என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர்கள் பட்டியல்"

    • வீரப்பன் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியில் போட்டி.
    • எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினி என்பவர் நாதக சார்பில் போட்டியிடுகின்றார்.

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட மாநாட்டில் 117 பெண்- 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார்.

    அதன்படி, கும்மிடிப்பூண்டி- வழக்கறிஞர் தர், பொன்னேரி- பொறியாளர் ராஜாத்தி திருத்தணி- முனைவர் சந்திரன் ஆகியோர் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர்.

    ஆர்கே நகர்- வெண்ணிலா தாயுமானவன், பெரம்பூர்- வெற்றித்தமிழன், கொளத்தூர்- வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன் லூடர் சேத் போட்டியிடுகின்றனர்.

    இயக்குனர் மு.களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினி என்பவரும் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர்.

    வீரப்பன் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரவாயல்-ரேவதி, அம்பத்தூர்-சிலம்பரசன், மாதவரம்-கிருத்திகா ஏழுமலை, திருவொற்றியூர்-சத்யா பாஸ்கர்.

    அண்ணாநகர்- வழக்கறிஞர் சங்கர், விருகம்பாக்கம்-சந்தோஷ், சைதாப்பேட்டை-வித்யா, தி நகர்-அனுஷா விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அணைக்கட்டு- ரவிகுமார், கீழ்வைத்தியனாங்குப்பம்- கலையேந்திரி, குடியாத்தம்- இமலன் ஆகியோர் நாதக சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 சதவீதம் வாக்குகளை பெற்றுத்தந்த காரைக்குடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலிலும் சீமான் களம்காண்கிறார்.

    வாணியம்பாடி- முருகேசன், ஆம்பூர்- அப்சியா தௌபிக் பிக்ரத், ஜோலார்பேட்டை- சசி ரேகா, வந்தவாசி- கணேஷ், செஞ்சசி-கிருஷ்ணன், மயிலம்- விஜய் விக்ரம், திண்டிவனம்- பேச்சிமுத்து, ஏற்காடு- பழனிச்சாமி, ஓமலூர்- சிவசக்தி, சங்ககிரி- நித்யா அருண், சேலம் மேற்கு- சுரேஷ் குமார், மொடக்குறிச்சி- அருண், பெருந்துறை- லோகு, பவானி- மேனகாதேவி, அந்தியூர்- ஆனந்தி, சூலூர்- ராஜசேகர், கவுண்டம்பாளையம்- கலாமணி, கோவை வடக்கு- நர்மதா, தொண்டாமுத்தூர்- ரஜ்புநிஷா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    திருச்சி கிழக்கு- கிருஷ்ணசாமி, திருவெறும்பூர்- ஜல்லிக்கட்டு ராஜேஷ், லால்குடி- மதன், திட்டக்குடி-மகாலட்சுமி, விருத்தாசலம்- ஆனந்தி, நெய்வேலி- வீரமணி, பண்ருட்டி- பானுப்பிரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    வில்லிவாக்கம்- திருநங்கை ரோஷினி, திருவிக நகர்- பொறியாளர் ஜெகதீஷ் சந்தர், எழும்பூர்-சரண்யா, தாம்பரம்- தமிழ்ச்செல்வி, செங்கல்பட்டும்- அமுதா நம்பியானர், திரும்போரூர்-அம்பேத் ராஜன், செய்யூர்- சுவாதி லட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • அதற்கான ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    தொகுதிகள், வேட்பாளர் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே நிகழ்வில் அறிமுகப்படுத்தும் மக்களின் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழக சட்டசபையில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் சீமான் இன்று வெளியிட்டார்.

    • முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது.
    • 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.

    அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.

    மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள போட்டியாளர்களின் 2ம் கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.

    இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 60 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.

    இதில், அம்மாநில முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது. இது, பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தவாங் மாவட்டத்தின் கீழ் வரும் மூன்று தொகுதிகளில் இதுவும் ஒன்று. 

    இந்த 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.

    கடந்த திங்கள் அன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

    முன்னதாக 2019 மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 60 சட்டமன்றத் தொகுதிகளில் 57 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

     

    • சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.
    • நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.

    அதன்படி, சஹாரன்பூரில் மஜித் அலி, கைரானாவில் ஸ்ரீபால் சிங், முசாபர்நகரில் தாரா சிங் பிரஜாபதி, பிஜ்னூரில் விஜயேந்திர சிங், நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    ராம்பூரில் இருந்து ஜிஷான் கான், சம்பாலில் இருந்து ஷவுலத் அலி, அம்ரோஹாவில் இருந்து மொஸாஹித் ஹுசைன், மீரட்டில் இருந்து தேவ்ரத் தியாகி மற்றும் பாக்பத்தில் இருந்து பிரவீன் பன்சால் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    கட்சி வேட்பாளராக கவுதம் புத்த நகர் தொகுதியில் ராஜேந்திர சிங் சோலங்கியும், புலந்த்ஷாஹர் (எஸ்சி) தொகுதியில் கிரீஷ் சந்திர ஜாதவ், அயோன்லா தொகுதியில் அபித் அலி, பிலிபிட்டில் அனிஸ் அகமது கான் என்ற பூல் பாபு, ஷாஜஹான்பூரில் தோதாரம் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
    • அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி லத்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அரியானா மாநிலத்தில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தேர்தலை முன்னிட்டு, பாஜக ஆட்சியை தக்கவைக்கும் வகையில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி அரியானாவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலுக்கான தனது 67 வேட்பாளர்களின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளத.

    இதில், லத்வா தொகுதியில் முதல்வர் நயாப் சிங் சைனி போட்டியிடுகிறார்.

    மேலும், அம்பாலா கான்ட் தொகுதியில் அனில் விஜ், ராட்டி தொகுதியில் சுனிதா துகல், பஞ்ச்குலா தொகுதியில் கியான் சந்த் குப்தா, ஜகத்ரி தொகுதியில் கன்வர் பால் குர்ஜார், ஆதம்பூர் தொகுதியில் பவ்யா பிஷ்னோய், சோஹ்னா தொகுதியில் தேஜ்பால் தன்வார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    பாஜக தவிர, ஜனநாயக் ஜனதா கட்சி- ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் வரும் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது.

    முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, அவர் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் உச்சன கலன் தொகுதியில் போட்டியிடுகிறார். பட்டியலில் 15 வேட்பாளர்கள் ஜேஜேபியை சேர்ந்தவர்கள், நான்கு பேர் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஏஎஸ்பி ஆகும்.

    • ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 தொகுகளில் 31 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.

    மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.

    மொத்தமுள்ள 70 தொகுகளில் 31 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

    டெல்லி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் எம்பியான சந்தீப் தீக்ஷித் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×