தவெகவிற்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வர தயாராக உள்ளனர் - எஸ்.பி.வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். திமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
தவெகவிற்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வர தயாராக உள்ளனர் - எஸ்.பி.வேலுமணி
Published on

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். இதனிடையே அதிமுகவில் இருந்து நிறைய தலைவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் மற்றும் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

இந்நிலையில், கோவையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் தற்போது அங்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர்" என்று தெரிவித்தார்.

எஸ்.பி. வேலுமணியின் ந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com