நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி

தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com