என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIADMK"

    • போதையில் யார் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
    • ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.

    போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்?

    அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?

    "தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான பொம்மை முதல்வருக்கும் தெரியாதா என்ன?

    போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,

    சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால்,

    எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?

    நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும்!!

    2026, விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும் என கூறினார்.

    • அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தார்.
    • சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    தனது பரப்புரை வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.

    மயங்கிய மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமனை அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா கைத்தாங்கலாக எழுப்பி பேருந்திற்குள் அனுப்பி வைத்தார். சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.

    சிறிது நேரம் பேருந்தில் ஓய்வெடுத்த சிறுணியம், உரையை முடித்து புறப்படும் போது எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வீர வாள் பரிசளித்தார். மணியம் மயங்கி விழுந்ததும், பழனிச்சாமி பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

    • திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் முழங்கினார்.
    • தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.

    இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி... தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே" என்று ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை. அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே முயற்சி செய்து வருகிறார். அவரைப் பார்த்து அதிமுகதான் பயப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
    • நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாண்புமிகு அம்மாவின் அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய விடியா திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று (18.12.2025) தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று இரவு 7.30 மணிக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து அவர்களை பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

    இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக்கூறி விடியா திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, விடியா திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடியா திமுக, Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்.

    • வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும் என அரித்மெட்டிக் கணக்கு போட்டிருக்கிறார் பழனிசாமி.
    • இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா தவிர வேறு எந்தக் கட்சிகள் இருக்கின்றன?

    பாஜகவோடு கூட்டணி வைக்கமாட்டோம் எனக்கூறிவிட்டு, மீண்டும் கூட்டணி வைத்திருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "நாட்டு மக்களுக்காகச் சூழ்நிலை கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம். பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை'' என்று 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரையில் நடந்த SDPI கட்சி மாநாட்டில் வீர வசனம் பேசிய பழனிசாமி, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதற்கு நியாயம் கற்பிக்கப் பொதுக்குழுவில் புலம்புவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

    "அடுத்த 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள்'' என ஜோதிடம் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. தன்னுடைய உறவினர்கள் வீட்டில் நடந்த இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து போய் அதிமுகவை அமித்ஷாவிடம் பத்திரமாக அடமானம் வைத்த பழனிசாமி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?

    "2019 எம்பி தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதியில் ஒன்றில்தான் வென்றோம், அப்போது நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்றோம்'' என புள்ளிவிவரம் சொல்கிறார் பழனிசாமி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-களால் ஆட்சிக்கு ஆபத்து என்றதும் அவர்களைத் தகுதிநீக்கம் செய்தார்கள். அந்தத் தொகுதிகளுக்கும் சேர்த்து அப்போது இடைத் தேர்தல் நடைபெற்றது. அறுதிப் பெரும்பான்மையை இழந்துவிடுவோமோ, ஆட்சி கவிழ்ந்துவிடுவோமோ என அஞ்சி அந்த 9 தொகுதிகளில் மட்டுமே குறியாக வேலை பார்த்து வென்றார்கள்.

    "நான் ஏழாவது பாஸ்னே. நீங்க எஸ்.எஸ்.எல்.சி ஃபெயிலுனே. பாஸ் பெருசா ஃபெயில் பெருசா'' என செந்தில் காமெடி போலப் பேசியிருக்கிறார் பழனிசாமி. "2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளை திமுகதான் வென்றது. ஆனால், நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் 10 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவே அதிக வாக்குகள் பெற்றது. அப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வாங்கிய வாக்குகள் இரண்டையும் சேர்த்தால் 41.33 சதவிகிதம். இதனைக் கணக்கு போட்டுப் பார்த்தால் 84 சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறோம். எனவே, வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும்'' என அரித்மெட்டிக் கணக்கு போட்டிருக்கிறார் பழனிசாமி.

    2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக தனித் தனியாகக் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, பன்னீர்செல்வம். தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இடம்பெற்றன. இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா தவிர வேறு எந்தக் கட்சிகள் இருக்கின்றன? அன்றைக்கு அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்.டி.பி.ஐ விலகிவிட்டது. தேமுதிகவின் நிலை உறுதியாகவில்லை. நிலைமை இப்படியிருக்க 2024 நாடாளுமன்றத் தேர்தல் 41.33 சதவிகித கணக்கு எப்படிப் பொருந்தும்? கணக்குப் பிள்ளை பழனிசாமிதான் பதில் சொல்ல வேண்டும்?" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
    • செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார்.

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண் டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி தனி அணியாக செயல் பட்டு வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக தற்போது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ளது.

    அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்ட பின் பாஜக ஓபிஎஸ்-ஐ கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் சசிகலா, தினகரன் ஆகியிருடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு மூத்த தலைவர் செங்கோட்டையன் அண்மையில் அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்தார்.

    இந்த சூழலில் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகி உள்ள சூழலில் ஓபிஎஸ் டெல்லி பயணப்பட்டுள்ளார். அங்கு பாஜகவின் அமித் ஷாவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.

    அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். இந்த சந்திப்பின் பின் சென்னை திரும்பியுள்ள ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார். செங்கோட்டையனை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.   

    • டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

    கேரளாவில் வரும் டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக போட்டியிடுவதாக கடந்த மாதம் அறிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர்கள் பெயரையும் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இடுக்கி மாவட்டத்தில் 19 இடங்கள், பாலக்காடு மாவட்டத்தில் 4 இடங்கள், திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2 இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். 

    கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியின் தொண்டர்களும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

    • இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
    • அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரே கட்சியின் வேறொரு கிளைக்கு மாறி இருக்கிறார்.

    தனது கட்சி பெயரில் உள்ள திராவிடத்தை மறந்துவிட்டார் இபிஎஸ். ஆளுநர் திராவிடத்தை அவமதித்தபோது இபிஎஸ் எனது எதிர்ப்பும் கூறவில்லை. 

    இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.

    அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கி தான் சேர்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது.

    அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார் 

    • கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்.
    • அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தார்.

    ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர்.

    இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   

    • வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • களத்தில் தயாராக இருக்குமாறு அதிமுக நிர்வாகிகளை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "டிட்வா" புயலின் காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    புயலின் தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு அதிமுக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    • SIR பணிகளுக்கு, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. SIR பணிகளுக்கு, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    SIR பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், "ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    சீமான் பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "SIR பணிகளால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் குறையும். SIR நடைமுறையை எதிர்க்கக் கூடாது. இது வழக்கமாக நடைபெறுவதுதான். பீகார் வெற்றிக்கு காரணமே SIR தான். பீகார் தேர்தல் வெற்றி அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். நிதிஷ்குமாரைப் போல 2026 தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார்" என்று தெரிவித்தார்.

    • அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது.
    • மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா?

    கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடி தான் எங்கள் டாடி என்று பேசியது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்த நிலையில் 'மோடி தான் எங்கள் டாடி' என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் பேசியுள்ளார்.

    சிவகாசியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது. மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா? மத்திய அரசில் இருப்பது உங்க ஐயா இல்லை. எங்கள் ஐயா மோடி தான் இருக்கிறார். எங்கள் டாடி தான் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

    ×