என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசாமி"

    • ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
    • மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான நிதியை விடுவிக்காததால் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தத்தங்குடியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன் என்பவரை மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.

    வயதான தாய், தந்தை மற்றும் கைக் குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்திற்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும்

    பராமரிக்க முடியாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக்

    குறிப்பிட்டுள்ளார்.

    இவற்றையெல்லாம் குறிப்பிட்டு உடனடியாக தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் அவரது கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் வராததாலும், பணக் கஷ்டத்தினாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்ததினாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, மூன்று நாட்களுக்கு முன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

    விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடரவில்லை.

    மேலும், ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது என்று, எனது பல

    அறிக்கைகளிலும், பேட்டிகளிலும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்துள்ளேன்.

    எனினும், தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு

    ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று வானளாவிய விளம்பரம்

    செய்கிறதே தவிர, உண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் படியைக்கூட பல மாதங்களாக முழுமையாக

    வழங்காததால், ஆதிதிராவிட நல மாணவர் விடுதிக் காப்பாளர்களே சொந்தப் பணத்தை செலவு செய்து, மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.

    எனது முந்தைய அறிக்கைகளில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வெளியாட்கள் தங்குவதையும், தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத நிலையையும்; தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, அனைத்திந்திய அண்ணா

    திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 5.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், குடிநீர் வழங்காமல் காலம் தாழ்த்தியதையும்; புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து, இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்; ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை

    முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் திமுக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது

    முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

    விடியா திமுக அரசின் ஆதிதிராவிட நலத்துறை தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு உணவுப் படிகளை முழுமையாக வழங்காததால், விடுதிக் காப்பாளர்களே பல மாதங்களாக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக, விடுதிப் காப்பாளர்கள் மிகந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசு, திமுக அரசு என்று எப்போதும் கூறிக்கொள்ளும் மு.க. ஸ்டாலினின் 55 மாதகால விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்களைச் செய்வதாக விளம்பரம் மட்டும் வருகிறதே தவிர, எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

    விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலதில் நிதியை விடுவிக்காத விடியா திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறும், விடுதிக் காப்பாளர் மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும், பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எம்.எஸ்.யோக விக்னேஷ்வரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
    • யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்.யோக விக்னேஷ்வரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.வினோத்குமார் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
    • நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    இன்று 76-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.
    • அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய ரேசன் கடைகளை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ரேசன் கார்டுதாரருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் சரியான நேரத்தில் அறிவித்து வருகிறார். குறை எதுவும் இல்லாத ஆட்சியை அவர் நடத்தி வருகிறார்.

    2026 தேர்தலில் 210 தொகுதிகளில் பெற்றி பெறுவோம் என அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடம் இல்லை. அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது. அவ்வாறு உள்ள நிலையில் இவர்கள் எப்படி 210 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்? தி.மு.க. ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊராட்சி துறையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சுமார் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. பழைய வீடுகளுக்கு பதிலாக 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க. எதுவும் செய்யவில்லை. 20 ஆண்டு காலமாக பழுது நீக்காமல் இருந்த வீடுகள் எல்லாம் ரூ.2 ஆயிரம் கோடியில் பழுது நீக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வீட்டில் வசித்த மக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு காலனியிலும் எவ்வளவு வீடு பழுது பார்க்கப்பட்டுள்ளது, மக்கள் எப்படி வாழ்ந்து வருகின்றனர் என்பதை அ.தி.மு.க.வினர் விசாரிக்க வேண்டும். நாங்கள் எந்த திட்டத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலை பார்க்கவில்லை. தேர்தலுக்காக லேப்டாப் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறுகின்றனர். சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பைத்தான் நிறைவேற்றி வருகிறோம். விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் பணம் வீடு தேடி வரும். விடுபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முதலமைச்சர் தயாராக உள்ளார் என்றார்.

    • கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்
    • மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தலையொட்டிதான் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் கொடுக்க அரசு முன்வந்துள்ளது' என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், 

    "அவருக்குதான் எப்போதுமே பயம். அவர் இனி வரவே முடியாது என்பதை அவரே முடிவு செய்துவிட்டார். தற்போது பாஜகவின் அடிமையாகிவிட்டார். அவர் எது வேண்டுமானாலும் கூறுவார். ஆனால் கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.

    படிக்கின்ற மாணவர்கள் இந்த காலக்கட்டத்திலேயே அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட திட்டங்கள். அதை யார் வேண்டுமானாலும் குறை கூறட்டும். அதும் அவர் சொல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. மக்கள் அவரை புறக்கணித்து விட்டனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் செய்துள்ள சாதனைகளை மக்கள் அறிவார்கள். அதனால் அவரது பேச்சு எப்போதும் எடுபடாது." என தெரிவித்தார். 

    • வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும் என அரித்மெட்டிக் கணக்கு போட்டிருக்கிறார் பழனிசாமி.
    • இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா தவிர வேறு எந்தக் கட்சிகள் இருக்கின்றன?

    பாஜகவோடு கூட்டணி வைக்கமாட்டோம் எனக்கூறிவிட்டு, மீண்டும் கூட்டணி வைத்திருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "நாட்டு மக்களுக்காகச் சூழ்நிலை கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம். பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை'' என்று 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரையில் நடந்த SDPI கட்சி மாநாட்டில் வீர வசனம் பேசிய பழனிசாமி, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதற்கு நியாயம் கற்பிக்கப் பொதுக்குழுவில் புலம்புவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

    "அடுத்த 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள்'' என ஜோதிடம் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. தன்னுடைய உறவினர்கள் வீட்டில் நடந்த இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து போய் அதிமுகவை அமித்ஷாவிடம் பத்திரமாக அடமானம் வைத்த பழனிசாமி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?

    "2019 எம்பி தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதியில் ஒன்றில்தான் வென்றோம், அப்போது நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்றோம்'' என புள்ளிவிவரம் சொல்கிறார் பழனிசாமி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-களால் ஆட்சிக்கு ஆபத்து என்றதும் அவர்களைத் தகுதிநீக்கம் செய்தார்கள். அந்தத் தொகுதிகளுக்கும் சேர்த்து அப்போது இடைத் தேர்தல் நடைபெற்றது. அறுதிப் பெரும்பான்மையை இழந்துவிடுவோமோ, ஆட்சி கவிழ்ந்துவிடுவோமோ என அஞ்சி அந்த 9 தொகுதிகளில் மட்டுமே குறியாக வேலை பார்த்து வென்றார்கள்.

    "நான் ஏழாவது பாஸ்னே. நீங்க எஸ்.எஸ்.எல்.சி ஃபெயிலுனே. பாஸ் பெருசா ஃபெயில் பெருசா'' என செந்தில் காமெடி போலப் பேசியிருக்கிறார் பழனிசாமி. "2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளை திமுகதான் வென்றது. ஆனால், நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் 10 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவே அதிக வாக்குகள் பெற்றது. அப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வாங்கிய வாக்குகள் இரண்டையும் சேர்த்தால் 41.33 சதவிகிதம். இதனைக் கணக்கு போட்டுப் பார்த்தால் 84 சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறோம். எனவே, வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும்'' என அரித்மெட்டிக் கணக்கு போட்டிருக்கிறார் பழனிசாமி.

    2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக தனித் தனியாகக் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, பன்னீர்செல்வம். தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இடம்பெற்றன. இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா தவிர வேறு எந்தக் கட்சிகள் இருக்கின்றன? அன்றைக்கு அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்.டி.பி.ஐ விலகிவிட்டது. தேமுதிகவின் நிலை உறுதியாகவில்லை. நிலைமை இப்படியிருக்க 2024 நாடாளுமன்றத் தேர்தல் 41.33 சதவிகித கணக்கு எப்படிப் பொருந்தும்? கணக்குப் பிள்ளை பழனிசாமிதான் பதில் சொல்ல வேண்டும்?" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • மக்கள் தொடர்ந்து 10 தேர்தல்களில் அவரை தோற்கடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
    • தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக ஒடிசா, பீகார் தேர்தல் போது தமிழ்நாட்டை விமர்சித்துப் பேசிய பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு இருப்பதற்கு பழனிசாமி பெருமைப்படக் கூடாது.

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் தேர்தலில் அதிமுக 210 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதனை இதனை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி பின்பு ஏன் கடந்த தேர்தலில் மக்கள் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பினார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

    "10 தேர்தல்களில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கும் 'தோல்விசாமி', ''210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்'' என அதிமுக பொதுக்குழுவில் கிச்சு மூச்சு மூட்டியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர். குழந்தைகளைச் சிரிக்க வைப்பதற்காகக் கிச்சு மூச்சு மூட்டுவது போல அதிமுகவினருக்கு உற்சாக மூட்டச் சிரிக்காமல் பொய்யை சொல்லியிருக்கிறார் பழனிசாமி.

    "திமுக, நம் ஆட்சியைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அதிமுக பாஜகவோடு கூட்டணி என்றுதான் சொல்கிறார். அப்படியான சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்'' என தன்னுடைய ஆட்சிக்குத் தானே பொதுக்குழுவில் சான்றிதழ் கொடுத்திருக்கிறார் பழனிசாமி.

    ஆட்சிக்கு ஆபத்தைத் தடுக்கத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-கள் 18 பேர் தகுதி நீக்கம், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க் கட்சியினர் மீது அவதூறு வழக்குகள், கொடநாடு கொலைகள், போலீஸ் அதிகாரி விஷ்ணு பிரியா தற்கொலை, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போட்டது, கனிமக் கொள்ளைகள், கஜா, ஓகி புயல்களில் காட்டிய மெத்தனம், கூவத்தூர் கூத்துகள், கொரோனா மரணங்கள், கொரோனா பேரிடரிலும் கொள்ளை, சாத்தான்குளம் தந்தை மகன் லாக் அப் டெத், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம், பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள், நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் சுவாதி கொலை, பேனர் மரணங்கள், ஜல்லிக்கட்டு போராட்டம் என எத்தனை எத்தனை கொடுமைகள் நடைபெற்றன. இதையெல்லாம் மறைத்துவிட்டு, 'சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்' எனச் சோற்றுக்குள் பூசனிக்காயை மறைத்திருக்கிறார் பழனிசாமி.

    பழனிசாமி சொல்வது போலவே அது சிறப்பான ஆட்சி என்றால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை மக்கள் ஏன் வீட்டுக்கு அனுப்பினார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்கி தமிழ்நாட்டைக் கற்காலத்திற்கு இழுத்துச் சென்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி. அது பொற்கால ஆட்சி அல்ல. தமிழ்நாட்டின் இருண்டகால ஆட்சி. மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் டெல்லியின் காலடியில் அடமானம் வைத்து விட்டு, நமது பொருளாதார வளத்தைச் சுரண்டும் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் தலையாட்டி கையெழுத்திட்டு துரோகம் செய்ததுதான் பழனிசாமியின் துரோக ஆட்சி.

    தமிழ்நாட்டின் உரிமைகளை மறுத்தும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியும், வளர்ச்சித் திட்டங்களை முடக்கியும், தமிழர் பண்பாட்டை உலகறிய செய்யும் கீழடி அகழாய்வு முடிவை மறுத்ததும் மட்டுமின்றி தமிழர்களை திருடர்கள் என்றும் கொடுமைக்காரர்கள் என்றும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக ஒடிசா, பீகார் தேர்தல் போது விமர்சித்துப் பேசிய பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு இருப்பதற்கு பழனிசாமி பெருமைப்படக் கூடாது. வெட்கப்படதான் வேண்டும்.

    அரைத்த மாவை அரைப்பது போல் பேசிய பொய்களையே பொதுக்குழுவிலும் திரும்பப் பேசியிருக்கிறார் பழனிசாமி. கூவத்தூரில் குறுக்கு வழியில் முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமியால் தமிழ்நாடு அனைத்துத் துறைகளில் படுபாதாளத்திற்குச் சென்றது.

    தொட்டத் துறைதோறும் ஊழல், கொடநாடு தொடங்கி தூத்துக்குடி வரை சீரழிந்து கிடந்த சட்டம் ஒழுங்கு, பாஜகவின் கண்ணசைவிற்கு இசைந்து நடந்து தமிழ்நாட்டின் உரிமைகள் தாரை வார்ப்பு, அடிமை அதிமுக ஆட்சியின் அவலட்சணங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீது குண்டர் சட்டம் முதல் துப்பாக்கிச் சூடு வரை நடத்தி அடக்கு முறை, செய்தி நிறுவனங்கள் மீது அவதூறு வழக்குகள் எனத் தமிழ்நாட்டைச் சீரழித்த பழனிசாமியை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடவில்லை. அதனால்தான் மக்கள் தொடர்ந்து 10 தேர்தல்களில் அவரை தோற்கடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டைத் தலை நிமிர வைத்திருக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பொறுக்க முடியாமல் பொதுக்குழுக் கூட்டம் கூட்டிப் பொருமியிருக்கிறார். பழனிசாமியின் அர்த்தமற்ற அவதூறுகளால் திமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது. இனியும் இந்தப் பொய்கள் மக்களிடம் எடுபடும் என நினைத்து பகல் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்." என குறிப்பிட்டுள்ளார். 

    • அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.
    • எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.

    எடப்பாடி பழனிசாமி, பயத்தை போக்க டோப்பட்ட மேக் அப் தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.

    10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையிலேயே உள்ளன.

    "கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்" என்ற தீர்மானம் பார்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.

    அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு இரண்டு நாள் முன்புகூட குஜராத்தில் பேசிய அமித்ஷா, ''பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என்றார். "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்ற வசனம் போல மாப்பிள்ளை பழனிசாமிதான்.

    ஆனால், அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதுதான் அமித்ஷா சொன்ன வார்த்தையின் அர்த்தம். ஆனால், அதிமுக பொதுக்குழுவில், "அதிகாரம்'' என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள்.

    அமித்ஷா அழைப்பின் பேரிலே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கார்கள் மாறி அமித்ஷாவை சந்தித்தும், முகமூடி அணிந்து வெளி வந்ததையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள். அந்த அமித்ஷா சொல்வதை மீறி எதையுமே எடப்பாடி பழனிசாமியால் செய்ய முடியாது என்பது அதிமுகவினருக்கே நன்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.

    மெகா கூட்டணி அமைப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமியை நம்பி எந்த கட்சியும் வர தயாராக இல்லை; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு எந்த ஆளுமையும் இல்லை; மக்கள் செல்வாக்கும் கிடையாது என்பது தெள்ளத்தெளிவாக உணர்ந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணியை அவரே அறிவித்தார் என்பதுதானே நிஜம்.

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வருகிறார்கள். அதற்காக அமித்ஷாவை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசாத தொடைநடுங்கி எடுபுடி பழனிசாமிக்குதான் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் என்பது மிக சிறந்த நகைச்சுவை.

    நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பாஜக நிராகரித்துவிட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசைக் கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, திமுக அரசைக் கண்டித்திருப்பது பச்சைத்துண்டு அணிந்துகொண்டு பச்சைதுரோகம் செய்யும் போலி விவசாயி பழனிசாமி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

    நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.

    உண்மையான விவசாயியாக இருந்தால் பிரதமரை டெல்லி சென்று சந்தித்து 22 சதவீதம் வரை உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கினால்தான் கூட்டணியில் தொடருவோம் என நிபந்தனை விதிக்க ஆளுமை வேடம்போடும் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியும் இருக்கிறதா?

    கோவை, மதுரை நகரங்களின் மெட்ரோ திட்டங்களை ரத்து செய்த மோடி அரசை கண்டிப்பதற்கு பதில், ஒன்றிய பாஜக அரசு கூறிய மொக்கையான காரணத்தையே அதிமுக பொதுக்குழு தீர்மானத்திலும் நியாயப்படுத்தி கோவை, மதுரை மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்திருக்கிறார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துவரும் வளர்ச்சியை தினந்தோறும் பார்த்து வயிற்றெரிச்சலில் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, போகின்ற இடங்களிலெல்லாம் புலம்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதையே அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களாகவும் வடித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் கடன் சுமை கட்டுக்குள் இருப்பதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் கடன் சுமை அதிகரித்துவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் அவதூறு பரப்பப்பட்டுள்ளது.

    2011ம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவு பெறும்போது தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 1,01,349 கோடி ரூபாய்தான். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நிறைவடையும்போது 2021ம் ஆண்டில் தமிழ் நாட்டின் கடன் 4,80,300 கோடி ரூபாய். அதாவது 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் சுமார் 5 மடங்கு அதாவது கிட்டதட்ட 500 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் திமுக ஆட்சியில் தற்போது 9 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் இருந்தாலும் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 93 சதவீதம் அளவிற்கே கடன் உயர்ந்துள்ளது.

    ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிஎஸ்டிபியை ஒப்பிடும்போது கடன் அளவு எவ்வளவு என்பதுதான் கடன் சுமையை தீர்மானிக்கும் காரணி. அந்த வகையில் தமிழ்நாட்டின் DEPT TO GSDP RATIO 26.4 சதவீதம்தான். தமிழ்நாடு நிதி பொறுப்புச் சட்டம் 2003 நிர்ணயித்த கடன் வரம்பைவிட குறைவான அளவில்தான் தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது.

    "முதலீடுகள் இல்லை, நிறுவனங்கள் இடம் பெயர்கின்றன, வேலை வாய்ப்பு இல்லை, ஏமாற்றும் புள்ளி விவரங்கள்" என பொத்தாம் பொதுவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய அதிமுக, தனது ஆட்சிக்காலத்தில் இவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன; அதிலிருந்து திமுக ஆட்சியில் இவ்வளவு கோடி குறைவாக உள்ளது.

    அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'இந்த' நிறுவனம் தற்போது வேறு மாநிலத்திற்கு சென்று விட்டது, அதிமுக ஆட்சியில் இத்தனை இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கினோம்; தற்போது அதைவிட குறைந்த வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு கூறியிருந்தால் முதலீடு ஈர்ப்பு, தொழில் வளர்ச்சி விஷயத்தில் அதிமுக ஆட்சியின் யோக்கியதை தெரிந்துவிடும் என்பதால் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை கூறியிருக்கிறது அதிமுக.

    2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் 15,543 கோடி ரூபாய் முதலீட்டில் 10,316 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்திடும் 21 தொழிற்சாலைகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு; அவற்றுள் 12 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டன. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்த முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல் கட்டமாக 46 தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை தொடங்கிவிட்டன. அதனால்தான் தமிழ்நாடு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த வளர்ச்சியை பழனிச்சாமியால் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒன்றிய பாஜக அரசு வழங்கிய புள்ளி விவரத்தையே "பொய்யான புள்ளி விவரம்" என்று கூறியுள்ளார்.

    திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் நீதித்துறையின் மதச்சார்பின்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடம்பிடிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திமுக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை வட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் உள்பட 120 மக்களவை எம்.பிக்கள் ஆதரித்துள்ளனர்.

    ஆனால் மற்ற மாநிலங்களில் மதக் கலவரம் செய்தே ஆட்சியை மாற்ற பாஜக முயற்சி செய்து பலனடைந்ததால் தமிழ்நாட்டிலும் அந்த பலனை அறுவடை செய்யலாம் என்ற நப்பாசையில் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கலவர அரசியலுக்கு துணை போகும் வகையில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

    வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது; தீபம் ஏற்றிவிட்டதை மறைத்து, தீபமே ஏற்ற அனுமதி மறுக்கிறது திமுக அரசு என்று அவதூறு பரப்பும் மதவெறி கும்பலுக்கும் அவர்களுக்கு துணையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மதசார்பின்மைக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.

    திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. 40 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. மொத்தமாக 404 திட்டங்கள் அரசின் செயல்பாட்டில் உள்ளன. 37 திட்டங்கள் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு இல்லாமல் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் மட்டுமே இன்னும் அரசு நடவடிக்கை எடுத்துக் கொள்ளாத திட்டங்களாக உள்ளன.

    தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், இன்னுயிர் காக்கும் 48 திட்டம் போன்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சொல்லியது மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுவதாலேயே எடப்பாடி பழனிசாமி பொய்யையும் அவதூறையும் பரப்பி ஆதாய அடைய முயற்சிக்கிறார்.

    பாஜகவின் மதவெறி கொள்கைக்கு எதிரியாக இருப்பது திமுக மட்டுமல்ல தமிழ்நாடே என்பதால் தமிழ்நாட்டுக்கு துரோகத்தையும் வஞ்சகத்தையுமே மட்டுமே ஒன்றிய பாஜக அரசு துணிந்து செய்கிறது. அப்படியிருந்தும் பாஜகவுடன் கூட்டணிவைத்து எட்டப்பன் வேலைபார்க்கும் எடப்பாடி பழனிசாயின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.
    • அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

    அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும், கவலைப்பட வேண்டாம்.

    * அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.

    * சொந்த பலத்தைக் கொண்ட கட்சி அ.தி.மு.க., தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி.

    * அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை, அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

    * தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்?
    • அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அச்சம் ஏன்?

    வானகரம்:

    சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * விலை நிலவரத்திற்கு பதிலாக கொலை நிலவரம் கேட்டுகும் நிலையில் தி.மு.க ஆட்சி இருக்கிறது.

    * போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல்.

    * தி.மு.க.வில் உள்ள எத்தனை அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

    * தி.மு.க.வில் ஊழல் வழக்கு உள்ள அனைத்து அமைச்சர்களும் பத்திரமான இடத்தில் இருப்பார்கள்.

    * கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்?

    * அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அச்சம் ஏன்?

    * யாரையோ காப்பாற்றுவதற்காக இந்த அரசு துடித்துக்கொண்டிருக்கிறது.

    * கள்ள ஓட்டுக்களால் தி.மு.க. வெற்றி பெற்றதால் SIR என்றாலே அலறுகிறார்கள்.

    * வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்ப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது.

    * இறந்தவர்களின் பெயர், இரட்டைப் பதிவு கொண்டோர் தான் நீக்கப்படுகின்றனர்.

    * தி.மு.க. கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?

    * பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் முதலமைச்சரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    * பா.ஜ.க. குறித்து சிறுபான்மையினரிடம் சந்தேகம் உள்ளது, அதை முறியடிக்குமாறு கலைஞர் கூறினார்.

    * அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு நடந்த போது கீழ் தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    * தி.மு.க. என்பது ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

    * அமைச்சர் துரைமுருகனும் எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர் தான்.

    * அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படாதது ஏன்?

    * அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் பதவியில் அமர முடியும்.

    * இந்த கூட்டத்தில் உள்ள பல பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

    * அ.தி.மு.க.வுக்கு விழக் கூடிய வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * தைத்திருநாளில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ளது.
    • கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து என்னவானது?

    வானகரம்:

    சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * வேறு வழியில்லாமல் 28 மாதங்கள் கழித்து மகளிருக்கு ரூ.1000 திட்டம் தொடங்கப்பட்டது.

    * குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பது கூட அ.தி.மு.க.வின் அழுத்தத்தால் தான்.

    * மக்கள் பணம் பெற்றுக்கொண்டாலும் அ.தி.மு.க.வுக்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.

    * அம்மா மினி கிளினிக், இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தியது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

    * மக்களின் செல்வாக்கை தி.மு.க. அரசு இந்து விட்டதால் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவிப்பு.

    * கல்லூரி திறக்கப்பட்டு 5 மாதம் கழித்து தான் மடிக்கணினி வழங்கப்படுகிறது, இதனால் என்ன பயன்?

    * அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் மாணவர்களின் வாக்குகள் தேவை என்பதால் மடிக்கணினி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    * நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ளது.

    * கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து என்னவானது?

    * டெல்டா மாவட்டங்களில் 15 நாட்கள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் நாசம்.

    * 15 நாட்களாக நெல் மூட்டைகளை காவல் காத்துக்கொண்டிருக்கிறோம் என விவசாயிகள் கூறினர்.

    * டெல்டாவில் பயிர் பாதிப்புகளை பார்க்காமல் ரெயில் நிலையத்திற்கு சென்றார் உதயநிதி.

    * விவசாயிகளை பார்ப்பதற்கு அஞ்சிதான் பார்க்காமல் சென்று விட்டார் துணை முதலமைச்சர்.

    * பொருட்களை வாங்கும் சக்தியை ஏழை மக்கள் இழந்து விட்டனர்.

    * மின் கட்டணத்தை 52 சதவீத அளவுக்கு தி.மு.க. அரசு உயர்த்தி இருக்கிறது.

    * மின் கட்டணம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கிறது என்று கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * தி.மு.க. ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது.

    * வரி மேல் வரி போட்டு மக்களை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

    * உடல் உறுப்பை விற்று வாழ்க்கையை நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

    * கிட்னி முறைகேடு தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    * தி.மு.க. ஆட்சியில் உடல் உறுப்பைக் கூட விட்டு வைக்கவில்லை.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மகளிருக்கு இலவச பயணம் என்று கூறுகிறீர்கள், ஆனால் பேருந்துகள் ஓட்டு உடைசலாக உள்ளன.

    * 2019-ல் அதிமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டன.

    * 77 சதவீத அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் பச்சைப்பொய் சொல்கிறார்.

    * முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்கள்.

    * அ.தி.மு.க.வின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது தி.மு.க. அரசு.

    * ஏதாவது ஒரு திட்டத்தை தி.மு.க.வால் கொண்டு வர முடிந்ததா?

    * கொரோனா காலத்தில் வரியே இல்லாமல் ஆட்சியை நடத்தினோம்

    * கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது என்று கூறினார். 

    • அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம்.
    • தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?

    அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தீய சக்தி தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.

    * அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம்.

    * நாட்டு மக்களைத்தான் ஜெயலலிதா தனது வாரிசாகப் பார்த்தார்.

    * பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் தெரியும்.

    * 2026 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    * அ.தி.மு.க. ஆட்சி குறித்து தி.மு.க.வால் விமர்சனம் செய்ய இயலவில்லை.

    * தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?

    * அனைத்து தேர்தல்களிலும் களப்பணி ஆற்றியவர்கள் இங்கே இருக்கிறீர்கள்.

    * நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100% வெற்றி உறுதி.

    * சூழ்ச்சியால்தான் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

    * 1991 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    * 2006 தேர்தலில் மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டிருந்தது தி.மு.க.

    * 2014 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை.

    * 2021 தேர்தலில் 75 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

    * 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களை அ.தி.மு.க. கூட்டணி வென்றெடுத்தது.

    * 2011 சட்டசபை தேர்தலில் கலைஞர் இருந்தபோது கூட எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க.வுக்கு இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×