என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பட்டியலை வெளியிடத் தயாரா? - இபிஎஸ்க்கு CPIM மாநில செயலாளர் சண்முகம் சவால்
    X

    பட்டியலை வெளியிடத் தயாரா? - இபிஎஸ்க்கு CPIM மாநில செயலாளர் சண்முகம் சவால்

    • மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என இபிஎஸ் விமர்சனம்
    • மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்தான் என்று சண்முகம் பதில்

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கிருந்த பொதுமக்களிடம் உரையாற்றினார்.

    பின்னர் அம்பைய தொகுதியில் பிரசாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளன. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

    மக்கள் பிரச்சினைகளுக்காக போராடினால் தான் மக்கள் செல்வாக்கு இருக்கும். மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை. ஏனெனில் அடுத்தமுறை சீட் கிடைக்காது. கூட்டணியில் இருந்து கழட்டி விடுவார்கள். அந்த பயத்தில்தான் மவுனம் காக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது" என்று விமர்சித்தார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "ஈடி, ஐடி ரெய்டுக்கு பயந்துபோய் பாஜகவுடன் கூடா நட்பு கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கம்யூனிஸ்டுகளைப் பார்த்து சீட்டுக்காக பயந்துபோய் போராடவில்லை என்று கூறும் நீங்கள் மக்களுக்கான பிரச்சினையில் எத்தனைப் போராட்டங்களை நடத்தியுள்ளீர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? நாங்கள் நடத்திய போராட்டங்களின் பட்டியலை வெளியிடத் தயார். மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்தான்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×