search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.2,048 கோடி ரூபாய் பரிவர்த்தனை முடிவடைந்துள்ளது
    • book now, sell anytime அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது.

    சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன்லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பரிவர்த்தனை முடிவடைந்து வரும் செப்டெம்பர் 30 முதல் சொமேட்டோ செயலியின் மூலம் டிக்கெட் புக்கிங் சேவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சொமேட்டோ செயலியில் அறிமுகமாகும் book now, sell anytime அம்சத்தின் மூலம் சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

    சொமேட்டோ இந்த கட்டமைப்பை வாங்கியிருந்தாலும், பயனர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அடுத்த 12 மாதங்களுக்கு பே.டி.எம். செயலியிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி.
    • ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டட அனுமதி பெறுவது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது.

    * ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விபரங்கள் அடிப்படையில் உடனடி அனுமதி அளிக்கப்படும்.

    * ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    • கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது.
    • மதுபானங்களின் தேவை அதிகரிப்பு என்பது, மதுக்கடைகள் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

    பீதர்:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு மதுபானங்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனங்கள் மூலமாக மதுபானமும் விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பீதர் மாவட்டத்தில் கலால் துறை மந்திரி ஆர்.பி.திம்மாபூரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது. மதுபானங்களின் விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை குறைவாக தான் உள்ளது. சில உயர்ரக மதுபானங்களின் விலை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வருவாய் பாதிக்கப்படுகிறது. மதுபானங்களின் தேவை அதிகரிப்பு என்பது, மதுக்கடைகள் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

    மாநிலத்தில் ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது. அதுபற்றி அரசு தரப்பில் எந்த விதமான ஆலோசனையும் இதுவரை நடக்கவில்லை. ஆன்லைன் மூலமாக மதுபானம் விற்பனை செய்ய சாத்தியமும் இல்லை. இனிவரும் நாட்களிலும் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யப்படாது. எந்த ஒரு ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாகவும் மதுபானங்கள் விற்பனை செய்வதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • அடிக்கிற வெயிலில் பாட்டிலில் இருந்த சோடா ஆவியாகி இருக்கும்.

    சமீப காலமாக உணவு பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஸ்விக்கியில் எலுமிச்சை சோடா ஆர்டர் செய்த ஒரு பயனர், காலியான டப்பாவின் புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அவரது பதிவில், ஸ்விக்கி இப்படி ஒரு காலியான கிளாசை எனக்கு அனுப்பி இருக்கிறீர்கள். அதற்கு நன்றி. நான் ஆர்டர் செய்த லைம் சோடா மற்றொரு ஆர்டரில் வந்து சேர்ந்து விடும் என்று நம்புகிறேன் என கிண்டலாக கூறியுள்ளார்.

    இதற்கு ஸ்விக்கி அளித்த பதிலில், உங்களது ஆர்டர் ஐடியை பகிர்ந்தால் இதுகுறித்து என்ன செய்ய முடியும் என பார்ப்பதாக கூறியிருந்தது.

    அவரது இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றது. அதில் ஒரு பயனர், அடிக்கிற வெயிலில் பாட்டிலில் இருந்த சோடா ஆவியாகி இருக்கும் என கிண்டலாக கூறியுள்ளார்.

    மற்றொரு பயனர், இது நீராவி வடிவத்தில் திரவத்தை அனுப்பி வைக்க கூடிய ஒரு தொழில்நுட்பம் என கூறியுள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • வருகிற 16-ந் தேதி வரை பதிவுகள் நடக்கின்றன.
    • அனைவரும் தங்களது ‘பயோ மெட்ரிக்’ பதிவுகளை வழங்க வேண்டும்.

    புதுடெல்லி:

    18-வது மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று தங்களுக்கான அடையாள அட்டையை பெற்று வருகிறார்கள். இதற்கான பதிவுப்பணி கடந்த 4-ந் தேதி பிற்பகலிலேயே தொடங்கிவிட்டது.

    வருகிற 16-ந் தேதி வரை பதிவுகள் நடக்கின்றன. 18-வது மக்களவையில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது 'பயோ மெட்ரிக்' பதிவுகளை வழங்க வேண்டும். பதிவு நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடக்கிறது.

    மேலும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய 'சி.ஜி.எச்.எஸ்.' மருத்துவ பயன்பாட்டுக்கான பதிவும் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் இருந்து நேற்று முன்தினம் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பதிவு செய்தார்.

    நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அந்த கட்சியின் மற்றொரு எம்.பி. ரவிக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பதிவு செய்தனர். இதேபோல் மேற்கு டெல்லியில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.பி. கமல்ஜீத் செராவத் தனது அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

    தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களில் புதிய எம்.பி.க்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் வரை அவர்களின் தற்காலிக தங்குமிடமாக ஜன்பத்தில் உள்ள 'வெஸ்டர்ன் கோர்ட்' விடுதியும், மாநில அரசுகளின் இல்லங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

    • கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
    • விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    உலக அளவில் ஒரு வருட காலத்தில்  300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆன்லைனில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

     

    குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்தல்,செக்ஸ்டிங் (ஆபாச உரையாடல்) செய்தல், பாலியல் ரீதியான செயல்களை செய்ய வற்புறுத்துதல், டீப்பேக் வீடியோக்கள் மற்றும் படங்களை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பிளாக்மெயில் செய்து தங்களின் பேச்சுக்கு இணங்க வைத்தல் என எண்ணிலடங்கா குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக அதிகம் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

     

     

    மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் தங்களை இளைஞர்கள் போல் காட்டிக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர், சிறுமிகளை ஏமாற்றுகிறார். உலகம் முழுவதும் இந்த வகை குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முக்கியமாக உலகின் ராட்சத பொருளாதாரத்தைக் கொண்ட நாடான அமெரிக்காவில் அதிகமாக இந்த குற்றங்கள் நடந்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

     

    • விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

    வணிக ரீதியான தாய்ப் பால் விற்பனைக்குத் தடை - FSSAI அதிரடி

    உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, வணிக ரீதியாக தாய்ப்பால் விற்கப்படுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், , FSS சட்டம்- 2006 விதிமுறைகளின் படி வணிக ரீதியாக மனித பாலை பதப்படுத்துதல், விற்பனை செயதல் சட்டவிரோதமானதாகும் . எனவே, தாய்ப்பால் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வணிகமயமாக்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

     

    மேலும் விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்ப் பாலை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

     

    பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப் பாலை சேகரித்து லாப நோக்கத்துடன் பால் வங்கிகள் அமைத்து சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் FSSAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள பால் வங்கியில் தூய்மையான தாய்ப்பால் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • சற்குண பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 200 வலி நிவாரண மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
    • ஒரு மாத்திரையை ரூ. 35க்கு வாங்கி அதனை 10 மடங்கு அதிகமாக ரூ.350 வரை விற்பனை செய்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவு பேரில் காவல்துறையினர் மருந்து கடைகளில் ஆய்வு நடத்தினர். மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை விற்கக் கூடாது என உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கியிருந்தனர்.

    இந்நிலையில் வீரபாண்டி பகுதியில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சற்குணப்பாண்டியன் ( வயது 27 ) என்பவர் ஆன்லைன் மூலமாக மொத்தமாக நிவாரண மாத்திரைகளை வாங்குவது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சற்குண பாண்டியனை தொடர்ந்து நோட்டமிட்டு வந்தனர்.

    அப்போது வீரபாண்டி அருகே கொரியரில் வந்த 200 வலி நிவாரண மாத்திரைகளை சற்குணபாண்டியன் பெற்ற போது வடக்கு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஏற்றுவதற்காக வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது இதனை தொடர்ந்து சற்குண பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 200 வலி நிவாரண மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தியபோது அவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆன்லைனில் வலி நிவாரண மாத்திரைகளை ஆர்டர் செய்து தொழிலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பனை செய்துள்ளார். ஒரு மாத்திரையை ரூ. 35க்கு வாங்கி அதனை 10 மடங்கு அதிகமாக ரூ.350 வரை விற்பனை செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதனை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும்.

    மாணவ-மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது பள்ளிகள் மூலமும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினாலோ, விடைத்தாள் நகல் பெறவோ விண்ணப்பிக்கலாம்.

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார்.
    • பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.

    உணவு பொருட்கள் முதல் பிறந்தநாள் கேக் வரை பல பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு பெண் தனது சகோதரி குழந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக ஸ்விக்கியில் கேக் ஆர்டர் செய்துள்ளார்.

    அப்போது வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார். அந்த கேக்கில் அதிக வாசகம் எதுவும் வேண்டாம் என கருதிய அவர், தனது ஆர்டருடன் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' சேர்த்து அனுப்பவும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் பேக்கரி ஊழியர்கள், இதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கு ஆர்டர் கேக்கில் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' என எழுதி கொடுத்துள்ளனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, நாங்கள் ஆச்சரியம் கொடுக்க நினைத்தோம், ஆனால் ஸ்விக்கி எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்தது என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். அவரது இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.



    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 13% வரை சரிவை கண்டுள்ளது.

    இதன்மூலம், கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரான உதய் கோடக் தனது சொத்து மதிப்பில் சுமார் 10,831 கோடி ரூபாயை இழந்துள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரிடம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்தது என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

    • புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.
    • டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரெயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மின்சார ரெயில்கள் மற்றும் பறக்கும் ரெயில்களில் பயணம் செய்ய காலை, மாலை நேரங்களில் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக செயலி மூலம் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    வீடுகளில் இருந்தவாறே யூ.டி.எஸ். செயலியில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.

    டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரெயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க ரெயில் நிலையத்திற்கு வெளியே அல்லது ரெயில் நிலையங்களுக்கு அருகாமையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்று முந்தைய விதிமுறை இருந்தது.


    இந்த புதிய செயலியை ஊக்குவிக்கவும், கவுண்டர்களில் கூட்ட நெரிசலை குறைக்கவும் இது இப்போது தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பயணிகள் நலச்சங்க ஆர்வலர் சடகோபன் கூறுகையில், பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பே டிக்கெட் எடுத்து கொள்ள இதன் மூலம் முடியும். இதனால் விரைவாக பயணத்தை தொடர முடியும் என்றார்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோரின் எண்ணத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    2 மணிநேரத்திற்கு முன்பு பயணம் செய்வது உறுதியாக இருந்தால் வீடுகளில் இருந்தோ அல்லது நிலையத்திற்கு வெளியில் இருந்தோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றார்.

    ×