என் மலர்
நீங்கள் தேடியது "உயர் நீதிமன்றம்"
- கேரளா முழுமையான நல்லிணக்கத்துடன் வாழ்கிறது.
- கேரள மக்களின் கவலைகளை "புறக்கணிக்க முடியாது", ஏனெனில் படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது
உண்மையில் மத உணர்வுகளை புண்படுத்தும் பல படங்களுக்கு தணிக்கை வாரியம் சான்று வழங்குகிறது. ஆனால் ஒன்றும் இல்லாத படத்திற்கு இழுத்தடிக்கிறது என கடந்த காலங்களாகவே தணிக்கை வாரியம்மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கும் வகையில் கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை வாரியம்.
'தி கேரளா ஸ்டோரி' கடந்த 2023ஆம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம். கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்தை இப்படம் கொண்டிருந்தது. இது வெளியான சமயத்தில் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் வசூல்ரீதியாக வெற்றிப்பெற்றது.
இதன் முதல்பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது.
டிரெய்லரில் இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கேரள உயர் நீதிமன்றத்தில் படத்தின் தணிக்கை சான்றிதழ் ரத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நாளை படத்தை பார்ப்பதாக கூறியுள்ளது. படத்தின் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், நீதிமன்றங்கள் பொதுவாக கலை வெளிப்பாட்டில் தலையிடத் தயங்கினாலும், கேரள மக்களின் கவலைகளை "புறக்கணிக்க முடியாது", ஏனெனில் படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
விசாரணையின்போது பேசிய அவர்,
"கேரளா முழுமையான நல்லிணக்கத்துடன் வாழ்கிறது. ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கேரளா முழுவதும் நடப்பதாக நீங்கள் சித்தரித்துள்ளீர்கள். இது தவறான ஒரு தகவலை கொடுப்பதுடன், மக்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டவும் கூடும். இங்குதான் தணிக்கை வாரியம் தனது பணியைச் செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் இதைக் கருத்தில் கொண்டீர்களா?"
பொதுவாக, நான் எந்தப் படத்திலும் தலையிடுவதில்லை. கலை சுதந்திரம். ஆனால், அது உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, கேரளா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள், இது சில வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும். நான் நாளை படத்தைப் பார்ப்பேன். நாளை படத்தின் திரையிடலை நீங்கள் ஏற்பாடு செய்யலாம்." என தெரிவித்தார்.
முன்னதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் எந்த மதத்தையோ அல்லது பிரிவையோ பாதிக்கும் எந்த பகுதியும் இல்லை என்றும், படம் எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்றும் வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில், இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட இளம் பெண்கள் குழுவை 'லவ் ஜிகாத்தின் பலியானவர்கள்' (Victims of Love Jihad) என்ற அடையாளத்துடன் முன்னிறுத்துவதாகவும், ஆனால் கதையில் காட்டப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட கேரளாவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் வாதிட்டனர். நிலைமை இப்படி இருந்தும், இப்படத்திற்கு 'தி கேரளா ஸ்டோரி 2' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது கேரளச் சமூகத்தை மோசமான முறையில் சித்தரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து திரையிடல் நேரம் மற்றும் இடம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இருந்து படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும்
- வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம்
ஜன நாயகன் படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.
மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சினையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
வழக்கின் பின்னணி
ஜனவரி 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி (நீதிபதி ஆஷா), படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. ஜனவரி 27, 2026 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "தணிக்கை வாரியத்தின் தரப்புக் கருத்தைக் கேட்காமல் தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு" எனக் கூறி அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டது.
இதனிடையே தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் எனக் கூறி வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். தற்போது, இந்த வழக்கு மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்றுள்ளது.
ஜன நாயகன்
ஹெச்.வினோத் நடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி, பொங்கலை முன்னிட்டு ஜன.9 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.
- உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு
- 'வா வாத்தியார்' படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவு
'மெய்யழகன்' படத்திற்கு பிறகு. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் எப்போதோ வெளியாகி கவனம் ஈர்த்தன. ஆனால் ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது. காரணம் படத்தை ஸ்டுடியோ க்ரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து ரூ.21 கோடியை கடனாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இப்பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என, அர்ஜுன்லால் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தது.
இந்நிலையில் ரூ. 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்த பட நிறுவனம் தயாராக இருப்பதால், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்து விட்டதாக தெரிவித்து படத்திற்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, 'வா வாத்தியார்' படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவிட்டனர்.
- Bad Girl திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
- ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது.
பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.
இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது
இந்நிலையில், சிறார்களை தவறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 'பேட் கேர்ள்' படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இந்நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உள்ளது
- அனைத்து சமூகத்தினரிடமும் நன்கொடை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உள்ளது. சாதியை காரணமாகக் காட்டி, கோயில் விழாவில் குறிப்பிட்ட சமூகத்தினரிடம் நன்கொடை பெற மறுப்பதும் அதில் ஒன்றுதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவில், குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படுகிறது எனத் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சமூகத்தினரிடமும் நன்கொடை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம்.
- ஆட்சிமாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி
சென்னை:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான 48 பக்க தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. முறைகேடு நடந்ததாக நேரடியாக வழக்கு பதியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் தவறால் அல்லாமல் வேலுமணி செல்வாக்கால் முறைகேடு நடந்ததாக நிரூபித்திருந்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க மாட்டாது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்?
அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீட்டில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்.
தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதால் ரத்து செய்ய முடியாது, என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான்கு முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கவில்லை என காவல்துறை தகவல்
- ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை:
கள்ளகுறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், மாணவி பயன்படுத்திய சொல்போனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரயிடப்பட்ட உறைகள் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு முறை இந்த வழக்கு சம்பந்தமாக சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த விசாரணையானது முடிவடையும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர், பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மாணவி ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை என்றும் விடுதி வார்டன் செல்போனில் இருந்துதான் பேசியதாகவும் ராமலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது கேட்டதுடன், செல்போனை ஒப்படைக்காவிட்டால் விசாரணை எப்படி நிறைவடையும்? என்று கேள்வி எழுப்பனார். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியையும் நீதிபதி எழுப்பினார்.
இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவியின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்றும், அதற்காக விசாரணை நடத்தும்படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து செல்போன் இருந்தால் அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.
- வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.
- கடந்த 22ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.
ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த 22ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார்.
- அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
- இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.
ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த 22-ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில். தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார்.
- மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- தமிழக அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் கருத்து.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு வாதம் செய்தது.
இந்நிலையில், "ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் என்ன தவறு" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், " ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுக்கவே தடை சட்டம். மக்கள் நலன் தான் மிக முக்கியம். மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு வாதத்தின் முடிவில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு.
- பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொன்னேரி:
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு தடைவிதித்து அறிவிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதை முன்னிட்டு, பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் ஆலோசனைப்படி நகர செயலாளர் செல்வக்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நகரத் துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் நகரத் துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள், செந்தில்குமார், சுரேஷ் கோவிந்தராஜ், அதிமுக நிர்வாகிகள் சம்பத், அருன்ராஜ், அருண், ஸ்ரீதர் திருக்குமார், நாகராஜ், செல்வம், வெங்கடேசன், லட்சுமி, சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது.
- ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால் இது மேலும் குற்றத்தை தூண்டுவதற்கு வகை செய்யும் என நீதிபதி வீரேந்திர சிங் ஒரு வழக்கில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் இமாச்சல பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால், வழக்கை ரத்து செய்யலாமா? என்பது முடியுமா? என்பது குறித்து கருத்து தெரிவித்தது.
அப்போது நீதிபகள் தர்லோக் சிங் சவுகான், சத்யன் வைத்யா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் கூறிய கருத்து பின்வருமாறு:-
போக்சே சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்டவரும் திருமணம் செய்து கொள்ள உண்மையிலேயே சமரசத்திற்கு முன்வந்தால், அவர்களின் திருமண வாழ்க்கையை பாதுகாக்க போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யலாம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதிப்பது, உண்மையிலேயே தம்பதியின் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். நீதியும் இதரப்பினரை சமரம் செய்து கொள்ள அனுமதிக்க கோரும்.
ஆனால், தண்டனையில் இருந்து தப்புவதற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டது அவர் தானாகவே எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது, ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை தீர்த்துக் கொண்டார்கள் என்ற அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இறுதியில் ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைச் சுற்றியே சுழல்கிறது. எனவே, நேரான எந்தவித சூத்திரத்தாலும் உருவாக்க முடியாது.
இருந்தபோதிலும் பயங்கரமான, கொடூரமான பாலியல் குற்றங்கள் ஒருபோதும் சமரசத்தின் விசயமாக இருக்க முடியாது.






