என் மலர்

  நீங்கள் தேடியது "perumal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார்.
  • அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன.

  பெருமாள் கோவில் கொண்டிருக்கும் ஆலயங்களில், 12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 சிவாலயங்கள், 'திவ்ய தேசங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்' எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்...

  * திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோவில்.

  * ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகப் பெருமாள் கோவில்.

  * திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவில்.

  * திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.

  * பத்ரிநாத்தில் உள்ள பத்ரிநாராயணர் கோவில்.

  * நேபாளத்தில் சாளக்கிராமம் என்ற இடத்தில் உள்ள முக்தி நாராயணர் கோவில்.

  * புஷ்கரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீபெருமாள் ஆலயம்.

  * நைமிசாரண்யத்தில் உள்ள தேவராஜன் திருக்கோவில்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விரதங்களில் வருதினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது.
  • ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம்.

  வைகாசி மாதம் தேய்பிறையில் வருகிற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்ற பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி பாக்கியத்தைத் தரக்கூடியது.

  ஏகாதசி விரதத்தை மாந்தாதாவும், தந்து மாறனும் அனுசரித்து மேல் உலகம் அடைந்தார்கள். பிரம்ம தேவனின் 5-வது தலையைக் கொய்த சிவபெருமானே வருதினி ஏகாதசி விரதம் இருந்து பாவவிமோசனம் பெற்றார் என்கிறது ஏகாதசி புராணம்.

  வித்யா தானப் பலனை அளிக்கக்கூடியது வருதினி ஏகாதசி விரதம் அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும்.

  வருதினி ஏகாதசி விரதத்தின் மகிமைகளை பகவான் கிருஷ்ணனே பார்த்தனுக்குச் சொல்வதுபோல ஏகாதசி புராணம் விவரிக்கிறது. அதில் கிருஷ்ணன்,

  விரதங்களில் வருதினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். வருதினி ஏகாதசியோ பாவங்களைத் தீர்ப்பதோடு சகல செல்வ வளங்களையும் மேற்கொள்பவர்களுக்கு அருளும். இஷ்வாகு குலத்தில் பிறந்த தந்துமாரா என்னும் மன்னன் சிவபெருமானால் சபிக்கப் பெற்றான். அவன் பின்னாளில் தன் தவற்றை உணர்ந்து வருத்தினி ஏகாதசி விரதம் இருந்து வழிபட அவன் சாபம் நீங்கி நன்னிலை அடைந்தான்.

  இந்த விரதம் துன்பப்படும் இல்லத்தரசிகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டிய விரதம். வீட்டில் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்துவரும் பெண்கள் இந்த வருதினி ஏகாதசி அன்று விரதமிருந்தாலோ, பெருமாளை அன்றைய தினம் மனதால் நினைத்து வழிபட்டாலோ விரைவில் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் சேரும்" என்கிறார் கிருஷ்ணபரமாத்மா.

  ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 18 கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர்.
  • கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் பஜனை பாடியபடி சென்றனர்.

  தஞ்சாவூர்:

  இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜதர்சன சபை சார்பில் 24 கருடசேவை விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். அதன்படி 88-வது ஆண்டாக இந்த ஆண்டு 24 பெருமாள்கள் கருடசேவை விழா நடந்தது.

  விழாவின் தொடக்கமாக இன்று காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரை நரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது.

  அதைத்தொடர்ந்து அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர்.

  அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை தொழுத வண்ணம் முதலில் வர அவரை தொடர்ந்து நீலமேகப்பெருமாள் லட்சுமியுடன் மற்ற பெருமாள்களான நரசிம்மபெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்னபெருமாள், வேளூர் வரதராஜபெருமாள், கல்யாணவெங்கடேச பெருமாள், கரந்தை யாதவக்கண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்மபெருமாள், கோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுகவெங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசாமி பெருமாள், எல்லையம்மன்கோவில் தெரு ஜனார்த் தனபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேலராஜவீதி ரெங்கநாதபெருமாள், விஜயராமபெருமாள், நவநீதகிருஷ்ணன், சக்காநாயக்கன் தெரு பூலோக கிருஷ்ணன், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமசாமி பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயணபெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள், கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்பட்டனர்.

  கருடவாகனத்தில் எழுந்தருளிய அனைத்து பெருமாள்களும் வரிசையாக காலை 8 மணி முதல் 12 மணி வரை கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் பஜனைபாடியபடி சென்றனர்.

  அப்போது ராஜ வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர். அடுத்தடுத்து பெருமாள்கள் வந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பக்தர்கள் மனம் உருகி தரிசனம் செய்தனர். உலா வந்த பின்னர் பெருமாள்கள் மீண்டும் கொடிமரத்து மூலையை சென்றடைந்தனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தன. கருடசேவை வைபவத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  விழாவில் நாளை (20-ந் தேதி) நவநீத சேவையும், 21-ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம்.
  • திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன.

  ஏழு மலைகள்

  திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.

  ஏழு நாமங்கள்

  பெயரற்ற பரம்பொருளாகவும், அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டாலும் திருமலைவாசனுக்கு ஏழு முக்கிய பெயர்கள் இருக்கின்றன. அவை: ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி.

  ஏழு தீர்த்தங்கள்

  திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம்,

  சுவாமி புஷ்கரணி என்பவைதான் அவை.

  ஏழு தலை ஆதிசேஷன்

  ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம். பிரமோற்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் 'பெத்தசேஷ வாகனம்' என்ற ஏழுதலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.

  ஏழு மகிமைகள்

  திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை, ஸ்ரீனிவாச மகிமை, ஷேத்ர மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.

  ஏழு கலச ராஜகோபுரம்

  திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜ கோபுரத்திற்கு சப்த லோகங்களுடனும் தொடர்பு கொள்வது போல ஏழு கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  ஏழு முக்கிய இடங்கள்

  கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சுவாமி சன்னிதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சனேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை திருப்பதியில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலியுகத்தில் பெருமாள் அருளை எளிதில் பெறலாம்.
  • பெருமாள் அருளை பெற வழிமுறைகளில் சில....

  கலியுகத்தில் பெருமாள் அருளை எளிதில் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் சில.

  1. ஹரிசாம சங்கீர்த்தனம் செய்தல்.

  2. ஏகாதசி தினத்தில் உபவாசமிருந்து நாராயணனை வழிபடல்.

  3. எப்பொழுதும் நாராயணனை மனதில் நிறுத்தி வழிபடல்.

  4. பகவத் கீதையைப் படித்து பாராயணம் செய்தல்.

  5. கோபி சந்தனத்தை நெற்றியில் தரித்துப் பகவத் சிந்தனையுடன் இருத்தல்.

  6. முடிந்தவர்கள் தினமும் சாளக்ராம பூஜை செய்தல்.

  7. துளசி தளத்தை சூடிக்கொண்டு பகவான் நாமாவைச் சொல்லல்.

  8. கங்கா நதியில் நீராடி அந்த தீர்த்தத்தை அருந்தல்.

  9. காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் மூன்று வேளையும் ஜபித்தல்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன.
  • எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை.

  மச்சாவதாரப் பெருமாளை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார்.

  எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற பத்து அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன.

  இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும். டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளிலிருந்து மனிதன் தோன்றியதோடு நின்றுவிடுகிறது.

  அதன் பிறகு மனிதனின் பரிணாமம் துவங்குகிறது. தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன. அடுத்த ஐந்து அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன. மச்ச அவதாரம் (மீன்- நீர் வாழ்வன) பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்து வேதங்களை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது.

  ஜோதிடர்கள் வேதத்தை மறை என்றும் கூறுவார்கள். எனவேதான் வேதத்திற்க்கும் மீன ராசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கால புருஷ ராசியில் பன்னிரெண்டாமிடமாகிய மறைவு ஸ்தானத்தை குறிக்கும் மீன லக்ன ராசிக்காரர்கள் வேதத்திலோ அல்லது வேதத்தின் கண்கள் என போற்றப்படும் ஜோதிடத்திலோ சிறந்து விளங்குவார்கள்.

  மீனராசியின் ராசியாதி பதி குரு பகவானாவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும்.

  பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரன் 4-ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும்.

  எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்கள் பக்கம் வீசிக் கொண்டே தானிருக்கும்.

  குரு பகவான் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம்அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம்பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

  பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும் மீன ராசி மீனராசி மற்றும் லக்னம் குருவின் ஆதிக்கம்பெற்ற ராசியாகும். வேதம் ஓதும் ஆந்தனர்கள் சாஸ்திர பண்டிதர்கள்,வேதியர்கள், அர்சகர்கள், ஆசிரியர்கள் ஜோதிடர்கள் இவர்களுக்கெல்லாம் காரக கிரகம் குரு பகவான் ஆகும்.

  மீன் சந்திரனின் ஆதிக்கம் பெற்ற நீர்வாழ் உயிரினமாகும். அத்தகைய மீன ராசியில் சந்திரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் தினமே மச்சாவதார மூர்த்தியான மத்ஸ்ய ஜெயந்தியாகும். அந்த காலக்கட்டத்தில் மீன்களின் இனபெருக்க காலம் என்பது குறிப்பிடத்தக்கது. வேத நாராயண பெருமாள் இந்த மத்ஸ்ய ஜெயந்தி நாளில் வேதம் ஓதும் வேதியர்கள், அந்தணர்கள், ஜோதிடர்கள் ஆசிரியர்கள் மற்றும் மீனவர்கள் மீனை உண்பவர்கள் அனைவரும் ஆதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாத பெருமாளை வணங்க சாபங்களும் தோஷங்களும் நீங்கி உயர்வு ஏற்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது.
  • பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

  மதுரை

  மதுரையின் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் கூடலழகர் பெருமாள் கோவிலும் ஒன்று. இது 47-வது வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

  கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 10 நாள் திருவிழா, கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மாலை நேரங்களில் சுவாமி சிம்மம், அனுமான், கருடன், சேஷ, யானை, தங்க சிவிகை, பூச்சப்பரம், குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.

  பிரமோற்சவ திருவிழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இன்று காலை கோவில் தேர்முட்டியில் இருந்து அதிகாலை 6.15 மணிக்கு புறப்பட்ட தேர், தெற்கு வெளிவீதி வழியாக சென்று திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி வழியாக வந்து காலை 8.30 மணி அளவில் மீண்டும் தேர் நிலையை வந்தடைந்தது.

  இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். இதற்காக அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோபி அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • நிகழ்ச்சிகளில் கோபி கூகலூர், கொங்க ர்பாளையம், காசிபாளை யம், குன்னத்தூர் க.குள்ள ம்பாளையம் பொல வகாளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  கோபி:

  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து க்காளியம்மன் கோவில் வகையாரா ஸ்ரீதேவி பூதேவி ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

  முன்னதாக 10-ந் தேதி மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 11-ந் தேதி வாஸ்துசாந்தி, 12-ந் தேதி சாற்றுமுறை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

  இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 4-ம் கால பூஜை நடந்தது. காலை 8.30 மணிக்கு மகா கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி தொடர்ந்து மூலவர் விமானம், ராஜகோபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநராயண பெரு மாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

  மேலும் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் கோபி கூகலூர், கொங்க ர்பாளையம், காசிபாளை யம், குன்னத்தூர் க.குள்ள ம்பாளையம் பொல வகாளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  ×