என் மலர்

  நீங்கள் தேடியது "Tamil Maanila Congress"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் பணி நியமனங்கள் ஒப்பந்த முறையில் தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும்.
  • அரசே நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனங்கள் செய்ய வேண்டும்.

  சென்னை:

  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் பணி நியமனங்கள் ஒப்பந்த முறையில் தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும். அரசே நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனங்கள் செய்ய வேண்டும்"

  தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்திட டெண்டர் விடப்படுவது தனியார் மயமாக்குதலுக்கு வழிவகுக்கும் நடவடிக்கையாகும்.

  வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் பணிக்காக காத்திருக்கும் இந்நிலையில் ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் தேர்வு செய்வதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற மிகுந்த வாய்ப்பு உள்ளது.

  எனவே மேற்படி தனியார்மயமாக்கும் தமிழக அரசு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தின் நடவடிக்கைகள் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக அரசு, மாநிலத்தில் பாலியல் தொடர்பான தொந்தரவுகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
  • சிறுமிகள், மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என எந்த மகளிருக்கும் பாலியல் தொந்தரவு ஏற்படக்கூடாது.

  சென்னை:

  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழக அரசு, மாநிலத்தில் பாலியல் தொடர்பான தொந்தரவுகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். சிறுமிகள், மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என எந்த மகளிருக்கும் பாலியல் தொந்தரவு ஏற்படக்கூடாது.

  ஆனால் அவ்வப்போது மகளிருக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான தொந்தரவுகள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு என்ற செய்தியானது பெற்றோர்களுக்கு கவலை அளிக்கிறது.

  இந்த நிலையில் தமிழக அரசு, தயவு தாட்சணை பார்க்காமல் தவறு செய்பவர்களுக்கு உச்சகட்ட தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தூக்கு தண்டனை என்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். குறிப்பாக உச்சநீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள மாவட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு பிரத்யேக நீதிமன்றமாவது அமைக்கப்பட வேண்டும்.

  தமிழக அரசு, மாநிலத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு இடம் இல்லாத நிலையை ஏற்படுத்த இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

   சென்னை:

   த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

   காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்வாய் பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8,000 நெல்மூட்டைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படாததால் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி விட்டது.

   இது போன்ற நிலை அவ்வப்போது பல மாவட்டங்களில் ஏற்படுவதற்கு காரணம் என்ன? அதாவது நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டும், பின்பு அதை அரசு எப்படி பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமோ அதை முறைப்படி மேற்கொள்ள வேண்டும்.

   தமிழக அரசு, மழை பெய்வதால் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் இருந்து விவசாயப் பயிர்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க முன்னேற்பாடான, முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • இளைஞர்களுக்கும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த ‘அக்னிபாத்’ திட்டத்தை தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
   • நாட்டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் வாழ்வையும் மேம்படுத்துவதற்கான இந்த உயர்ந்த திட்டத்தை, அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்கள் மூலம் இளைஞர்களை திசை திருப்ப கூடாது.

   சென்னை:

   தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

   இந்திய ராணுவத்தில் 'அக்னிபாத்' திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்ல நல்ல தேச பக்தியுள்ள, நேர்மையான, கட்டுக்கோப்பான, செயல் திறன் மிக்க இளைஞர்களை உருவாக்கி, இந்த தேசத்தின் பாதுகாப்பை மட்டுமல்லாமல் சிறந்த இந்தியாவை உருவாக்க அவர்களை வடிவமைக்க கூடிய ஓர் அருமையான திட்டம் என்றால் அது மிகையாகாது.

   தேசத்தை வலுப்படுத்த இளைஞர்களின் சக்தி மிகத்தேவை. அந்த தேவையை முறையாக நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக கட்டமைக்க மத்திய அரசு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

   இந்த திட்டம் ராணுவத்தில் புதுமையையும், புது உத்வேகத்தையும் ஏற்படுத்துவதோடு இளைஞர்களின் பங்களிப்பால் நாட்டை வல்லரசாக மாற்றக்கூடிய ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

   இளைஞர்கள் குறுகிய காலத்தில் தங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துகொள்ளவும், பணிக்குப் பின்னர் அவர்களின் திறமைக்கு ஏற்ப ராணுவத்திலேயோ அல்லது பல்வேறு அரசுப் பணியிலேயோ, தனியார் துறை பணியிலேயோ அமைப்பதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது.

   குறுகிய காலத்தில் பணி ஓய்வு என்று இல்லாமல் தொடர் பணிக்கும் வழிவகுக்கிறது என்பது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

   இளைஞர்களுக்கும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த 'அக்னிபாத்' திட்டத்தை தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

   நாட்டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் வாழ்வையும் மேம்படுத்துவதற்கான இந்த உயர்ந்த திட்டத்தை, அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்கள் மூலம் இளைஞர்களை திசை திருப்ப கூடாது. உண்மையான தேசபக்தியும், சமூக சிந்தனையும் கொண்ட இளைஞர்களை சிறந்த பணிக்காக ஒன்று திரட்டும் இந்த திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • பதிவு மூப்பு மற்றும் தேர்ச்சி மூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு படிப்படியாக பணிவழங்க வேண்டும்.
   • தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது

   சென்னை:

   த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

   ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒன்பது ஆண்டுகள் பணிக்காக காத்திருக்கும் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அவர்களின் பதிவு மூப்பு மற்றும் தேர்ச்சி மூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு படிப்படியாக பணிவழங்க வேண்டும். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

   ஆகவே வருங்கால மாணவர்களின் கல்வியை மனதில் கொண்டும், தகுதியுள்ள, தகுதிப்பெற்ற ஆசிரியர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும், தமிழக அரசு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.

   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7-ந் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் இன்று 9-ந் தேதி 3-வது நாளாக தொடர்கிறது.
   • ரேசன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களுக்கான பணியில் தடையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

   சென்னை:

   த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

   தமிழக அரசு, ரேசன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். அதாவது ரேசன் கடை பணியாளா்கள் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

   குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7-ந் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் இன்று 9-ந் தேதி 3-வது நாளாக தொடர்கிறது. இதனால் பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் கிடைக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ரேசன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களுக்கான பணியில் தடையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • தமிழக அரசு மீண்டும் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
   • தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை படிக்க வைத்துவிட்டு தொடர் வகுப்பிற்கு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும்.

   சென்னை:

   த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

   தமிழக அரசு இந்த கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக இருக்குமே தவிர ஏழை, ஏளிய மக்களுக்கு அல்ல. அதோடு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய அதிக வாய்ப்புள்ளது. தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை படிக்க வைத்துவிட்டு தொடர் வகுப்பிற்கு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும். இதனால் அரசுப் பள்ளிகளுக்குதான் பாதிப்பு ஏற்படும். இதனால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழை, எளிய பெற்றோர்களும் மாணவர்களுமே.

   ஆகவே ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலையை மனதில்கொண்டும், மாணவர்களின் தொடர் வகுப்புகள் தடைபடாமல் தொடரவும் தமிழக அரசு மீண்டும் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • சமர்த் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கு உதவித்தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.
   • பயிற்சி திட்டத்தில் கூட்டுறவு சங்க நெசவாளர்களும், தனியார் நெசவாளர்களும் 40 முதல் 45 நபர்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

   சென்னை:

   த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

   தமிழகத்தில் "கைத்தறி நெசவு திறன் மேம்பாட்டு பயிற்சி" கைத்தறியில் புதுமை புகுத்துதல் திட்டம் மூலம் மத்திய அரசின் ஜவுளித்துறையின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு "சமர்த் திட்டம்" என்கிற பெயரில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

   தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பகுதியான காஞ்சிபுரம், கும்பகோணம், ஈரோடு, பரமக்குடி ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் ஜவுளித்துறையின் சார்பாக, தமிழ்நாடு கைத்தறித்துறை சரக உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி திட்டத்தில் கூட்டுறவு சங்க நெசவாளர்களும், தனியார் நெசவாளர்களும் 40 முதல் 45 நபர்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கு பயிற்சி முகாமில் நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம் உதவித் தொகை வழங்குகிறது.

   இப்பயிற்சி வகுப்பின் மூலம் இதுவரை 1500 கைத்தறி நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை இதுவரை தமிழ்நாடு கைத்தறித்துறை சரக உதவி இயக்குனர் அலுவலகத்தால் வழங்கப்படவில்லை.

   நெசவாளர்களின் நலன் கருதி இதுவரை பயிற்சிப்பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கும், தற்பொழுது பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கும் உதவித் தொகையை உடனடியாக தமிழக அரசு, தமிழ்நாடு கைத்தறிதுறையின் மூலம் தாமதமில்லாமல் வழங்க வேண்டும்.

   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   மத்திய அரசு, ஆன்லைன் மூலம் விளையாட்டுகளை கொண்டுவந்து பணம் பறிக்கும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை வீணாக்கும் தொழிலை முற்றிலுமாக முடக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
   சென்னை:

   த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

   மத்திய அரசு, ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணித்து பொதுமக்களை பாதிக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டு விளையாடுவதால் அவர்களின் பணம், மனம், வாழ்க்கை சீரழிகிறது. ஆன்லைன் விளையாட்டு விளையாடி பலர் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது. இனியும் இது தொடரக்கூடாது.

   இந்தநிலையில் ஆன்லைன் விளையாட்டு சம்பந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு விளையாட தடை செய்யப்பட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கு பதிலாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய பெயரில் வெவ்வேறு விளையாட்டுகள் ஆன்லைனில் வந்துள்ளது.

   இதிலும் சிறியவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு விளையாடி நேரத்தையும், பணத்தையும், வாழ்க்கையையும் தொலைத்து விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

   ஆபத்தை ஏற்படுத்தும் புளூவேல் ஆன்லைன் விளையாட்டு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்தையும் நம் நாட்டில் தடை செய்ய வேண்டும்.

   பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடாமல் இருக்கவும் கணினி, மொபைல் ஆகியவற்றை பயனுள்ள வகையில் தேவைக்கு மட்டுமே வீட்டு நலன், நாட்டு நலன் கருதி பயன்படுத்தவும் அன்புக்கட்டளை இட வேண்டும்.

   மத்திய அரசு, ஆன்லைன் மூலம் விளையாட்டுகளை கொண்டுவந்து பணம் பறிக்கும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை வீணாக்கும் தொழிலை முற்றிலுமாக முடக்க வேண்டும்.

   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சேதமடைந்துள்ள பயிர்கள் அனைத்திற்கும் விவசாயிகளின் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணத்தை, இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
   சென்னை:

   த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

   தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையிலும் நிவாரணத்தை வழங்க வேண்டும்.

   தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணம், இழப்பீடு போதுமானதல்ல.

   குறிப்பாக விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 30 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழையில் மூழ்கி வீணாகிவிட்டது.

   அது மட்டுமல்ல விவசாயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் பெருத்த நஷ்டத்தில் இருக்கிறார்கள்.

   ஆனால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 8 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதே போல சேதமடைந்துள்ள சம்பா பயிர்களுக்கு இழப்பீடு குறித்த அறிவிப்பும் ஏற்புடையதல்ல.

   எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சேதமடைந்துள்ள பயிர்கள் அனைத்திற்கும் விவசாயிகளின் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணத்தை, இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.

   மேலும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிற்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்கி, விவசாயத்தொழிலையும், விவசாயிகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo
   தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பிக்கும் முன்பாகவே உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும், பொதுப்பணித்துறையும் முன்னேற்பாட்டோடு செயல்பட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
   சென்னை:

   த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

   வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை (17-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (18-ந்தேதி) தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

   ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பருவமழை, கனமழை ஆகியவற்றால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதால் சுகாதாரப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

   மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதற்குள் மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளிவந்திருப்பதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

   அதாவது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை முழுமையாக அகற்ற வேண்டும், சாலைப் போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகளையும், குடிநீர் வழங்குவதில், கழிவுநீர் செல்வதில், மின் கம்பம், மரங்கள் சாய்ந்திருப்பதை சரி செய்வதில் உடனடி தீர்வு காண வேண்டும்.

   இப்படி மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்தால் தான் தொடர்ந்து பெய்ய இருக்கும் மழையில் இருந்து விவசாயிகளை, ஏழை, எளிய, சாதாரண, நடுத்தர மக்களை ஓரளவுக்காவது பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.

   எனவே தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பிக்கும் முன்பாகவே உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும், பொதுப்பணித்துறையும் முன்னேற்பாட்டோடு செயல்பட வேண்டும்.

   குறிப்பாக தமிழக அரசு நெல் மூட்டைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள், நீர்த்தேக்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றம், கரையோர மக்களின் பாதுகாப்பு, நிவாரண உதவிகள் வழங்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

   எனவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்.

   இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
   • Whatsapp
   • Telegram
   • Linkedin
   • Print
   • koo