என் மலர்
நீங்கள் தேடியது "Naam tamizhar party"
- தமிழ் இனத்தின் மீது தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
- பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வடவர்கள்தான் என்பது பிரதமருக்குத் தெரியுமா?
"தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடியின் பொய்ப் பரப்புரை, இனவெறி பாகுபாட்டின் உச்சம். தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி" என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி!
தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும்.
அற்ப அரசியல் இலாபத்திற்காக பிரதமர் மோடி தமிழர்கள் மீது வரலாற்று பெரும்பழியைச் சுமத்தியுள்ளது இனவெறி பாகுபாட்டின் உச்சமாகும். பிரதமர் மோடி தமிழ் இனத்தின் மீது தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே ஒடிசா மாநிலத் தேர்தலின்போது தமிழர்களைத் திருடர்கள் என்றும், ஓடிசாவை தமிழன் ஆளலாமா? என்றும் இன வெறுப்பை விதைத்த பிரதமர் மோடி, அதன் நீட்சியாக தற்போது தமிழர்களை வன்முறையாளர்களாக, கட்டமைப்பது, தமிழினத்தை இழிவுப்படுத்தும் கொடுஞ்செயலாகும். வந்தாரை வாழ வைத்ததோடு, ஆளவும் வைத்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகந்தழுவி நேசித்து நின்ற ஓர் இனத்தை திருடர்கள், வன்முறையாளர்கள் என குற்றம் சுமத்துவது தமிழ் இனத்திற்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக வெளியான காணொளிகள் அனைத்தும் பொய்யானது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது பிரதமர் மோடிக்கு தெரியாதா? உங்கள் கூட்டணியின் முதல்வர் நிதிஷ்குமார் அரசு அனுப்பிய ஆய்வுக்குழு தமிழ்நாட்டில் அப்படி எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தது தெரியாதா?
அப்போலி காணொளிகளைப் பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியாதா? பீகார் சட்டமன்றத்திலேயே அவை போலிக் காணொளிகள் என்று ஒப்புக்கொண்டதுதான் பிரதமருக்கு தெரியாதா? அவையெல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு அவதூறை பிரதமர் மோடி பரப்புவது தமிழர் விரோதப்போக்கன்றி வேறென்ன?
உண்மையில் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதில்லை. பீகாரிகள் உள்ளிட்ட வடமாநிலத்தவரால் தமிழர்கள்தான் தாக்கப்படுகின்றனர் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியுமா? தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வடவர்கள்தான் என்பது பிரதமருக்குத் தெரியுமா?
கலவரம் செய்தவர்களைக் கட்டுப்படுத்தச் சென்ற தமிழ்நாடு காவல்துறையினரையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கினர் என்பதாவது பிரதமருக்கு தெரியுமா? அப்போதெல்லாம் பிகாரிகள் தமிழர்களைத் தாக்குகின்றனர் என்று பேசாத பிரதமர் மோடி, வடவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் வன்முறைகள் தவறு என்று பேசாத பிரதமர் மோடி, தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற ஒரு பச்சை பொய்யைக் கூறுவது எதனால்? அற்ப தேர்தல் வெற்றிக்குத்தானே?
இராமநாதபுரத்தில் மீனவப்பெண் வடவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டபோது வாய் திறவாத மோடி, அம்பத்தூரிலும், ஈரோட்டிலும் தமிழகக் காவலர்களை வடவர்கள் தாக்கியபோது பேசாத பிரதமர் மோடி, வட மாநிலங்களில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழ்ப்பிள்ளைகள் வடவர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டபோது கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, வடமாநிலங்களில் விளையாடச் சென்ற தமிழக கபடி வீரர்கள், வடவர்களால் தாக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத மோடி, முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டு தொடர்வண்டி இருக்கைகளை ஆக்கிரமித்து வடவர்கள் அட்டூழியம் செய்தபோது அமைதி காத்த மோடி, ஆந்திராவில் 20 தமிழர்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், கேரளாவிலும் கர்நாடகாவிலும் தமிழர்கள் தாக்கப்பட்டு
அவர்களது உடைமைகள் பறிக்கப்பட்டபோதும், எல்லாவற்றுக்கும் மேலாக இன்றுவரை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும், சிறைப்படுத்தப்படுவதும் தொடர்வது குறித்து எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காத பிரதமர் மோடி, எந்தவொரு குற்றமும் செய்யாத தமிழர்களை மட்டும் வன்முறையாளர்களாக, திருடர்களாகக் கட்டமைப்பது தமிழர்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடு அன்றி வேறென்ன? இத்தனை காலமும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து பிளந்த பாஜகவும், பிரதமர் மோடியும், இனி அது எடுபடாது என்று தெரிந்தவுடன் வடவர்களின் வாக்குகளைப் பெற இந்தி பேசும் மக்களிடம் இனவெறியைத் தூண்டுகின்றனர்.
இந்தியப் பிரதமரின் பொய்ப்பேச்சு, தமிழர்களைத் திருடர்கள், வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் எண்ண வழிவகுக்காதா? இந்திய அரசமைப்பின் மீது உறுதியேற்று, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களுக்குமான பிரதமர் ஓர் இனத்தை மட்டும் குறி வைத்து பொய்யைப் பரப்புவது உலக அரங்கில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே இத்தகைய அவதூற்றைப் பரப்பி வருகிறாரா?
இதுதான் பிரதமர் மோடி தமிழர்களுக்குத் தரும் மதிப்பா? இதுதான் இந்திய நாடு பேணும் ஒற்றுமையா? கட்டிக்காக்கும் ஒருமைப்பாடா? வெட்கக்கேடு! தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டும் தமிழ் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பிரதமர் பெருமையாகப் பேசுவது அனைத்தும், தமிழர்களை ஏய்த்து அவர்களின் வாக்குகளைப் பறிக்கும் மலிவான தந்திரம் என்பது மீண்டும் தெளிவாகிறது. இதிலிருந்து இந்திய நாடும், பிரதமரும், அரசும், ஆட்சியாளர்களும் இந்தி பேசும் மக்களுக்கானது மட்டுமே என்பதும், தமிழர்கள் இந்நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்கள்தான் என்பதும் மீண்டும் மீண்டும் உறுதியாகின்றது. இதையெல்லாம் காணும் தமிழ் இளையோருக்கு இந்த நாட்டின் மீதும், அதன் ஆட்சி முறையின் மீதும் வெறுப்புதான் வருமே அன்றி எப்படி பற்று வரும்?
இனியும் பிரதமர் மோடியின் தமிழர்கள் மீதான வெறுப்புப் பேச்சு தொடருமாயின், அது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து, நாட்டினைப் பெரும் அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறேன்.
ஆகவே, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற இனவெறுப்பு பேச்சை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் ஒடிசா தேர்தலுக்காக தமிழர்களைத் திருடர்களாகவும், பீகார் தேர்தலுக்காக தமிழர்களை வன்முறையாளர்களாகவும் கட்டமைக்கும் பாஜகவுக்கு வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இழிசொல் உரைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கடும் கண்டனம்.
- மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது அரசியல் நாகரிகமற்ற செயல்.
அண்ணா, எம்ஜிஆரை இழிச்சொல் உரைத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மேடைகளில் சமத்துவம் கண்ட, அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் சமதர்ம திராவிட அரசியலை தமிழ்நாட்டின் நிர்வாக அரசியலாகக் கட்டமைத்த பேரறிஞர் அண்ணா அவர்களையும்,
அண்ணா வழி திராவிடம் எனும் உயரிய நோக்கில் அதிமுக
நிறுவி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பிற்குரிய தலைவராக, மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் தலைவராக விளங்கிய நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும்,
இழிசொல் உரைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கடும் கண்டனம்.
மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது துளியும் அரசியல் நாகரிகமற்ற செயல்.
தமிழர்களுக்கே உரித்தான அறத்தை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கொள்கையை, வளர்ச்சியை செதுக்கிய ஒப்பாரும் மிக்காரும் அற்ற நம் தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
- மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், விஜயின் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்," விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று கூறினார்.
மேலும் சீமான் கூறியதாவது:- நான் இப்போது மக்களை சந்திக்கிறேன். எந்த போராட்டத்தில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன்.
மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
மக்களை சந்திக்கிறது என்பது ரோடு ஷோ நடத்துறது இல்ல. கூட்டி வெச்சு பேசிட்டு போறது. மக்களை சந்திக்கிறது என்றால் மக்களின் பிரச்சனைகளை மக்களுக்காக மக்களோடு நிக்கிறது தான் மக்களை சந்திக்கிறது.
அப்படி சந்திக்கிறீர்களா? மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.
இது வேட்டையாட வர சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிஜஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு எதிராக ஆதாரமில்லாத அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
- பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
- 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.
இந்நிலையில், "வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு செயலியை தொடங்கி விஜய்க்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர்," 2026 தேர்தல் திருப்புமுனையாக அமையும். தேர்தல் திருப்புமுனையை நோக்கிதான் அனைவரும் பயணப்படுகிறோம்" என்றார்.
- இது லட்சிய கூட்டத்திற்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையில் நடக்கும் போர்.
- தமிழ் தேசிய இனத்தின் உரிமை கனமை கொண்டுள்ள சித்தாந்தமா? சினிமாவா?
சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் கூறுகையில்," இது லட்சிய கூட்டத்திற்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையில் நடக்கும் போர் என விஜயை மறைமுகமாக சண்டைக்கு அழைத்துள்ளார் சீமான்.
தமிழ் தேசிய இனத்தின் உரிமை கனமை கொண்டுள்ள சித்தாந்தமா? சினிமாவா? இதுதான் சண்டை" என சீமான் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.
- கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து போராட்டம்.
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெறும் என்றும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மாடு மேய்ப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேனி அடப்பாறையில் ஆக.3ம் தேதி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து மாடு மேய்க்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை சீமான் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குற்றம் தெரியாதபோதுதான் சிபிஐ விசாரணை தேவை.
- சிபிஐக்கு மாற்றப்பட்டதால் இதுவரை என்ன நன்மை நடந்திருக்கிறது.
திருப்புவனம், மடப்புரத்தில் அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
குற்றம் வெளிப்படையாக தெரிகிறது. நகை திருடினார் என்பது குற்றச்சாட்டு என்றால் ஏன் நகையை திரும்ப மீட்கவில்லை. ஏனென்றால் அவர் நகையை எடுக்கவில்லை என்று தானே அர்த்தம்.
அப்போ, பொய்யான குற்றச்சாட்டிற்கு நீ அடித்துக் கொன்று இருக்கிறாய்.
குற்றம் தெரியாதபோதுதான் சிபிஐ விசாரணை தேவை. இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது.
உங்கள் காவல்துறை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?.
சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து விசாரணையை சிபிஐக்கு மாற்றியதே எங்களை ஏமாற்றத்தான்.
சிபிஐக்கு எத்தனையோ வழக்குகள் மாற்றப்பட்டிருக்கிறது. சிபிஐக்கு மாற்றப்பட்டதால் இதுவரை என்ன நன்மை நடந்திருக்கிறது.
காவல்துறை முதலமைச்சரின் இலாகாவில் தானே இருக்கிறது. அப்போது, நேர்மையற்ற காவல்துறையின் தலைவர் நேர்மையற்றவர் தானே.
உங்களுடைய காவல்துறை நேர்மையாக விசாரிக்காது என்றால், அப்போது உங்களுடைய காவல்துறை நேர்மையற்றது.
நிகிதா மீது ஏன் இதுவரை விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த பிப்.17-ம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
மேலும், கருக்கலைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால், சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென வளசரவாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி போலீஸார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
நடிகை விவகாரத்தில் சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விவகாரம்- மோசடி, வல்லுறவு புகார் வழக்கை ரத்து செய்ய கோரும் சீமானின் மேற்குறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.
சிமானின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க நடிகைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொலை மிரட்டல் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார்.
- நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்தது.
அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.
இந்த நிலையில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன்.
- நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.
கடலூர் மாவட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சீமான்" சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்.. வரும் தேர்தலில் இனி என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன். சிவன் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள்.
நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன். தேர்தலில் ஏற்படும் தற்காலிக தோல்விக்காக நிரந்த வெற்றியை விடமாட்டோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைத்தால் செல்வேன். மேடையில் ஏறி பேசுவேன் நான் அங்கிருந்து வந்தவன் தான். அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியு்ள்ளது.
- வீடியோ ஆதாரங்களை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவிப்பு.
நீதித்துறையை அவமிதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது, சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக சீமான் பேச்சை கேட்கவில்லையா ? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா ? என்று சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் வீடியோ ஆதாரங்களை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.






