என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "piyush goyal"

    • இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது

    ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.

    இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.

    வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.  

    இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

    அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.

    இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.

    இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    • மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
    • இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது.

    இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேர்மறையான சூழ்நிலையில் முன்னேறி வருகின்றன என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் நவம்பர் மாதத்திற்குள் வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க அந்தந்த நாட்டின் வர்த்தக மந்திரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

    மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

    இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியில் முடிவடைய இருநாடுகளும் முன்வருவதில் எந்த சிக்கலும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, டிரம்பின் நேர்மறையாக மதிப்பீட்டை அன்புடன் வரவேற்பதாக பதில் அளித்திருந்தார்.

    • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
    • இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

    இருநாடுகளுக்கும் சாதகமான சூழலில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும்.
    • சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும் என்றார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்காக வரியும், அபராத வரியும் விதித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் தொழில், வர்த்தக துறையினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சில் பங்கேற்ற மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:

    இந்தியா யாருக்கும் அடிபணியாது. கொரோனா நெருக்கடியை நாடு ஒரு வாய்ப்பாக மாற்றி ஐ.டி. துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.

    சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும். உலகெங்கிலும் உள்ள நாடுகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடுகின்றன.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும். இன்று இந்தியா வலுவானது, அதிக மரியாதைக்குரியது. நாடு புதிய வர்த்தக ஏற்பாடுகளை தொடர்ந்து உருவாக்கும்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சிலி, பெரு, நியூசிலாந்து மற்றும் இன்னும் பல நாடுகள் உள்பட பலதரப்பட்ட கூட்டாளிகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்கிறது. வர்த்தக ஒப்பந்தங்களையும் இறுதி செய்து வருகிறது என தெரிவித்தார்.

    • ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதற்கு இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
    • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.

    அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.

    மேலும் ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதற்கு இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று நடந்த மக்களவை கூட்டத்தில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.

    அவர் கூறியதாவது, "சமீபத்திய நிகழ்வுகளின் தாக்கத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்கள், தொழில்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சினை குறித்த அவர்களின் மதிப்பீடு குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறது.

    விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள், சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைத் துறையின் பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது.

    நமது தேசிய நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" என்று பியூஷ் கோயல் கூறினார்.  

    • எந்த காலக்கெடுவையும் விட தேசிய நலனுக்கே முன்னுரிமை எனவும் கோயல் கூறியிருந்தார்.
    • இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஜூலை 9 ஆம் தேதிக்குள் டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.

    அமெரிக்காவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தியா அதை ஏற்றுக்கொள்ளும் என்றும் எந்த காலக்கெடுவையும் விட தேசிய நலனுக்கே முன்னுரிமை எனவும் கோயல் கூறியிருந்தார்.

    இந்நிலையில், "பியூஷ் கோயல் எவ்வளவு வேண்டுமானாலும் தனது நெஞ்சை அடித்துக் கொள்ளலாம். ஆனால் மோடி டிரம்பின் வரி காலக்கெடுவுக்கு பணிவுடன் அடிபணிவார் என்று நான் கூறுகிறேன்" என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஜூலை 9 ஆம் தேதிக்குள் டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். 

    • பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும்.
    • இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்றார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனாலும், இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்தார். வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார். இந்தக் காலக்கெடு நெருங்குவதால் பேச்சுவார்த்தை அதற்குள் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:

    வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், இந்தியாவின் நலனை உறுதிசெய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    நாட்டின் நலனே எப்போதும் முக்கியம். அதனை மனதில் வைத்துக் கொண்டு, சிறந்த ஒப்பந்தத்தை தயார் செய்தால் வளர்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா தயாராக உள்ளது.

    பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும். குறிப்பிட்ட காலக்கெடு அல்லது அழுத்தங்களின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம்.

    நன்கு முதிர்ச்சி அடைந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நாட்டின் நலன் உறுதி செய்யப்படும்போது மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

    • மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மக்கள் மீது பழியைப் போட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய பியூஷ் கோயல், "140 கோடி இந்தியர்கள் தேசப் பற்றை உயரிய கடமையாக கருதும் வரை, பஹல்காம் தாக்குதல் போன்ற நாட்டை உலுக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்" என்று தெரிவித்தார்.

    மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய அமைச்சர் மக்கள் மீது பழியை போட்டு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதல் நடந்துள்ள நிலையில், காஷ்மீரில் திட்டமிட்டபடி ஜூலை மாதம் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய மக்கள் விரைவில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லுவார்கள். அமர்நாத் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு மாதமும் ரேசன் மூலம் விநியோக்க 90 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவை.
    • உத்தரபிரதேசம், பீகாரில் உணவு தானிய உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஐதராபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

    உலகம் முழுவதும் இன்று பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உணவு தானியங்களின் உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. சரியான நேரத்தில் மழை பெய்யாத நிலையில் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

    ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 80 கோடி மக்கள் அரிசி, கோதுமையை பெற்று வருகிறார்கள். அந்தியோதயா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படுகிறது.

    கூடுதல் விநியோகத்திற்காக ஒவ்வொரு மாதமும் 90 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவை. ஒரு வருடத்தில் தேவை 108 லட்சம் டன்களாகிறது. ஏழை எளிய மக்கள் உணவு பொருட்களை இலவசமாகப் பெறுகிறார்கள். அரிசியின் விலை சீராக உள்ளது, எனவே உணவு தானிய ஏற்றுமதியை அரசு நிறுத்தவில்லை. செப்டம்பர் வரை, முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி சுமார் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜவுளி தொழில்நுட்ப காப்புரிமைகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • நவீன நெசவு இயந்திரங்கள், ஆய்வகங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம்.

    டெல்லியில் நடைபெற்ற ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களின் ஆய்வு கூட்டத்தில் நித்தி ஆயோக் அமைப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் வி கே. சரஸ்வத், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் சிறப்புரையாற்றிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம். உலக தரத்திலான நவீன நெசவு இயந்திரங்கள், நவீன ஆய்வகங்கள் உள்ளிட்டவை குறித்து ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு வழங்கலாம்.

    ஆய்வகங்களை நவீன மயமாக்குவதில் இந்திய தர நிர்ணய அமைப்பு, ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களுக்கு உதவ வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது.
    • நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது அவசியமானது.

    டெல்லியில் நடைபெற்ற , ஜவுளி ஆலோசனைக் குழுவுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    இந்திய பருத்திக்கு முத்திரை வழங்கப்படுவதற்கான சிறந்த தருணம் இது. இந்திய பருத்தி கஸ்தூரிக்கு முத்திரை மற்றும் சான்றளிக்கும் வகையில் தொழில்துறை முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது அவசியம். கஸ்தூரி பிராண்டட் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈர்ப்பை உருவாக்க வேண்டும். 


    இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது. இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016 இன் கீழ் பருத்தியின் தரத்தை தொழில்நுட்ப அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கஸ்தூரி பருத்தியின் தரம், இருப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஒருங்கிணந்து பணியாற்றும் தொழில்துறை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

    பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவை. போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து சில உறுதியான நடவடிக்கைகள் தேவை. பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க புதுமையான வேளாண் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×