என் மலர்
நீங்கள் தேடியது "Edappadi Palaniswami அதிமுக"
- திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
- அதிமுக கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றுவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது.
- இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று ராஜபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "உங்களுக்கு (திமுக) கூட்டணி வலிமையாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு மக்கள் வலிமையாக இருக்கிறார்கள்; ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வது மக்கள்தான். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது. மக்களிடத்தில் நீங்கள் செல்வாக்கை இழந்து விட்டீர்கள். தேர்தல் நேரத்தில் உங்களது கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும். இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை
50 மாதத்தில் ஒரு முறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் அறிக்கை விட்டிருக்கிறதா? ஆணவக் கொலை பற்றி பேச திமுக கூட்டணி தலைவர்கள் முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என இபிஎஸ் விமர்சனம்
- மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்தான் என்று சண்முகம் பதில்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கிருந்த பொதுமக்களிடம் உரையாற்றினார்.
பின்னர் அம்பைய தொகுதியில் பிரசாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளன. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
மக்கள் பிரச்சினைகளுக்காக போராடினால் தான் மக்கள் செல்வாக்கு இருக்கும். மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை. ஏனெனில் அடுத்தமுறை சீட் கிடைக்காது. கூட்டணியில் இருந்து கழட்டி விடுவார்கள். அந்த பயத்தில்தான் மவுனம் காக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது" என்று விமர்சித்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "ஈடி, ஐடி ரெய்டுக்கு பயந்துபோய் பாஜகவுடன் கூடா நட்பு கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கம்யூனிஸ்டுகளைப் பார்த்து சீட்டுக்காக பயந்துபோய் போராடவில்லை என்று கூறும் நீங்கள் மக்களுக்கான பிரச்சினையில் எத்தனைப் போராட்டங்களை நடத்தியுள்ளீர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? நாங்கள் நடத்திய போராட்டங்களின் பட்டியலை வெளியிடத் தயார். மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்தான்" என்று தெரிவித்துள்ளார்.
- வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- பெரம்பலூர், கன்னியாகுமரி, சேலம், தேனி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்போர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 20-ந்தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெரம்பலூர், கன்னியாகுமரி, சேலம், தேனி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்போர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்-செம்மலை, கன்னியாகுமரி-தளவாய்சுந்தரம், சேலம்-பா.வளர்மதி, தேனி-கோகுல இந்திரா, தஞ்சாவூர்-மோகன், திருச்சி-கல்யாண சுந்தரம் ஆகியோரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.






