search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "EPS"

  • போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு.
  • சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன என தெரிவித்தார்.

  சேலம்:

  சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் திரண்டனர். ஆனால், சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன.

  நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கிய பிரதிகள் மாநாட்டு திடலில் கிடந்தன. அவை குப்பைத்தொட்டிக்கு சென்றன. இவர்களா நீட் தேர்வை ரத்து செய்வார்கள். அவர்கள் ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  இந்நிகழ்வு நீட் தேர்வில், தி.மு.க. எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை ஸ்டாலினும், அவரது மகனும் அரங்கேற்றுகின்றனர்.

  மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. தீர்மானங்களில் எந்த தீர்மானமும் இல்லை. திட்டமிட்டு மக்களையும் ஊடகத்தையும் ஏமாற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கின்றனர்.

  வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளன. அது எப்படி சரியாக இருக்கும்? அந்தக் கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம். இன்னும் எத்தனை கட்சிகள் வெளியே செல்லும் என்பதைப் பார்ப்போம்.

  கோவில்களை கட்டி வாக்குகளைப் பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறதா? ராமர் கோவில் கட்டியதால் பா.ஜ.க. எப்படி வெற்றி பெறமுடியும்?

  பாராளுமன்ற தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும்.

  5 ஆயிரம் பஸ்கள் வாங்குவோம் என ஒவ்வொரு ஆண்டும் சொல்கின்றனர். ஆனால் ஒரு பஸ் கூட வாங்கியதாக தெரியவில்லை. போக்குவரத்து கழகம் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பணி ஆரம்பமாகி உள்ளது என தெரிவித்தார்.

  • பாலிகடை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் எடப்பாடி பழனிசாமி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
  • 150க்கும் மேற்பட்ட பானைகளில் பிரம்மாண்டமாக முறையில் பொங்கல் விழா நடைபெற்றது.

  சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் தனது தை பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். மக்கள் எடப்பாடி பழனிசாமியை மேளதாளத்துடன் ஓமலூர் பாலிகடை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழி எங்கும் பெண்கள் மலர்தூவி உற்சாக வரபேற்பு அளித்தனர்.

  150க்கும் மேற்பட்ட பானைகளில் பிரம்மாண்டமாக முறையில் பொங்கல் விழா நடைபெற்றது.

  பொங்கல் விழாவில் போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

  சேலம் திண்மங்கலம் பகுதியில் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தைபொங்கல் போல தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற நேரம் வந்துவிட்டது, தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும். மக்கள் நமது கூட்டணியை ஆதரிக்க வேண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • கொடநாடு வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்ய ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
  • இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

  சென்னை:

  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019-ல் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

  அந்த மனுவில், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவும், வீடியோ வெளியிடவும் தடை விதிக்கும்படியும், ரூ.1.10 கோடி இழப்பீடும் கோரியிருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்ய சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

  இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக ஜனவரி 30 மற்றும் 31ல் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

  மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்களித்ததை எதிர்த்த மேத்யூ சாமுவேலின் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

  • பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
  • திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

  இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) லெ.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

  திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

  பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் கூறியதாவது:-

  பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

  நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றிய 10 ஆண்டு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

  உலக நாடுகள் நம் இந்தியாவின் முன்னேற்றத்தை கண்டு பிரம்மித்து இருக்கிறது.

  பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் உள்ளது.

  ஈபிஎஸ் குறித்த ரகசியத்தை தற்போது வெளியே சொல்ல இயலாது தெரிய வேண்டிய நேரத்தில் வெளியே வரும்.

  கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது, நாங்கள் ஈபிஎஸ் உடன் இல்லை.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை.

  முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி, அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.

  அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அவரது காரை நோக்கி கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு கற்கள் மற்றும் காலணிகளை வீசியர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

  இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமிக்கு அரங்கேறிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "நான் எனது சமூக வலைதள பதிவுகளின் மூலம் அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் எனும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொந்தரவையோ, துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது என் வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தேன். இது போன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.

  • குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது.

  ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது:-

  தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தின் பாதுகாப்பையும், மாண்பையும், அமைதி பூங்கா என முன்பு தமிழ்நாட்டிற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

  இந்திய குடியரசுத் தலைவர் நாளை தமிழ்நாடு ஆளுனர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழக உளவுத்துறையும், காவல்துறையும் இந்த விடியா ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே வெளிக்காட்டுவதுடன், தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

  மேலும், குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அப்படியானால் ஆளுநர் மாளிகை குண்டு வீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும், இதற்கு பின் மிகப்பெரிய சதிவலை பின்னபட்டிருப்பதும் உறுதியாகிறது.

  மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது.

  இது தான் விடியா திமுக மாடல்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
  • சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம்.

  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

  எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

  இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சேலம் மாநகர குற்றப்பிரிவுக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  • பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கு.
  • புகார்தாரர் அளித்த தகவலின் பேரில் வழக்கின் சாட்சியாக ஓ.பி.எஸ். சேர்க்கப்பட்டார்.

  கடந்த 2021 ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை மறைத்து இருந்ததாக கூறி, தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி புகார் அளித்து இருந்தார்.

  எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் கையொப்பம் இட்டிருந்தார். இதன் காரணமாக வழக்கில் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

  தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொளுளாகி இருக்கிறது.

  • பிரதமர் மோடியை தனியாக சந்திக்க இ.பி.எஸ். நேரம் கேட்டுள்ளார்.
  • ஓ.பி.எஸ்ஸும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.

  சென்னை:

  பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 8-ம் தேதி சென்னை வருகிறார்.

  சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார்.

  இந்நிலையில், பிரதமரின் சென்னை வருகையின்போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

  அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

  • ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளது
  • அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன

  சென்னை:

  அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ள நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் கட்சியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் ஆதரவு கருத்துக்களை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

  இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.