என் மலர்
நீங்கள் தேடியது "Nallakannu"
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
- இந்த கூட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இதை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா ஸ்டேடியம் அமைந்துள்ள ஜீவா சிலை முன்பு மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த மௌன அஞ்சலி இரங்கல் கூட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம், காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, சிஜயூடி நிர்வாகி நூர்முகமது, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நாம் தமிழர் கட்சி மரியஜெனிபர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பகலவன், தமிழக வெற்றி கழகம் சார்பில் எஸ் ஆர் மாதவன் உட்பட அனைத்து கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
- சென்னை மருத்துவக் கல்லூரியில் உடல் ஒப்படைக்கப்பட்டது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணு வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுகளுக்கு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் நேற்று உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் 1:55 மணிக்கு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், நடிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இன்றுகாலை வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குடும்பத்தினர் அவரது உடலை முறைப்படி சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம், மருத்துவ மாணவர்களின் கல்விக்காக ஒப்படைத்தனர்.
- பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
- இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தனது 101-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார். சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்த நல்லகண்ணு எளிமையின் சிகரமாக விளங்கியவர் ஆவார்.
பணம், பொருள் என எதற்கும் ஆசைப்படாமல் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து மிகவும் சாதாரணமாக எளிய வாழ்க்கையை வாழ்ந்துள்ள நல்லகண்ணு அனைவருக்கும் முன்னுதாரணமாகவே போற்றப்பட்டு வருகிறார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு முதுமை காரணமாக உயிர் இழந்ததை தொடர்ந்து தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நல்லகண்ணு உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய்யும் நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ்அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நல்லகண்ணுவை பற்றி உருக்கமான கருத்துக்களையும் தெரிவித்தார்.
கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சத்யராஜ், நாசர், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், திரைப்பட இயக்குநர்கள் ரவிக்குமார், வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் திரை உலகை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ எம்.பி., தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் இன்று நல்ல கண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது வைகோ நல்ல கண்ணுவின் புகழை போற்றும் வகையில் கைகளை உயர்த்தி கோஷங்களையும் எழுப்பி கண்ணீர் வடித்தார். இதனை தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நல்லகண்ணு தனது உடலை ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் உயிர் இழந்தவுடன் நேற்று உடனடியாக பதப்படுத்தப்பட்டது. இதன் பிறகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணி வரையில் நல்லகண்ணு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக, 'வீர வணக்கம் வீர வணக்கம் ! வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்! தகைசால் தமிழருக்குச் செவ்வணக்கம்!' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட மற்றவர்கள் அதனை கூறினர். இதன் பிறகு நல்லகண்ணுவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊர்வலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியை சென்றடைகிறது.
பின்னர் முறைப்படி நல்லகண்ணுவின் உடல் ஆஸ்பத்திரி தலைமை நிர்வாகிகளிடம் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.
- நல்லகண்ணு நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
- தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
- அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.
கன்னியாகுமரி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் இயக்கங்களின் முன்னோடி, எளிமையின் உருவகமாக வாழ்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
வாழ்நாள் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஓய்வின்றி போராடிய அவர், அதிகாரத்தில் அல்ல, மக்களின் இதயங்களில் தங்கிய தலைவர். அரசியல் என்பது அதிகாரம் மட்டுமல்ல, அது மனிதநேயப் பொறுப்பு என்பதை தனது வாழ்வால் நிரூபித்தவர்.
எளிமையான வாழ்க்கை, தெளிவான கொள்கை, உறுதியான நிலைப்பாடு, இவை அனைத்தும் நல்லகண்ணு அவர்களின் அடையாளங்கள். அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.
அவரது மறைவு குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் மட்டுமல்ல, சமூகநீதியை நம்பும் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பு.
அவரது சேவைகளை நினைவு கூர்ந்து, அவரது இலட்சியங்களை முன்னெடுத்து செல்லுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அவரது சேவைகளுக்கு முன் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்
- பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், நடிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அய்யா நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியுடன் நின்றார்.
- அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல்கொடுத்த அவருடைய முயற்சிகளுக்காக எப்போதும் நினைவு கூரப்படுவார்.
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தியாகச் செம்மல் தோழர் நல்லக்கண்ணு, வயதுமுதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு சிகிச்சைப் பெற்றுவந்தநிலையில் இன்று காலமானார். இவரது மறைவு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இரங்கல்களை பதிவுசெய்து வருகின்றனர்.
கட்சியின் தலைமை அலுவகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நல்லக்கண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி,
"அடிதட்டு மக்கள், தொண்டர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல்கொடுத்த அவருடைய முயற்சிகளுக்காக எப்போதும் நல்லகண்ணு அவர்கள் நினைவு கூரப்படுவார். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவர். அதேபோல், அவரது எளிமை மிகவும் குறிப்பிடத்தக்கது. எனது ஆறுதல்கள் எப்போதும் அவரது குடும்பத்தினருடனும், தொண்டர்களுடனும் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி,
"தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை நேர்மை, எளிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது இந்த வாழ்க்கை ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கானது.
கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக (90 ஆண்டுகள்), அவர் நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியுடன் நின்றார். அவருடைய குடும்பத்தினருக்கும், சகாக்களுக்கும் மற்றும் எண்ணற்ற தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
- சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
- அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், நல்லக்கண்ணு உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- எளிய வாழ்க்கை வாழ்ந்த உண்மையான பொதுவுடைமைவாதி..!
- என் மீது பேரன்புகொண்டு வாழ்த்தி, நல்ல நூல்களைப் பரிசளித்த பேரறிஞர்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நல்லக்கண்ணு மறைவுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நூற்றாண்டு கண்ட தம்முடைய அப்பழுக்கற்ற தூய பொதுவாழ்வில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
பதின்ம பருவத்திலேயே பொதுவுடைமை தத்துவத்தில் பெரும் ஈர்ப்பு கொண்டு, 18 வயதிலேயே பொதுவுடைமை கட்சியில் இணைத்துக்கொண்டு பயணித்த பொதுவுடமை பேராசான்..!
வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து, ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்..!
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி..!
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த உண்மையான பொதுவுடைமைவாதி..!
சாதிய ஒடுக்குமுறைக்கும், சமூக தீண்டாமைக்கும் எதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுத்து சமத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்ட சாதி ஒழிப்பு போராளி..!
தேர்தலின் வெற்றி தோல்விகள் மக்கள் தொண்டிற்கும், தூய பொதுவாழ்விற்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்பதை தம்முடைய அயராத அரசியல் பணிகளால் உலகிற்கு உணர்த்திய மாண்பமை தலைவர்..!
ஐயா அவர்களை நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என் மீது பேரன்புகொண்டு வாழ்த்தி, நல்ல நூல்களைப் பரிசளித்த பேரறிஞர்..!
பெருமதிப்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தூய்மையான அரசியலுக்கும், அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், இந்தியப் பொதுவுடைமை கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு புலிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கச்செய்து, ஐயாவின் மறைவால் ஏற்பட்டுள்ள துயரை நாம் தமிழர் கட்சி பகிர்ந்துகொள்கிறது.
பொதுவுடைமை பிதாமகன், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
- அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நல்லக்கண்ணு மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்.
- நல்லகண்ணுவின் சேவை என்றும் நினைவு கூறப்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நல்லக்கண்ணு மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நேர்மையான அரசியல்வாதி..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கியவர் நல்லகண்ணு
லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்; பொதுமக்களின் நலனுக்காக போராடிய நல்லகண்ணுவின் சேவை என்றும் நினைவு கூறப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






