என் மலர்
நீங்கள் தேடியது "GK Vasan"
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும்.
- ஒவ்வொருவருக்கும், குடும்ப சுமையும், சமுதாய சுமையும் கூடிக்கொண்டே போகிறது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்துவரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணி வழங்கிட வேண்டும். 2013-ம் ஆண்டு தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் அரசு பணி வழங்ககோரி இதுவரை பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தற்பொழுது 2013-ம் ஆண்டு முதல் இதுரை தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற 149-வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர் நலச்சங்கம் நடத்திய போராட்டத்தில் திமுக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் வாக்களித்து வாக்குகளை பெற்று வெற்றியடைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிராகரிப்பது எந்தவிதத்தில் நியாயம்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு பணியினை வழங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும், குடும்ப சுமையும், சமுதாய சுமையும் கூடிக்கொண்டே போகிறது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள, தகுதிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது.
- மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையில் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு, இரண்டு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி சிறப்பாக பணியாற்றி வருகிறது.
அந்தந்த மாநில நிலவரத்திற்கு ஏற்ப கருத்து பரிமாற்றங்கள் இருக்கும். இதில் வன்முறைக்கு எந்த விதத்திலும் இடமில்லை. கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது. இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்புவர்கள் மீது கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளது.
- காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்த தண்ணீரையாவது குறையாமல் கர்நாடக அரசு மனிதாபிமானத்தோடு அளிக்க வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் வாடும் நெற்பயிர்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு நீரின் அளவை குறைக்காமல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிறகு, காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் நெற்பயிர்கள் கருகி வருகிறது. வயல்கள் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது. தற்பொழுது அறிவித்துள்ள தண்ணீர் போதுமானதாக இல்லை. இருந்த பொழுதும் தமிழக விவசாய நிலங்களின் நிலையறிந்து, இன்று காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்த தண்ணீரையாவது குறையாமல் கர்நாடக அரசு மனிதாபிமானத்தோடு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் பழமையான, பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது.
- பல்கலைக் கழகத்தில் 750 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 226 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் பழமையான, பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. இப்பல்கலைக் கழகத்தில் 750 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 226 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
மேலும் பல்கலைக்கழக ஊழியர்கள் 1,400 பேர் பணிபுரியும் இடத்தில் 600 பேர் மட்டுமே உள்ளனர். தனிச் சிறப்புடன் விளங்கும் சென்னை பல்கலைக்கழகம் மேலும் தொடர்ந்து சிறப்புடன் நடைபெறவும், சிறந்த கல்வியை போதிக்கவும், தேவையான பேராசிரியர்களையும், பணியாளர்களையும் நியமிக்கவும், போதிய நிதியை ஒதுக்கி, சென்னை பல்கலைக் கழத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது.
- மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை அடுத்தடுத்ததாக தொடங்கவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே சென்னை-கோவை இடையேயும், சென்னை-பெங்களுரு இடையேயும் துவங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மேலும் புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கவுள்ளது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கோவில்பட்டி திகழ்கிறது. கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள தென்காசி, சங்கரன்கோவில், திருவேங்கடம், ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
கோவில்பட்டி ரெயில் நிலையம் ஆண்டுக்கு சுமார் 30 கோடிவரை வருமானம் ஈட்டித்தந்து "ஏ" கிரேடு அந்தஸ்த்தில் உள்ளது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளையும், வணிக போக்குவரத்து மையமாகவும் திகழும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தற்பொழுது இயக்க இருக்கின்ற வந்தே பாரத் ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கையை மத்திய அரசும், மத்திய ரெயில்வே நிர்வாகமும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வருங்காலங்களில், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர்க்கான பங்களிப்பு அதிகரிக்கும்.
- பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு த.மா.கா. என்றும் துணை நிற்கும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பாக மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால், வருங்காலங்களில், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர்க்கான பங்களிப்பு அதிகரிக்கும். எதிர்கட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் மகளிர்க்கு அளிக்கும் உரிமையை, அங்கீகாரத்தை, பகிர்ந்தளிக்கும் நிகழ்வாக பார்க்க வேண்டும், தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு த.மா.கா. என்றும் துணை நிற்கும். புதிய பாராளுமன்ற கட்டித்தில், புதிய தொடக்கமாக வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை கொண்டு வந்த பிரதமர் மோடிக்குக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், மனம் நிறைந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
- குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண தொகையை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு முறையே கொடுக்க தவறிய காரணத்தினால் விவசாயிகள் மிகவும் மனக்கஷ்டத்திலும், பொருளாதார நஷ்டத்திலும் இருக்கிறார்கள்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், போதுமான தண்ணீர் கடை, மடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. இதனால் குறுவை சாகுபடி பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கருகிப் போயிருப்பதாக கண்ணீர் வடிக்கிறார்கள்.
எனவே பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண தொகையை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசு வீண் விவாதங்களிலும், விளம்பரம் தேடுவதிலுமே கவனம் செலுத்துகிறது.
- உழைக்கும் மக்களின் வருமானம் முழவதும் அவர்கள் குடும்பத்திற்கு செல்ல வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் 3 பேர் மது அருந்திகொண்டு இருந்தவர்களை தட்டிக்கேட்ட நான்கு பேரை வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது சிறிது காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்து வருவது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது. நாளுக்குநாள் குற்றங்கள் அதிகரிக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. பெண்கள் பகலில் கூட தனியாக நடமாட முடியாத நிலை. வழிப்பறி, பாலியல் தொந்திரவு என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எல்லாவற்றிக்கும் மூல காரணம் மதுவாகத்தான் இருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அதன் மூலம் வருமானத்தை மட்டுமே பார்கிறார்களே தவிர, மக்களின் வாழ்வாதாரத்தை பார்க்கவில்லை. தமிழக அரசு வீண் விவாதங்களிலும், விளம்பரம் தேடுவதிலுமே கவனம் செலுத்துகிறது. தமிழகமும், மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் அரசு மதுக்கடைகளை மூடவேண்டும். உழைக்கும் மக்களின் வருமானம் முழவதும் அவர்கள் குடும்பத்திற்கு செல்ல வேண்டும். சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழகம் தலைநிமிரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நீட் தேர்வால் மாணவர்கள், பெற்றோர் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
- அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது அ.தி.மு.க.வின் பலத்தை பறைசாற்றுகிறது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவன தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவேரி நதி நீர் பிரச்சினை என்பது தஞ்சை டெல்டா பகுதிக்கு உயிர் பிரச்சினை. கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற்று தர வேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரையில் இந்திய அளவில் தமிழக மாணவர்கள் வருடத்திற்கு வருடம் மற்ற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் அறிவு திறனில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களது அறிவு திறனை பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு தமிழக கல்விதுறை ஊக்கம் அளிக்க வேண்டும். ஆனால் ஊக்கம் அளிக்காமல் பின் தள்ள நினைக்கிறது. மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது கல்வி துறையின் கடமை ஆகும்.
எல்லா மாணவர்களும் நன்கு படித்து தேர்ச்சி அடைய வேண்டும். தொடர்ந்து நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் மாணவர்களின் நன்மை கருதி வேறு துறையில் வாய்ப்பை ஏற்படுத்தி தர ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன் வர வேண்டும். நீட் தேர்வால் மாணவர்கள், பெற்றோர் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
கல்வியில் அரசியலை புகுத்த கூடாது. தி.மு.க.வின் பல்வேறு மக்கள் விரோத போக்கால் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. பாராளுமன்றத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். தேசிய அளவில் அ.தி.மு.க. பெரிய கட்சியாக திகழ்கிறது. அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் லட்ச க்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது அ.தி.மு.க.வின் பலத்தை பறைசாற்றுகிறது. இது கூட்டணிக்கு மிகப்பெரிய வலுவை சேர்த்து வெற்றியை சேர்க்கும். அ.தி.மு.க., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான அங்கீகாரத்தை இந்த மாநாடு எடுத்துகாட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தி.மு.க. அரசு தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து அவர்களை பாழ்படுத்துகிறது.
- மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி மூப்பனார் மற்றும் காமராஜர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது.
சென்னை:
மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 92-வது பிறந்த நாள் விழா சென்னை சேப்பாக்கத் தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.
மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி மூப்பனார் மற்றும் காமராஜர் பெயரில் விருதுகள் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான மூப்பனார் விருதுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மாறன் என்ற வேணுகோபாலும், காமராஜர் விருதுக்கு பாலம் கல்யாணசுந்தரமும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
இருவருக்கும் ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார். விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் விடியல் சேகர், யுவராஜா, ராஜன் எம்.பி.நாதன், முனைவர் பாட்சா ஆகியோர் பேசினார்கள்.
விழாவில் மாநில நிர்வாகிகள் ஜவகர்பாபு, சக்திவடிவேல், திருவேங்கடம், கே.ஆர்.டி.ரமேஷ், தி.நகர் கோதண்டன், கே.ஆர்.டி.ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜு சாக்கோ, அருண்குமார், பி.எம்.பாலா, கோவிந்தசாமி, முனைவர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசும்போது, மாணவர்களின் நலன்களை பாதுகாப்போம் என்று சொல்லும் தி.மு.க. அரசு தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து அவர்களை பாழ்படுத்துகிறது.
நீட் தேர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் சவால் விடும் வகையில் தமிழக மாணவர்கள் முன்னேறி வரும் நிலையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக நீட்டை நிறுத்துவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.