search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை
    X

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை

    • வருகிற 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    • ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும்.

    தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை நேற்று கூட்டம் நடந்தது.

    காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்றைய தினம் கோவில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது.

    வைகுண்ட ஏகாதசி அன்று கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடி நீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

    வரிசையாக பக்தர்கள் செல்ல போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாதாரண பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது வி.ஐ.பி.கள் யாராவது வந்தால் சாதாரண பக்தர்களை தடுத்து நிறுத்தக்கூடாது.

    அவர்களை எந்தவொரு தொந்தரவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும்.

    வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும்.ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நீதிபதிகள், மத்திய மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும்.

    அதனை தொடர்ந்து சாதாரண பக்தர்கள் வரிசையில் வைகுண்ட வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×