search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caste discrimination"

    • எஸ்பி403 சட்டத்திற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன
    • பாகுபாட்டை களைய முன்னரே பல சட்டங்கள் உள்ளன என கவர்னர் தெரிவித்தார்

    அமெரிக்காவில் உள்ள தெற்காசிய மற்றும் இந்து மதத்தை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்கள் சாதிப்பாகுபாடுகளை ஊக்குவிப்பதாக கூறி, அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து இந்து மதத்தை சேர்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டின் கலிபோர்னியா மாநில சட்டசபையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆப்கானிஸ்தான் வம்சாவளி அமெரிக்கரான அயிசா வகாப் எனும் உறுப்பினரால் கடந்த மார்ச் 22 அன்று "எஸ்பி403" (SB403) எனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன.

    ஆனால், இம்மசோதா சட்டமாவதை அம்மாநில கவர்னர் கெவின் நியூசாம் (Gavin Newsom) தனது "வீட்டோ" (Veto) அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விட்டார்.

    நேற்று, இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

    கலிபோர்னியாவில் எந்த நாட்டினராக இருந்தாலும் எங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மரியாதையுடனும் சம உரிமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் எப்போதுமே உறுதியாக உள்ளோம். சாதி உள்ளிட்ட எந்த பாகுபாடுகளாலும் மக்கள் புறக்கணிக்கப்படாதிருக்கும் வகையில் பாதுகாக்க இங்கு ஏற்கெனவே பல வலுவான சட்டங்கள் உள்ளன. பாலினம், இனம், உடல் நிறம், மதம், பூர்வீகம் மற்றும் நாடு உள்ளிட்ட இதர காரணங்களுக்காக மக்களிடையே பாகுபாடு காட்டுவது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய சட்டம் தேவையில்லை என கருதுவதால் நான் இதில் கையெழுத்திட போவதில்லை.

    இவ்வாறு கெவின் நியூசாம் தெரிவித்தார்.

    "சாதி எனும் சர்ச்சைக்குரிய வார்த்தையை வேண்டுமென்றே சேர்த்து, மக்களின் சிவில் உரிமைகளை தடுக்கும் முயற்சியாக இந்துக்களிடையே அச்சத்தையும் பிரிவையும் ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை சட்டமாக்காமல் தடுத்ததன் மூலம் கவர்னர் நியூசாம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்திருக்கிறார்" என கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்விதமாக அம்மாநிலத்தில் வாழும் தெற்காசிய மற்றும் இந்துமதத்தை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    ஆனால், இச்சட்டத்தை கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வந்த ஈக்குவாலிட்டி லேப் (Equality Lab) அமைப்பினர், சட்டசபை உறுப்பினர் வகாப், மற்றும் வேறு சில அமைப்புகள் தற்போதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • வீட்டிற்கு வெளியே சாலையின் நடுவே தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு செல்கிறார்
    • மக்களுக்கு கோவிட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பணியாளர்கள் எடுத்த வீடியோ

    இணையத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ பரவியது.

    அதில் ஒரு பெண்மணி தனது வீட்டு வாசலில், தனது முகத்தை மூடிக்கொண்டு, வேறு சில பெண்மணிகளை வீட்டிற்கு உள்ளே வர விடாமல் வெளியே நிற்குமாறு சைகை காட்டுகிறார். அவர்கள் தூர நிற்கும் போது இந்த பெண்மணி வீட்டு வாசலில் உள்ள சாலைக்கு நடுவில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு செல்கிறார்.

    "இந்த வீடியோவை கண்டால் இட ஒதுக்கீடு தேவை என்பது விளங்கும். இப்படி ஒரு பாகுபாடு பிராமண அல்லது தாக்கூர் அல்லது பனியா சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு எதிராக நடைபெறுமா?" என ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டு ஒரு குறுஞ்செய்தியையும் இணைத்திருந்தார்.

    இந்த வீடியோவை உண்மை என நம்பிய பல பயனர்கள் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, அந்த பெண்மணியை கடுமையாக விமர்சித்து, உயர் வகுப்பை சேர்ந்தவர்களையும் தாக்கி பரவலாக கருத்துக்களை வெளியிட்டனர்.

    ஆனால் ஆய்வில் இந்த வீடியோ உண்மையில் ஜூன் 22, 2020 அன்று கோவிட் காலகட்டத்தில் நிலவிய கோவிட சுகாதார கட்டுப்பாடுகளின் போது ஒரு வீட்டு வாசலில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரிய வந்துள்ளது.

    கோவிட் கட்டுப்பாடுகள் குறித்து அக்காலகட்டத்தில் மக்களிடையே நிலவிய அச்சத்தை போக்கும் வகையில் கர்நாடகாவின் பெங்களூரூவில் சுகாதார பணியாளர்கள் எடுத்திருந்த வீடியோ என தெரிய வந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதாவுக்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது.
    • மசோதாவை கலிபோர்னியா சட்டசபை தாமதமின்றி நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தல்

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 34 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஒரு வாக்கு எதிராகவும் பதிவானது. இதனால் மசோதா நிறைவேறியது.

    இதையடுத்து மாநில பிரதிநிதிகள் சபையில் மசோதா அறிமுகம் செய்யப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டதும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அமெரிக்காவில் இதுபோன்ற சட்ட மசோதாவை நிறைவேற்றும் முதல் மாநிலம் கலிபோர்னியா என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மசோதாவை அறிமுகம் செய்த செனட்டர் ஆயிஷா வகாப்புக்கு அமெரிக்கவாழ் இந்திய முஸ்லிம்கள் கவுன்சில் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டுக்கு இடமில்லை என்ற வலுவான செய்தியை இந்த மசோதா வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

    மசோதாவை கலிபோர்னியா சட்டசபை தாமதமின்றி நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேணடும் என்று இந்திய முஸ்லிம் கவுன்சில் நிர்வாக இயக்குனர் ரஷித் அகமது வலியுறுத்தினார். கலிபோர்னியாவை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களும், பாராளுமன்றமும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் எழுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக அனுசுயா பணியாற்றினார். அவர் சாதி பாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை தனியாக அமர வைத்ததாக புகார் எழுந்தது.

    இது பற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒரு பெண் அனுசுயாவை செருப்பால் தாக்கினார். பதிலுக்கு அவரும் தன்னுடைய செருப்பால் அவர்களை தாக்கினார். இவை அனைத்தும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அனுசுயாவை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் அனுசுயா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனுசுயா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    ×