என் மலர்
நீங்கள் தேடியது "state assembly election"
- சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர்.
- காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.
இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர். காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் விஜய் வேறுதேதியில் பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி
டிசம்பர் 4-ந் தேதிக்கு பதில் வேறு தேதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்குமாறு விஜய் தரப்புக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் கார்த்திகை தீபம், ஜெயலலிதா நினைவு தினம், பாபர் மசூதி இடிப்பு தினம் வரிசையாக உள்ளதால் வேறு தேதியில் பிரச்சாரம் மெற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
- கரூரில் நடந்த பெரும் துயர சம்பவத்தில் இருந்து தலைவர் இன்னும் மீளாமல் இருக்கிறார்.
- சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு எங்களது விருப்பத்தை விஜய்யிடம் தெரிவித்தோம்.
சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.
இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, கரூரில் நடந்த பெரும் துயர சம்பவத்தில் இருந்து தலைவர் இன்னும் மீளாமல் இருக்கிறார்.
சென்னையில் நடந்த கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு எங்களது விருப்பத்தை விஜய்யிடம் தெரிவித்தோம். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் எப்போது பிரசாரத்தை தொடங்குவார் என்பதை கட்சி தலைமையும்,
பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். கட்சி தலைமை அறிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்.
எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது? அதற்கான போலீஸ் அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகள் சேலத்திற்கு வந்து ஆலோசனை வழங்குவார்கள். அதற்கான தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்றனர்.
இந்த நிலையில், சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர். காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் மீண்டும் பிரசாரத்தை எப்போது தொடங்குவார் என்று அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2 தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைமுன்னிட்டு அதிமுக சார்பில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 5 மற்றும் 6ம் ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, வரும் 8ம் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 9ம் தேதி நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய தொகுதிகளிலும், வரும் 10ம் தேதி அன்று ஈரோடு மாநகர், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கில் இபிஎஸ் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முன்னதாக, குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.
இதனால், அதிமுகவின் தேர்தல் பரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளது.
- சிர்மோர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகிறார்.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் பாஜக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. ஆம் ஆத்மியும் களத்தில் குதித்துள்ளது. இதனால் 3 முனை போட்டி நிலவுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரம் செய்து பாஜகவுக்கு வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் பிரியங்கா தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
நிறைவு நாளில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளது. சிர்மோர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகிறார். அதே நேரத்தில் அவர் ஷிம்லாவில் வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிக்கிறார்.
- வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை ஆற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
- முதல் முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது.
தேர்தலில், 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை ஆற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல் முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இரு மாநிலங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
- நாகாலாந்து, மேகாலயாவில் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்று முடிந்தது.
மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இரு மாநிலங்களிலும் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்று முடிந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் பிற்பகல் 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, 3 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 72.99 சதவீதமும், மேகாலயாவில் 63.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.
- மேகாலயா மாநிலத்தில் இதுவரையில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதால் இழுப்பறியில் உள்ளது.
வடகிழக்கு பகுதியில் 8 மாநிலங்கள் உள்ளன. இதில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது.
60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி (ஐ.பி.எப்.டி.) போட்டியிட்டது. பாஜகவை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் முதல் முறையாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவியது.
இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. பா.ஜனதா கூட்டணி 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு- காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்றவை பூஜ்ஜியம் இடத்தில் உள்ளது.
60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
என்.டி.பி.பி. கட்சி 40 தொகுதிகளிலும் பா.ஜனதா 19 தொகுதிகளிலும் களம் இறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்.பி.எப்.) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தேசிய மக்கள் கட்சி 12 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 12 இடங்களிலும் களம் இறங்கின. இங்கு பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அந்த கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. நாகா மக்கள் முன்னணி வெற்றி பெறவில்லை. மற்ற கட்சிகள் 21 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
அகுலுடோ தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.
இந்நிலையில், திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.
மேகாலயா மாநிலத்தில் இதுவரையில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதால் இழுப்பறியில் உள்ளது.
- காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
- 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், தெலங்கானாவில் சட்டசபை தேர்வதுலக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
- டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதலமைச்சரை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்கவுள்ளார் என்றும் வரும் 7ம் தேதி ஐதராபாத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அகிய இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பார்வையாளர்களின் அறிக்கையை பரிசீலித்து, மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, தெலுங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்ந்தெடுத்து காங்கிரஸ் தலைவர் முடிவு செய்துள்ளார்" என்றார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தீபா தாஸ்முன்ஷி, அஜோய் குமார், கே.ஜே. ஜார்ஜ், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே உள்ளிட்ட 4 பார்வையாளர்களை கட்சி நியமித்துள்ளது.
எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள், துணை முதல்வர்கள் இருப்பார்களா என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
- முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது.
- 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள போட்டியாளர்களின் 2ம் கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 60 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.
இதில், அம்மாநில முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது. இது, பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தவாங் மாவட்டத்தின் கீழ் வரும் மூன்று தொகுதிகளில் இதுவும் ஒன்று.

இந்த 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.
கடந்த திங்கள் அன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
முன்னதாக 2019 மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 60 சட்டமன்றத் தொகுதிகளில் 57 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- சட்டசபை தேர்தலில் தங்களின் அரசியல் நிலைப்பாடு மாறுமா ? என்று கேள்வி.
- செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தங்களின் அரசியல் நிலைப்பாடு மாறுமா ? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
பிரச்சனையின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை கேட்கிறோம். ஆனால், பிரச்சனைகளை தீர்த்து வைக்காத, பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயலாத, தீர்த்து வைப்பதற்கான காரணங்களை ஆராயததால் நாம் நிச்சயமாக நமது முடிவையும் மாற்ற வேண்டிய தேவை இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால், இது ஒரு எச்சரிகை தான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் இன்று தோ்தல் நடைபெற்றது.
- முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தோ்தல் நடைபெறுகிறது.
ஜம்மு- காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டசபைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தோ்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் இன்று (புதன்கிழமை) தோ்தல் நடைபெற்றது.
இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன. மொத்தம் 219 வேட்பாளா்கள் இத்தோ்தலில் களத்தில் நின்றனர். இதில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள்.
தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறு வதை உறுதிசெய்ய பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. துணை ராணுவப் படையினா், ஜம்மு- காஷ்மீா் ஆயுதப் படையினா், போலீசார் ஆகியோா் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
பின்னர், முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ந்தேதியும், 3-ம் கட்ட மாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ந்தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது. அடுத்த மாதம் (அக்டோ பா்) 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.






