என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்.பி.வேலுமணி"
- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.
- திமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். இதனிடையே அதிமுகவில் இருந்து நிறைய தலைவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் மற்றும் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், கோவையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் தற்போது அங்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
எஸ்.பி. வேலுமணியின் ந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.
- விஜயை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். திமுகவின் மீது கடுமையாகந விமர்சனங்களை முன்வைத்து வரும் விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.
இதையடுத்து விஜயை அதிமுக அத்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.அவ்வகையில் கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விஜயை கடுமையாக தாக்கி பேசினார்.
கோவை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "விஜய் கரூர் செல்கிறார். 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதை கண்டுகொள்ளாமல் சென்னை சென்ற விஜய் திரும்பி வரவே இல்லை.." அவர் உடனே மருத்துவமனைக்கு போயிருக்க வேண்டாமா... காப்பாத்தியிருக்க வேண்டாமா... இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
விஜய்யின் பட ரிலீஸ் பிரச்னையின்போது அவர் என் வீட்டில் இருந்தார், நான்தான் அவரை காரில் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து, படத்தை ரிலீஸ் செய்ய உதவினேன்" என்று தெரிவித்தார்.
- தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன
- சிவராத்திரி விழாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
இதனால் அந்தக் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு செல்லுமா? அல்லது மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையுமா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம்பெறும் என்று மட்டும் அவர் அறிவித்து இருந்தார்.
தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தே.மு.தி.க. இதுவரை பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பிரேமலதா ஒரே மேடையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.
இந்த நிலையில் மீண்டும் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்குள் கூட்டணி வடிவத்தை இறுதி செய்ய அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கு கோவையில் நேற்று நடந்த சிவராத்திரி விழா தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியினர் கூறி வருகிறார்கள்.
நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி எல்.முருகன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முக்கியமாக இந்த விழாவில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் முன் வரிசையில் அருகருகே அமர்ந்து இருந்தனர்.
முன்வரிசையில் இருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது எஸ்.பி.வேலுமணி, பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
இருவரும் அருகருகே அமர்ந்து சிவராத்திரி விழாவை பார்த்தனர். அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டனர். அந்த சமயம் கூட்டணி தொடர்பாகவும் அவர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பானது அ.தி.மு.க. பா.ஜ.க. தேமு.தி.க. கூட்டணிக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றும் பிரேமலதா விஜயகாந்த் கோவையில் தான் தங்கி உள்ளார். அவருடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தெரிகிறது.
மேலும் கோவையில் தங்கி இருக்கும் பிரேமலதா விஜயகாந்த்தை கோவை மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினரை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மகா சிவராத்திரி விழாவில் ஆண்டுதோறும் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பார். நேற்று பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினருடன் சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். இந்த சந்திப்பு இயல்பாக நடந்தது. இதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தபடி தொண்டர்கள் மக்கள் விரும்பும் கூட்டணியை நிச்சயம் அமைப்பார்.
- கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
- இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத்திற்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து முன்னணி நடத்திய மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள்அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அண்ணா, பெரியாரை விமர்சிக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
- ரஜினிகாந்தால் திருமணத்தை நேரில் சென்று பங்கேற்க முடியவில்லை.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார். ஆனால் படப்பிடிப்பு பணிகளில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திவிட்டதால் ரஜினிகாந்தால் திருமணத்தை நேரில் சென்று பங்கேற்க முடியவில்லை.
அதனால் படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் இன்று எஸ்.பி. வேலுமணி வீட்டிற்கு சென்று மணமக்களை வாழ்த்தி அவருக்கு மிகவும் பிடித்தமான ஸ்ரீ ராகவேந்திரா அவர்களுடைய உருவ படத்தை பரிசாக வழங்கினார். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
- வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம்.
- ஆட்சிமாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி
சென்னை:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான 48 பக்க தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. முறைகேடு நடந்ததாக நேரடியாக வழக்கு பதியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் தவறால் அல்லாமல் வேலுமணி செல்வாக்கால் முறைகேடு நடந்ததாக நிரூபித்திருந்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க மாட்டாது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்?
அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீட்டில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்.
தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதால் ரத்து செய்ய முடியாது, என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொண்டாமுத்தூர் ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு.
- 19 மாதங்கள் ஆகிவிட்டது.
வடவள்ளி
சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற வில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கும், கோவை மாவட்டத்திற்கும், தமிழக த்துக்கும் எதுவும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. தற்போது அமைச்சராகி உள்ள உதயநிதி ஸ்டாலின் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.
அ.தி.மு.க. அரசு கட்டிய பாலங்களில் தி.மு.க. போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் தி.மு.க. அரசோ சொத்து வரி, மின் கட்டண உயர்வால் மக்களை வாட்டி வதைக்கிறது.
குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 கொடுப்பதாக சொன்னார்கள். 19 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அந்த திட்டம் பற்றி பேச்சே இல்லை.
இங்கு இருக்கும் காவல்துறை என் கட்சி காரர்கள் மீது பொய் வழக்கு பதிய வேண்டாம். நடுநிலையாக செயல்படுங்கள். தமிழகத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைப்பெறுகிறது.
அ.தி.மு.க. போராட்டம் அறிவித்த பிறகே, பொங்கல் பரிசாக கரும்பு கொடுக்கிறார்கள். தி.மு.க.விற்கு வாக்கு அளித்தவர்கள் எதற்கு வாக்களித்தோம் என்று வேதனைப்படுகின்றனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 இடங்களையும் வெல்வோம். சட்டமன்றதேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.
- காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கோவை,
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேற்று சட்ட சபையில் பேசியதாவது:-
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருமாள்கோவில்பதி, பச்சினான்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் கடுமையாக போராடி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின்படி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, கேரள மாநிலம் மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது காட்டுத்தீ ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது. காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வனப்பகுதியை சுற்றி வாழும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், காட்டுத்தீ இந்த அளவுக்கு பரவ விடாமல் தடுத்து இருக்கலாம்.
அடுத்த மாதம் வெயில் இன்னும் கடுமையாக இருக்கும். எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
மக்களையும், வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கோவை,
கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் ஆகஸ்டு 20-ந்தேதி மதுரையில் நடக்க உள்ள வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்பது, கோவையில் தி.மு.க அரசுக்கு எதிராக நாளை(20ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்காக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தபடி உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட வில்லை. ஆளும் தி.மு.க அரசு தொண்டாமுத்தூர் தொகுதியை கடந்த 2 ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறது.
எனவே ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.
ஆளுங்கட்சி எத்தனையோ பொய் வழக்குகள் போட்டாலும், எதற்கும் அஞ்சாமல் அ.தி.முக தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார்.எனவே தி.மு.க ஆட்சியை தூக்கி வீச மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
- 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவை.
கோவை இதய தெய்வம் மாளிகையில் கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பிவேலுமணி, கோவை மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பியுமான ஜெயவர்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் 5 ஆண்டுகளில் கொண்டு வந்த 50 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
தற்போது இருக்கின்ற தி.மு.க அரசு எந்த விதமான மக்கள் நல திட்டதங்களையும் கொண்டு வரவில்லை. நாம் ஏற்கனவே உருவாக்கிய திட்டங்களை தங்களுடைய திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மிக துரிதமாக வேலை செய்து, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பொறுப்பாளர் ஜெயவர்த்தனன் பேசும்போது, கோவை மாவ ட்டத்தில் இருக்கக்கூடிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் எளிய மக்களின் துயர் துடைப்பவர்களாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் நலத்திட்ட ங்களை மக்களி டம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக பெருவாரியான வெற்றிகளை பெற வேண்டும் அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர் ஜெயராம், முன்னாள் அமைச்சர் செம.வேலுசாமி, பீளமேடு துரைசாமி, பிரபாகரன், புரட்சி தம்பி, லாலி ரோடு ராதா, செல்வகுமார், சிவகுமார், சாரமேடு சந்திரசேகரன், இலக்கடை ஜெயபால், காலணி கருப்பையா, ராஜ்குமார், மனோகரன், பப்பையா ராஜேஷ், கமலக்கண்ணன், மெட்டல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். ’டோன்ட் கேர்’ என விட்டுவிடுங்கள்.
- மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்
"3% - 4% வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில் நான் சேருவதாகச் சொல்கிறார்கள். இதுக்குபோய் நான் பதில் சொல்லனுமா? Don't Care-னு விட்டுட்டு போயிடணும்" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பாஜக ஐடி விங் வெளியிடும் தகவல்களை எல்லாம் பார்க்க நேரமில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. உலக அளவில் அதிக தொண்டர்களைக் கொண்ட 7வது கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சி நமது தாய்வீடு போல. சாதாரணமாக இருந்த நம்மை எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்த கட்சி அதிமுக. எல்லோரும் தாய் வீட்டிற்குத் தான் வருவார்கள். தாய் கழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 'டோன்ட் கேர்' என விட்டுவிடுங்கள். கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை சொல்லியே வாக்காளர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்போம். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்
சிறப்பான முறையில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வோம். கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.
- பூங்கொத்து வழங்கி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
- பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் முடிவு அடுத்த மாதம் வெளியானதும் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்படும் என்றும், அப்போது கட்சிக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? அல்லது எஸ்.பி.வேலுமணியா? என தெரிய வரும் என்றும் தி.மு.க. அமைச்சர் ரகுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.
இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க தவறி விட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய போது அ.தி.மு.க.வில் உள்ள பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தனர்.
ஆனால் எஸ்.பி.வேலுமணி மட்டும் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது எக்ஸ் வலைதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
எக்ஸ் வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி எதற்காக நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் பேசத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை வந்து அடையாரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தன்னுடன் வந்திருந்த ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை திறம்பட நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் சில பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து அனைவரும் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத் ேதாம். அவரது தலைமையில் கட்சி வீறுநடை போடுவதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம் அதன் கீழ் எல்லோரும் இருக்கிறோம். இங்கு பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
செங்கோட்டையனின் பேரன் திருமணம் வரவேற்பு கோவையில் ஜூன் 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்துகிறார்.
எனவே கட்சி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெளியில் பிதற்றுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.
இதேபோல் மூத்த தலைவர்களும் தி.மு.க.வை சாடி உள்ளனர்.






