வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

ஜனவரி 2-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.ஜனவரி 11-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
Published on

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 23-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. ஜனவரி 1-ந் தேதி மோகினி அலங்காரமும், 2-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

8-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று 12.30 மணியளவில் நடைபெற்றது.

அப்போது, கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தின. அதுசமயம் முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com