நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், நல்லக்கண்ணு உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com