என் மலர்

  நீங்கள் தேடியது "vaikunta ekadasi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவையொட்டி கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

  அதன் பின்னர் காலை 9.45 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது. இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

  சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 4-30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

  மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 26-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

  விழாவின் 2-ம் நாளான 26-ந்தேதி மாலை கற்பக விருட்ச வாகனத்திலும், 27-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 28-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 29-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 30-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 1-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.

  2-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி சப்தாவரணம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். 8-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

  இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

  பின்னர் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

  சர்வஅலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர். சேர்த்தி சேவைக்கென தாயார் சன்னதிக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சன்னதிக்குள் வரவும், வெளியில் செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

  பங்குனிமாதம் நடைபெறும் உற்சவம் என்பதால், வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் சிரமப்படாமலிருக்க இந்த ஆண்டும் கோவில் நிர்வாகம் சார்பில், தாயார் சன்னதியில் 12 இடங்களில் குளிர் சாதன வசதிகளும், 30 இடங்களில் மின் விசிறிகளும் வைத்து குளுமையூட்டப்பட்டது. பக்தர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டில்களும், பிரசாதமாக மஞ்சள், கற்கண்டும் வழங்கப்பட்டது.

  கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக தன்வந்திரி சன்னதி, கம்பர் மண்டபம் அருகில் பிரமாண்ட திரையில் பெருமாள், தாயார் சேர்த்திசேவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இன்று இரவு சப்தாவரணமும், நாளை (சனிக்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

  விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் 31-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
  திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது பிரசித்தி பெற்றதாகும். இதேபோல ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

  நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கோவிலில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். வருகிற 30-ந்தேதி இரவு 8.30 மணி முத்துக்குறி, வியாக்யானம், அபிநயம், அரையர் தீர்த்தம், ஸ்ரீ சடகோபம் சாதித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

  நாளை முதல் 30-ந்தேதி வரை தாயார் புறப்பாடு இல்லை. மேலும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது. திருவாய் மொழி எனும் ராப்பத்து நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி (வியாழக் கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி மாலை 6.30 மணி அளவில் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தடைகிறார்.

  மாலை 6.45 மணிக்கு திருவாய்மொழி கோஷ்டி, அலங்காரம் அமுது செய்தல் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும், இரவு 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்த கோஷ்டியும் நடைபெற உள்ளது. இரவு 8 மணி முதல் இரவு 8.45 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். இரவு 9 மணிக்கு அலங்காரம், கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடைபெறும். வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைவார். வருகிற 2-ந்தேதி வரை மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  வருகிற 3-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம், சடகோபாம் சாதித்தல் நடைபெறும். வருகிற 4-ந்தேதி மாலை 5.30 மணிக்கு தாயார் தீர்த்தவாரி கண்டருளுகிறார். இன்று மாலை 6.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். இரவு 7.15 மணி முதல் இரவு 8.45 மணி வரை திருமஞ்சனம் நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இயற்பா தொடங்கும். இரவு 8 மணிக்கு தீர்த்த வினியோகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் மூலஸ்தான சேவை கிடையாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
  1. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

  2. சாதி வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

  3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம்.

  4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.

  5. நெருங்கிய உறவினரின் பிறப்பு - இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.

  6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு கொண்டது.

  7. வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.

  8. ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.

  9. ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  10. ஏகாதசி தினத்தன்று உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.

  11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுகிறது.

  12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது.

  13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லது என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை.

  14. வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்யலாம்.

  15. ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும்.

  16. துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை.

  17. துவாதசி திதி மிக, மிக குறைவான நேரமே இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம்.

  18. ஏகாதசி விரதம் இருந்த அம்பரீச சக்கரவர்த்தி துருவாச முனிவரின் கோபத்தில் இருந்து கூட பாதுகாக்கப்பட்டதை பல புராணங்கள் தெரிவிக்கின்றன.
  19. வளர்பிறை தேய்பிறை துவாதசியன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அன்றும் உண்ணா நோன்பு இருந்து திரயோதசி திதியிலேயே பாரணை செய்ய வேண்டும்.

  20. ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும்.

  21. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் அனைவரும் விரதம் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

  22. பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.

  23. நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.

  24. ஆடிமாதம் வளர்பிறை ஏகாதசியில் அனுஷ்டிக்கப்படுவது கோபத்மவிரதம். பல்வகையிலும் நமக்கு நன்மை பயக்கும் பசுக்களைக் கட்டும் இடத்தில், தாமரை வடிவ கோலம் இட்டு, அதனுள், திருமாலை வழிபட்டு கோதானம் அளிப்பது மிகச் சிறப்பு.

  25. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்தே மகாபாரதப் போர் நிகழ்ச்சிகளைக் கண்ட நாள் என்பதால் அன்று பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.

  26. முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.

  27. ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

  28. ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

  29. சீதையை பிரிந்த ராமர், பக்தாப்யர் என்ற முனிவரின் ஆலோசனைப்படி பங்குனி மாதத்தில் வரும் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பலனாக வானர சேனைகளின் துணைக்கொண்டு கடலை கடந்து இலங்கேஸ்வரனை அழித்து இலங்கையை வென்றார். விஜயா என்னும் இந்த ஏகாதசி விரதம் நாம் கேட்ட பலன்களை கொடுக்கக்கூடியது.

  30. வைகுண்ட ஏகாதசி அன்று தான், குருக்ஷேத்ரப் போரில் அர்ஜுனனுக்குக் கீதையை கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்ததால், இந்தநாள் ‘கீதா ஜயந்தி’ எனவும் கொண்டாடப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் விளங்குகிறது. வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் இரண்டாவது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் வருகிற 26-ந் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்குகிறது.

  தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி வரை விழா நடக்கிறது. 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (பகல் பத்து நாட்கள்) மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு பொதுஜன சேவை நடக்கிறது. 30-ந் தேதி இரவு 8.30 மணிக்கு முத்துக்குறி, வியாக்யானம், அபிநயம், அரையர் தீர்த்தம் மற்றும் சடகோபம் சாதித்தல் நடக்கிறது. இந்த 5 நாட்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி முடிய மூலஸ்தான சேவை கிடையாது.

  31-ந் தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதி முடிய திருவாய்மொழி என்னும் ராப்பத்து திருநாள் நடக்கிறது. அன்றைய நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளி, மாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடக்கிறது.

  4-ந் தேதியன்று தீர்த்தவாரி, திருமஞ்சனம் மற்றும் திருவாய் மொழித் திருநாள் சாற்றுமறை நடைபெறுகிறது.

  மேற்கண்ட தகவலை ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் இணை ஆணையர் ஜெய ராமன் தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதியில் நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை 81ஆயிரத்து 188 பேர் தரிசனம் செய்தனர். 16 ஆயிரத்து 462 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களின் காணிக்கையாக ரூ.3.28 கோடி உண்டியல் வசூலானது. #tirupati
  திருமலை:

  திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது.

  கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வைகுண்ட வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை 81ஆயிரத்து 188 பேர் தரிசனம் செய்தனர். 16 ஆயிரத்து 462 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.28 கோடி உண்டியல் வசூலானது.

  வைகுண்ட ஏகாதசி 2-வது நாளான துவாதசியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

  இதையொட்டி சக்கரத்தாழ்வார் இன்று அதிகாலை மாடவீதிகளில் கொண்டுவரப்பட்டு வராகசாமி கோவிலில் வைத்து பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் நடந்தது.

  இதையடுத்து கோவில் அருகில் உள்ள தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  #Tirupati
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்களை விவரமாக பார்க்கலாம்.
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (புதன்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாள் ஆகும். இன்று மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மதியம் 1 மணிக்கு பரமபதவாசலில் எழுந்தருளி பிற்பகல் 2.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தை அடைகிறார்.

  அப்போது பொதுமக்கள் அரையர் சேவையுடன் நம்பெருமாளை தரிசிக்க முடியும். இரவு 9.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். வருகிற 26-ந்தேதி வரை நம்பெருமாள் தினமும் இதேபோல் புறப்பாடாகி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

  24-ந்தேதி திருக்கைத்தல சேவை என்பதால் மாலை 3 மணிக்கும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி கண்டருள்வதற்காக மாலை 4.30 மணிக்கும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். ராப்பத்து உற்சவத்தின்போது இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும்.

  24-ந்தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், 26-ந்தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 27-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். 25-ந்தேதி வேடுபறி நிகழ்ச்சியன்று பரமபதவாசல் திறப்பு கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று ராப்பத்து உற்சவத்தின் 2-வது நாளையொட்டி நம்பெருமாள் மதியம் 12 மணிக்கு புறப்பாடாகிறார்.


  சொர்க்கவாசல் திறப்பின் போது நம்பெருமாள் அணிந்து இருந்த ரத்தின அங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உடையது. அவர் அணிந்து இருக்கும் ஆபரணங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோவிலில் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை பல முறை புதுப்பிக்கப்பட்டும் உள்ளன. ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை ஆகியவற்றுடன் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று காலை நம்பெருமாள் எழுந்தருளிய காட்சியை படத்தில் காணலாம். ரத்தின அங்கி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க கோடி கண்கள் போதாது என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 8-ந்தேதி பகல் பத்து நிகழ்ச்சி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. பகல் பத்து நிகழ்ச்சியில் தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதைத்தொடர்ந்து ராப்பத்து முதல் நாள் தொடக்கமும், சொர்க்க வாசல் திறப்பும் நேற்று நடந்தது.

  நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்க வாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபம் முன்பு மணல் வெளியில் எழுந்தருளினார். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை 1.15 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

  ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மதியம் 1 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. மதியம் 2.30 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். இரவு 8 மணி வரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான 24-ந்தேதி (திங்கட்கிழமை) திருக்கைத்தல சேவை நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார்.

  மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடக்கிறது. ராப்பத்து நிகழ்ச்சியின் 8-ம் நாளான வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 5 முதல் 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளுகிறார்.

  இரவு 7.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி இரவு 10.30 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அதிகாலை 12.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். ராப்பத்து நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதியுடன்(வியாழக்கிழமை) நிறைவடைகிறது. அன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். காலை 10.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படும். 11 மணிக்கு நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

  ஒவ்வொரு நாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் முன் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தின் திருவாய் மொழி பாசுரங்களை அரையர்கள் அபிநயத்துடன் இசைக்கிறார்கள். மூலவரை முத்தங்கி சேவையில் பக்தர்கள் தரிசிக்கலாம். நம்மாழ்வார் மோட்சம் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா முடிவடைகிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. கோவிந்தா...கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
  மாதந்தோறும் வரும் ஏகாதசி நாட்களை விட மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் வைகுண்ட ஏகாதசி எனப்போற்றப்படும் இந்த நாளில் பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் வைணவ ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந் தேதி திருமொழி திருநாள் என்ற பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

  அரங்கநாத பெருமாளை போற்றி தினமும் 12 ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரதிவ்யபிரபந்த பாசுரங் களை நல்லான்சக்ரவர்த்தி சுவாமிகள், சுதர்சன பட்டர் சுவாமிகள் ஆகியோர் பெருமாள் முன்னிலையில் பாடினர்.

  வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாத பெருமாள் சேஷ வாகனத்தில் கோவில் உள்பிரகாரம் வலம் வந்து ஸ்ரீ ஆண்டாள் தாயார் சன்னதி முன் வீற்றிருந்தார். காலை 5.30 மணியளவில் அரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது. அதன் வழியே பெருமாள் வெளியே வந்தார். அப்போது கோவிந்தா...கோவிந்தா என பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

  ஏற்கனவே சொர்க்கவாசல் வெளியே வீற்றிருந்த நம்மாழ்வார், ராமனு ஜர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் பெருமாள் காட்சி தந்தார். பின்னர் பெருமாள் கோவில் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த அலங்காரபந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சிகள் சுதர்சன பட்டர் சுவாமிகள், காரமடை ஊர்கவுடர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் டி.டி.ஆறுமுகசாமி, ராஜகோபால் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சொர்க்க வாசல் வீதி, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகளில் 30-க்கும் மேற்பட்ட சமுதாய சங்கத்தினர், பொதுநல சங்கத்தினரால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தல்களுக்கு பெருமாள் அழைத்து வரப்பட்டு, மண்டப கட்டளைகளை ஏற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  ஸ்ரீதேவி, பூதேவியுடன் நகர்வலம் வந்த அரங்கப்பெருமாளுக்கு பின்னால் தாசபளஞ்சிக மகாஜன சங்கம் மற்றும் சந்தான வேணுகோபால சுவாமி பஜனை குழுவினர் ஆடிப்பாடி வந்தனர்.

  இரவு 10.30 மணிக்கு இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. காரமடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான கா.விமலா, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், கோவில் கணக்கர் மகேந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். வருகிற 25-ந் தேதி இரவு 8 மணியளவில் திருமங்கை மன்னன் வேடுபரி நிகழ்ச்சிக்காக அரங்கநாத பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். 27-ந் தேதி இரவு 8.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’
  18-12-2018 வைகுண்ட ஏகாதசி

  மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் பாலமாக இருப்பது விரதங்கள். மனிதனின் வாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கு ஏற்ப, கடவுள்களும் விரதங்களும் மாறுபடும். ஆனால் அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’

  ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. வைணவ பக்தர்கள் அந்நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

  மாதந்தோறும் வரும் ஏகாதசி திதிகளை விட, மார்கழியில் வரும் ஏகாதசிக்கு பெரும் சிறப்பு உண்டு. ஏகாதசியில் விரதம் இருந்த அம்பரீஷன் என்ற அரசனை, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து காக்க, விஷ்ணு பகவான் தன்னுடைய சக்கரத்தை அனுப்பி புராண நிகழ்வு நடந்த மாதமாக மார்கழி ஏகாதசி இருக்கிறது.

  அம்பரீசனுக்கு இடையூறு செய்த துர்வாசரை, சுதர்சன சக்கரம் துரத்தியது. அதனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி, வைகுண்டம் சென்று பெரு மாளைப் பணிந்தார் துர்வாசர். ஆனால் துர்வாச முனிவரைக் காப்பாற்றும் தகுதி, ஏகாதசியில் தூய விரதம் இருந்து திருமாலை வழிபட்ட அம்பரீசனுக்கே அளிக்கப்பட்டது. ஏகாதசியின் சிறப்பு அத்தகையது.

  வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்போரின் கடைக்கண் பார்வைக்கு, அந்த கண்ணன் அடிமையாகி அவர்களின் கவலைகளைத் தீர்த்து இறுதியில் வைகுண்டம் அழைத்து முக்தி தருவான் என்பது நம்பிக்கை.

  தனது நண்பரான குசேலன் கொண்டுவந்த அவலை உண்டு, அவருக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க கண்ணன் வழி செய்தார். குசேலனுக்கு இறைவன் அருள் செய்தது இந்த மார்கழி ஏகாதசி என்பதால், பக்தர்கள் அன்றைய தினம் இரவு விழித்திருந்து பகவானுக்கு அவல் நைவேத்தியம் படைத்து வேண்டினால், அவர்களின் ஆவல் நிறைவேறும்.

  வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஒரு முறை நாம் இருக்கும் வைகுண்ட ஏகாதசி விரதமானது, மூன்று கோடி ஏகாதசி விரதங்களுக்கு ஒப்பாகும் என்பதால், இவ்விரதத்தை “முக்கோடி ஏகாதசி” என்றும் அழைக்கின்றனர்.

  ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வது திதியாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஆகவே ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளிலேயே தங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் பெருமாளை வழிபட்டு ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையான உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.  நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகள், விடாமல் துரத்தினாலும் நாம் நம் சிந்தையை ஒருங்கிணைத்து அவன் பாதம் நாடி அருளைப்பெற இரவு-பகல் பாராமல், இறைவனின் நாமம் ஓதுவதில் கவனம் கொள்ள வேண்டும். வீண் கதைகள் பேசி பொழுதுகளை போக்குவது நன்மை தராது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தசமிக்கு அடுத்த ஏகாதசியன்று இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமைகளை எடுத்துக்காட்டும் கதைகளைப் படிப்பதும், கேட்பதுமாக இருக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி போன்ற பெருமாள் மீதான பதிகங்களை ஓதுவது நல்லது. எதையும் படிக்கவோ மனனம் செய்யவோ முடியாதவர்கள் “ஓம் நமோ நாராயணா” எனும் எட்டெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தினாலே அந்த நாராயணனின் அருளுக்கு பாத்திரமாகலாம்.

  மறுநாள் துவாதசி திதி அன்று, இந்த பருவத்தில் கிடைக்கும் 21 வகை காய்கறிகளை சமைத்து சூரிய உதயத்திற்கு முன் உண்ணுதல் நலம் தரும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை விரதம் முடித்து உண்பதால் உடல் ஆரோக்கியத்துக்கும் இவ்விரதம் உதவுகிறது. அனைத்து காய்கறிகளும் இல்லை என்றாலும், அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை அவசியம் இடம்பெற வேணடும்.

  ஏனெனில் அகத்திக்கீரையை நலம் காக்கும் “அமிர்தபிந்து” என்றும், நெல்லிக்காயில் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை மார்பில் சுமந்த ஹரி வாசம் செய்வதாகவும், சுண்டைக்காயில் பாற்கடலில் அமுதம் வேண்டி கடைந்தபோது வெளிவந்த பிணிகளைத் தீர்க்கும் மருத்துவக் கடவுளான தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் முன்னோர் வாக்கு.

  இந்த விரதத்தில் ஒரு முக்கியமான தகவலும் உண்டு. துவாதசியன்று காலையில் உண்டு விரதம் முடித்த பிறகு, எக்காரணம் கொண்டும் பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது விஷ்ணுவுக்கு உகந்த துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடுவது சிறப்பு. இந்த விரதத்தை உற்றார் உறவினரோடு பகவானின் சிந்தையில் மகிழ்ந்து, அவன் புகழை பாடி பூஜைகள் செய்து, அரங்கன் குடியிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

  மார்கழி ஏகாதசியை முறையாக வழிபடும் முறையை தொடங்கியவர், திருமங்கையாழ்வார். வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பானதாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழாதான்.

  இங்கு மட்டுமல்ல சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் போன்ற அனைத்து பிரசித்திபெற்ற பெருமாள் ஆலயங்களிலும் கொடியேற்று விழா தொடங்கி, பத்து நாட்கள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும்.

  இராபத்து தொடங்கும் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் எனப்படும் முக்தி தரும் வாசல் திறப்பு நடைபெறும். அன்று ஸ்ரீரங்க மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப் படும். அதிகாலை 4.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் ரத்ன அங்கி அணிந்துவாறு, முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளைப் பொழிந்தவாறு பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.

  மனிதனாக பிறப்பு எடுத்த நாம் நம் ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்கள் ஐந்தையும், மனம் என்ற ஒன்றையும், பரம்பொருளுடன் ஒன்றுபடுத்தி நிம்மதியான வாழ்வைப் பெற வைகுண்ட ஏகாதசி விரதம் வழிகாட்டுகிறது.
  ×