search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NDA alliance"

    • கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
    • இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார்.

    பீகார் மாநிலம் ஜமுய்-ல் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வரும், பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார். இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார். நாட்டிற்காகவும் பணியாற்றியுள்ளார். எங்களுடைய பதவி காலத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    தவறுதலாக கூட எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால், மீண்டும் அந்த கலவரங்கள் தொடங்கிவிடும் என்பதை இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    பிரதமர் மோடி பேசும்போது "முழு அக்கறையுடன் ராம் விலாஸ் பஸ்வானின் சிந்தனைகளை என்னுடைய இளைய சகோதரர் முன்னெடுத்துச் செல்வதில் முழு திருப்தி அடைகிறேன். ஒட்டுமொத்த நாட்டிற்கும் பீகார் வழிகாட்டியது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு 5-6 பீகார் தலைமுறையினருக்கு நீதி கிடைக்கவில்லை" என்றார்.

    • பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க.விற்கு எதிராக கருத்துக்கள் கூறி வந்தார்
    • அண்ணாமலையை தலைமை பொறுப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க.வினர் கூறி வந்தனர்

    ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வும் அங்கம் வகித்தது.

    கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உரசல் நிலவி வந்தது.

    பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்த சில கருத்துக்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது. அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைமை பொறுப்பில் இருந்து நீக்க அ.தி.மு.க.வினர் கோரி வந்தனர்.

    இந்நிலையில் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே நிலவி வந்த உறவு முறிந்தது என அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி முறிந்ததாக இக்கட்சியின் முக்கிய தலைவரான கே.பி. முனுசாமி நிருபர்களிடம் இன்று மாலை தெரிவித்தார்.

    • சந்திப்பை தொடர்ந்து தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியானது.
    • தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலை ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

    ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து தேர்தல் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி, "தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்," என்று தெரிவித்தார். எச்.டி. குமாரசாமி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    "தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருக்க ஜனதா தளம் கட்சி முடிவு செய்து இருப்பது மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது. அவர்களை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். இது தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் 'புதிய இந்தியா, உறுதியான இந்தியா' என்ற நோக்கத்தை வலுப்படுத்தும்," என்று ஜெ.பி. நட்டா தெரிவித்து உள்ளார்.

    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
      
    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், இந்த பாலியல் புகாரால் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    அவரது மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மஞ்சு வர்மா சரணடைந்தார். அவரை ஜாமினில் விடுதலை செய்யும்படி பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பன்கேற்றது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவருக்கு பின்புறமாக மேடையின் முன்வரிசையில் மஞ்சு வர்மா அமர்ந்திருந்தார்.

    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மத்திய மந்திரி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma  
    ×