்லைக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்திருந்த குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் 3,200 ஆண்டுகால பழமையான நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் அமைப்பு.
- நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்படத்துடன் வடிவமைப்பு.
நெல்லையில் திறக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில்,"பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. அனைவரும் அணிஅணியாக வருமாறு" அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-
பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் 3,200 ஆண்டுகால பழமையான நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், சிவகளையில் கிடைத்த இரும்பு கருவிகளை அருங்காட்சியகத்தில் காணலாம்.
பொருநை ஆற்றங்கரையோரம் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலைகளை திரையில் காணும் வகையில் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்படத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழடி நமது தாய் மண், பொருநை தமிழர்களின் பெருமை என்பதை பறைசாற்றுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை.
- கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்.
பேராசிரியர் க.அன்பழகனின் 103-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
கழகம் எனும் கலத்தைப் புயல்கள் தாக்கியபோதெல்லாம் தலைவர் கலைஞரின் பக்கத்துணையாய் நின்று கரைநோக்கிச் செலுத்திய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாள்!
என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடையும் ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை.
கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்த பேராசிரியர் பெருந்தகை ஊட்டிய திராவிட இனமான உணர்வோடு முன்செல்கிறேன், கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது.
- நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.
பின்னர் அவர் மேடையில் உரையாற்றியதாவது:-
மாஸா, கெத்தா இணைஞரணி சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ள டிராவிடியன் ஸ்டாக் அனைவருக்கும் நன்றி.
நிகழ்ச்சிக்கு வந்துள்ள இஞைர்களை பார்த்ததும் 50 ஆண்டுகள் பின்னால் சென்றதபோல் உணர்கிறேன். நிகழ்ச்சிக்கு வந்துள்ள திமுக இளைஞர்களின் எனர்ஜி எனக்கு டிரான்பராகிவிட்டது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞராக இருந்தபோது திமுக இளைஞரணியை வளர்க்க தமிழகம் முழுவதும் பயணம் செய்தேன்.
கிராமம் கிராமமாக திண்ணை பிரசாரம் பொதுக்கூட்டம் என மக்களை வரவழைத்து திமுகவை வளர்த்தெடுத்தேன்.
திமுகவை பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது அவருக்கு வயது 40. உழைத்து, வளர்க்கப்பட்ட இயக்கத்திற்கு புது ரத்தம்போல இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
- புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட 2ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் பேசிய பெண்களின் பேச்சை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் உள்ளத்தில் இருந்து பேசிய அனைவருக்கும் நன்றி.
தனது 100 வயதில் பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் கிருஷ்ணம்மாள்.
2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முன்னோடி திட்டங்களை செயல்படுத்த தொடங்கினேன்.
நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்று உள்ளது. வரலாற்றை திருத்தி எழுதக் கூடிய திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது.
திராவிட மாடல் அரசின் பல்வேறு அரசுத்திட்டங்களால் பலர் பயன் அடைந்து வெற்றி பெற்றுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வெற்றியின் உச்சம் அண்டை மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தான்.
மகாராஷ்டிரா, சத்தீர்கர், கர்நாடகா உள்பட 10 மாநிலங்களில் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்டம்.
- விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கம்.
தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறுகின்றனர்.
இதில், விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தால் மேலும் 17 லட்சம் பேர் உரிமைத்தொகையை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
- சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.
அரசு பள்ளிகளில் போதிய கட்டிடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உருவாகியுள்ளதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
பெற்றோர்களின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதில் எல்லாம், தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
ஆட்சிக்கு வந்த உடன், 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சி முடியப் போகும் தருணத்திலும் கூட, எந்த மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளார்கள் என்பதைக் கூற மறுத்து வருகிறார்கள். இந்த அழகில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.
"Out of Contact" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வகுமார் இருந்தார்.
- கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ரெ.மகேஷ், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார் த.வெ.க. தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் ஆவார்.
பின்னர் பி.டி. செல்வகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை சிறப்பாக ஆண்டு கொண்டிருக்கிறார். தி.மு.க.வின் கட்டமைப்பு என்னை ஈர்த்ததால் நானும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகளும் தி.மு.க.வில் இணைந்து உள்ளோம்.
விஜய் மக்கள் இயக்கத்துக்கு நான் ஒரு தூணாக இருந்து பணியாற்றினேன். அதில் புதிது புதிதாக உள்ளே வந்தவர்களால் அங்கு என்னை போன்றவர்களை பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
விஜய் மக்களையும், ரசிகர்களையும் சரியான படி வழி நடத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வாரா என்பது எனக்கு தெரியவில்லை.
விஜய்யிடம் நல்ல கூட்டமும் இருக்கிறது. தீய கூட்டமும் இருக்கிறது. தீய கூட்டம் நல்லவர்களை வெளியே தள்ளிவிடும். சுற்றி இருப்பவர்கள் சரியாக அமையாவிட்டால் புகழ் பெற்றவர்களை கூட வேறு திசைக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
சினிமா வேறு, அரசியல் வேறு. நிலவு கொஞ்ச நாள் தான் இருக்க முடியும். ஆனால் சூரியன் என்றும் இருக்கும். அதன் பிரகாசம் மக்களுக்கு நல்லது. அதனால் தான் நான் சூரியன் பக்கம் வந்திருக்கிறேன்.
விஜய் சிறப்பாக செய்தால் எனக்கு சந்தோசம் தான். 27 ஆண்டுகள் உழைத்து உள்ளேன். இப்போது வந்தவர்களால் வேதனையை அனுபவித்தேன். த.வெ.க.-வில் தலைமை சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தொண்டர்களை வழி நடத்தமுடியும். விஜய் நல்லபடியாக வர வேண்டும் என்பது எனது ஆசைதான். ஆனால் எனது பயணத்துக்கு அது சரியான இடம் இல்லை. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. நடிகர், நடிகைகள் எங்கு வந்தாலும் கூட்டம் கூடும். விஜய் ஒரு நிலவு அவரை மக்கள் ரசிக்க மட்டும்தான் முடியும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் 224 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






