என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இ.பி.எஸ் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்- அ.தி.மு.க. அறிவிப்பு
- மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2 தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைமுன்னிட்டு அதிமுக சார்பில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 5 மற்றும் 6ம் ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, வரும் 8ம் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 9ம் தேதி நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய தொகுதிகளிலும், வரும் 10ம் தேதி அன்று ஈரோடு மாநகர், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கில் இபிஎஸ் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முன்னதாக, குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.
இதனால், அதிமுகவின் தேர்தல் பரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






