என் மலர்
நீங்கள் தேடியது "Madurai Chithirai Festival"
- மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
- திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது.
இத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்தனர்.
அப்போது, இஸ்லாமியர்கள் பலர் பக்தர்களுக்கு சாதி, மத பாகுபாடு இன்றி நீர், மோர், உணவு வழங்கினர்.
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவை பாராட்டி நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரூரில் பட்டியலின மக்கள் வழிபட பாகுபாடு காட்டியதாக எழுந்த புகார் மீதான வழக்கதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
அதன்படி" வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில், எங்கும், எதிலும் சாதி பாகுபாடு கிடையாது.
மதுரை சித்திரை திருவிழாவை போல, எந்த சாதிய பாகுபாடும் இல்லாமல், அனைத்து பகுதிகளிலும் விழா நடத்தலாமே.
மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.
திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று குறிப்பிட்டனர்.
- இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை:
திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்.
இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என நகரமே 2 வாரங்கள் விழாகோலம் பூண்டிருக்கும்
இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கமாக வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி மற்றும் ஆயிரம்பொன் சப்பரம் தலை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிற்பகல் 11 மணிக்கு மேல் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.
அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் இரவு எழுந்தருளுகிறார். 13-ந்தேதி (செவ்வாய்கிழமை) வீர ராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
அங்கு மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை மோகன அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் ராஜாங்க அலங்கராத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார்.
அன்று இரவு அங்கிருந்து பூப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் 15-ந்தேதி இருப்பிடம் நோக்கி செல்கிறார். 16-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் கோவிலுக்கு கள்ளழகர் வந்தடைகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையம் யக்ஞ நாராயணன் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு போய் உள்ளது.
மேலும் முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இந்த தண்ணீர் தேனி மாவட்ட குடிநீருக்கு கூட போதவில்லை. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை.
சித்திரை திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை 5 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 1500 கன அடி, குடிநீருக்கு 60 என மொத்தம் 1560 கன அடி வீதம் வைகை ஆற்றில் செல்கிறது.
தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு 19-ந் தேதி மாலை நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 19-ந் தேதி காலை மதுரையை சென்றடையும். இதன்மூலம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 40.45 அடியாக குறைந்துள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.10 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி அப்படியே திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.35 அடியாக உள்ளது. வரத்து இல்லை 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த 2 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியாறு 14.4, கூடலூர் 1.2, வைகை அணை 6.2, சோத்துப்பாறை 7, கொடைக்கானல் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #MaduraiChithiraiFestival #VaigaiDam






