என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை ஆறு"

    • மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.
    • பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை:

    வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று முன்தினம் 71 அடி உயரமுள்ள வைகைஅணை 69 அடி வரை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 3,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நேற்று காலை மதுரை வந்தடைந்தது. இதனையொட்டி வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வைகை ஆறு பாய்ந்தோடும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.

    இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வைகை ஆற்றில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். 

    • கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.
    • காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந்தேதியும், தேரோட்டம் 9-ந்தேதியும் நடைபெற்றது.

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

    இந்நிலையில் இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 13-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத் தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 15-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • மாலை 4.30 மணியளவில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    • கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந்தேதியும், தேரோட்டம் 9-ந்தேதியும் நடைபெற்றது.

    தீர்த்த திருவிழா, தேவேந்திர பூஜை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்மன் எழுந்தருளல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-பவளக்கனி வாய் பெருமாள் 16 கால் மண்டபத்தில் விடைபெறும் நிகழ்வு உள்ளிட்டவைகளுடன் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் முடிந்தது.

    இதற்கிடையே திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அங்கு 2 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் 3-ம் நாளான நேற்று காலை திருவீதி உலா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை (12-ந்தேதி) நடைபெறுகிறது. இதற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று நேற்று மாலை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக மாலை 6 மணியளவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றிப்பட்டை, கரங்களில் வளைத்தடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பாடாகினார்.

    விரதம் இருந்து வரும் பக்தர்கள் ஆடியபடி அழகருடன் வந்தனர். வழிநெடுகிலும் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கள்ளழகர் எழுந்தருளினார். தொடர்ந்து கள்ளழகர் சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்பு கடச்சனேந்தல் சென்ற கள்ளழகர் அங்கு அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



    அங்கிருந்து புறப்பட்டு மூன்று மாவடிக்கு இன்று காலை 5.30 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர். அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். அழகர், கருப்பணசாமி, அனுமார் வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், தீப்பந்தம் ஏந்தியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் கே.புதூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். அங்கும் திரளான பக்தர்கள் திரண்டு நின்று கள்ளழகருக்கு எதிர் சேவை அளித்தனர். இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு கள்ளழகர் சென்றடைகிறார்.

    பின்பு அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் மாலை 4.30 மணியளவில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மாலை 4.50 மணி முதல் 5.30 மணி வரை அம்பலக்காரர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர் அங்கிருந்து புறப்பட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.

    அங்கு அவருக்கு இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவில் அங்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன் பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் ஆண்டாள் சூடிகளைந்த மாலை கள்ளழகருக்கு அணிவிக்கப்படுகிறது.

    அதனை ஏற்று ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கள்ளழகர் காட்சியளிக்கிறார். அதனைத் தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மதுரை வைகை ஆற்றுக்கு வருகிறார். அங்கு அதிகாலை 5.45 முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 13-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத் தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 15-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் ஈடுபடவுள்ளனர்.

    • மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளி மலையில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இது தவிர கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.

    இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மழை பெய்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும். மூல வைகை ஆறு வறண்டுள்ளதால் வைகை அணைக்கு 25 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.51 அடியாக சரிந்துள்ளது.

    மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2802 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1593 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.70 அடியாக உள்ளது. 27 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணை நீர்மட்டம் 39.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. கூடலூர் 2.6, சண்முகாநதி 3.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை:

    திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்.

    இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என நகரமே 2 வாரங்கள் விழாகோலம் பூண்டிருக்கும்

    இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கமாக வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி மற்றும் ஆயிரம்பொன் சப்பரம் தலை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பிற்பகல் 11 மணிக்கு மேல் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.

    அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் இரவு எழுந்தருளுகிறார். 13-ந்தேதி (செவ்வாய்கிழமை) வீர ராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    அங்கு மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை மோகன அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் ராஜாங்க அலங்கராத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார்.

    அன்று இரவு அங்கிருந்து பூப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் 15-ந்தேதி இருப்பிடம் நோக்கி செல்கிறார். 16-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் கோவிலுக்கு கள்ளழகர் வந்தடைகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையம் யக்ஞ நாராயணன் தெரிவித்துள்ளனர்.

    • பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்ததை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
    • கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வானம் பார்த்த பகுதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போதிய பருவமழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கவும் விரகனூர் அணையில் இருந்து கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை அபிராமம் பெரிய கண்மாயை வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்தது.

    இதையடுத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், சமூக ஆர்வலர் அருணாசலம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர். இதுகுறித்து விவசாய சங்க செயலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:-

    அபிராமம் பகுதி வானம் பார்த்த பூமி ஆதலால் விவசாயம் பாதிப்படைந்து நெற் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் வைகை ஆறு மூலம் கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையினருக்கும் மனு ெகாடுத்தும், பல கட்ட போராட்டங்களையும் நடத்தினோம்.

    அப்போதே தண்ணீர் திறந்து இருந்தால் நெல் விவசாயம் பாதிப்படைந்து இருக்காது. தற்போது எங்களது கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அபிராமம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    நெல் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும் என்றார்.

    • சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகை ஆற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்.
    • இந்த தகவலை நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மன்றக்கூட்டம் தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    10-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி கடந்த ஒரு ஆண்டாக நகராட்சி நிர்வாகம் தனது வார்டில் வளர்ச்சி பணிகளை செய்யாமல் புறக்கணிப்பதாக புகார் கூறும் வாசகங்கள் கொண்ட பதாகையை ஏந்தி வாயில் கருப்புதுணி கட்டி வந்து கூட்டரங்கில் தரையில் அமர்ந்து மவுனமாக இருந்தார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கவுன்சி லர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. பெரும்பா லான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் குடிநீர், கழிவுநீர், வடிகால் சாலை, தெருவிளக்கு அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியு றுத்தினர். கவுன்சிலர் சண்முகப்பிரியா பேசுகையில், ஆனந்த வல்லி சோமநாதர் சுவாமி கோவிலை சுற்றி தேரோடும் வீதிகளில் அதிகரித்து வரும் இறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மேலும் வீதிகளில் பழுதடையும் தெருவிளக்குகளை சரி செய்ய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தலைவர் மாரியப்பன் கென்னடி பேசியதாவது:-

    மானாமதுரை நகராட்சியில் கடந்த ஓராண்டில் ரூ.7கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் வீதிகளை சுத்தம் செய்வதில் ஏற்பட்டிருந்த தொய்வு தற்போது படிப்படியாக குறைந்து துப்புரவு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    வரும் காலங்களில் துப்புரவுப்பணி இன்னும் சிறப்பாக நடைபெறும். அனைத்து வீதிகளிலும் புதிய தெருவிளக்குகள் அமைத்து பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    மானாமதுரையில் விரைவில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. இதற்காக ரூ.5லட்சம் மதிப்பீட்டில் திருவிழாவிற்காக பொதுமக்கள் கூடும் நகர் பகுதி, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வியாபாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நகராட்சியில் தொழில் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எந்த வார்டும் புறக்கணிக்கவில்லை. தர்ணாவில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க. உறுப்பினரின் வார்டில் திட்டப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைகை ஆற்றின் குறுக்கே ரூ.30.60 கோடியில் மதகு அணை கட்டப்படுகிறது.
    • விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கட்டிக் குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக, வைகை ஆற்றின் குறுக்கே ரூ30.60 கோடி மதிப்பீட்டில் மதகு அணை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    இந்த அணைக்கட்டு மூலம் ஏற்கனவே கட்டிக் குளம் முகப்பில் உள்ள தலைமதகு வழியாக கட்டிக் குளம் கண்மாய்க்கும், வைகை ஆற்றின் வலது புறத்தில் புதிதாக தலைமதகு கட்டி மிளகனூர், முத்தனேந்தல் மற்றும் இதர கண்மாய்களுக்கு வலது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் பகிர்ந்தளிக்க முடியும்.

    மேலும் இந்த அணைக்கட்டின் மூலம் வைகை ஆற்றின் மிக குறைந்த அளவு நீர் வரத்து இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கவும், இதன் மூலம் உபரிநீரை தேக்கவும் இயலும். வைகை ஆற்றில் இருந்து உபரி வெள்ள நீரை மிளகனூர் கண்மாய் வழியாக சின்னக் கண்ண னூர், எஸ்.கரிசல்குளம் ஆகிய கண்மாய்களுக்கும், நாட்டார் கால்வாய் வழியாக ராஜகம்பீரம், அன்னவாசல் கண்மாய்கள் உள்பட 16 கண்மாய்களுக்கும் வெள்ள நீரை இந்த அணைக்கட்டு மூலம் வழங்க இயலும். இதனால் சுற்றியுள்ள 4269.00 ஏக்கர் பாசன நிலங்களும் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (சிவகங்கை) பாரதிதாசன், உதவி செயற்பொறி யாளர்கள் மோகன்குமார், முத்துப்பாண்டி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
    • பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கவுள்ள நிலையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.

    மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா ஆரம்பமாகிறது.

    இந்த திருவிழாக்களின் போது மானாமதுரை நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்குள் பொழுது போக்கு அம்சங்களாக ராட்டினங்கள், திருவிழாக்கடைகள் அமைக்கப்படும். மானாமதுரை பகுதியை சேர்ந்த மக்கள் திருவிழாவை காண வைகை ஆற்றுக்குள் கூடுவார்கள்.

    திருவிழாவிற்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் நகர் பகுதி வைகை ஆறு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவிழாவின் போது பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    • சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள்கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும்.இங்கு சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி வருகிறார்.அதன்படி இன்று அதிகாலை அதிர்வேட்டு முழங்க கோவிலில் இருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.

    வைகை பாலம் அருகில் உள்ள எம்.வி.எம். மருது மகால் முன்பு, பா.ஜ.க. விவசாயி மாநில துணைத் தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் கள்ளழகரை வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தண்ணீரை பீய்ச்சியடித்து கள்ளழகரை வரவேற்றனர்.

    பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணி, குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று இரவு வைகை ஆற்றில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு பேட்டை, முதலி யார்கோட்டை, சங்கங்கோட்டை ஆகிய பகுதி சென்று இரட்டை அக்ரஹாரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்புள்ள மண்டகப்படிக்கு வந்து சேரும்.

    யாதவர்கள் சங்கத்தின் சார்பில் விடிய, விடிய தசாவதாரம் நடைபெறும்.நாளை இரவு சனீஸ்வர்ன கோவில் முன்பு முதலியார் கோட்டை கிராமமக்கள் சார்பில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடையும்.

    • மானாமதுரை வைகையாற்றில் இறங்கிய வீர அழகர்
    • கோவிந்தா கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோம நாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10நாட்கள் சித்திரை திருவிழா நடை பெறும்.

    மதுரையில் நடைபெறு வது போல இங்கும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆனந்தவல்லி -சோமநாதர் கோவிலில் வைகையாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    வீர அழகர்கோவிலில் உள்ள மண்டகபடியில் கள்ளழகர் திருக்கோலத் துடன் சுந்தரராஜபெருமாள் பூப்பல்லக்கில் எழுந்தரு ளினார். நள்ளிர வில் எதிர்சேவை நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தியாக விநோத பெருமாள் கோவிலில் இருந்து வீர அழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு அணிந்து அப்பன் பெருமாள் கோவில் மற்றும் ரதவீதிகளில் வலம் வந்து ஆனந்தவல்லி, சோம நாதர் கோவில் முன்புள்ள வைகையாற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

    திருவிழாவை காண வைகையாற்றங்கரை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் திருக்கண் சாத்தி வீர அழகரை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீர அழகர் கோவிலில் வருகிற 10-ந்தேதி வரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது.

    • தேனூர் கிராமத்தில் கள்ளழகர் தோற்றத்தில் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
    • ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் (கள்ளழகர்) கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது. இதையொட்டி இன்று காலை சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் தோற்றத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.

    அப்போது வழி நெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து செம்பில் சக்கரை தீபம் ஏற்றி வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பூஜைகள் நடந்து வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.

    இன்று மாலை ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதைத் தொடர்ந்து வெளியூர் கிராமப்பெண்கள் திரு விளக்கு பூஜை நடைபெறும்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து உள்ளூர் பெண்கள் திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது. 2 நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்க ளுக்கு புத்தாடை வழங்கப் படுகிறது. இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.

    இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடக்கிறது. சுவாமி கோவில் வந்து சேருவார். பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் பொருளாளர் கவுதமன் உள்பட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×