என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தனிச்சின்னத்தில் த.மா.கா. போட்டி - ஜி.கே.வாசன் அறிவிப்பு
    X

    தனிச்சின்னத்தில் த.மா.கா. போட்டி - ஜி.கே.வாசன் அறிவிப்பு

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
    • மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.

    தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.

    இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    * மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.

    * சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசும் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

    அப்போது த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்தார்.

    Next Story
    ×