என் மலர்
நீங்கள் தேடியது "இண்டிகோ விமானம்"
- விமானத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
- பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் வழங்குவதற்கு இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
நடுவானில் பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் வழங்குவதற்கு இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் எந்த விமான பாதையில் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
IndiGo passenger becomes 'chaiwala' at 36,000 feet, serves tea to passengers ఇండిగో ఫ్లైట్ లో మిగిలిన పాసింజర్లకు టీ పంచిన చాయ్ వాలా #Viral #ViralVideo #IndiGo pic.twitter.com/WsZOZ2pokb
— ASHOK VEMULAPALLI (@ashuvemulapalli) December 23, 2024
- மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது.
- டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்தது. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது.
வானிலை சீராகாத நிலையில் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக,தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வழக்கத்தைவிட கூடுதலாக 10 கிலோ எடையிலான உடைமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.
- இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் மற்றும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இந்திய விமான நிறுவனமான 'இண்டிகோ', பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டண சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்களின் பயண தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சலுகையின்படி 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி-கல்லூரி மாணவர்கள் இண்டிகோ விமானத்தில் 6 சதவீத கட்டண சலுகையுடன் அந்த நிறுவனத்தின் உள்நாட்டு விமானங்களில் பயணிக்கலாம். மேலும் வழக்கத்தைவிட கூடுதலாக 10 கிலோ எடையிலான உடைமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் மற்றும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. கட்டண சலுகையை பெறும் மாணவர்கள் விமான புறப்பாட்டுக்கு முன்னதாக ஆவணங்கள் சோதனையின்போது பள்ளி-கல்லூரி அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
- இண்டிகோ நிறுவனம் தனது 18 வது ஆண்டு விழாவை கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடியது
- டெல்லி விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.08 மணிக்கு புறப்பட்டது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான இண்டிகோ முதல் முறையாக பிசினஸ் கிளாஸ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 2,200 விமானங்களை இயக்கி வரும் இண்டிகோ நிறுவனம் தனது 18 வது ஆண்டு விழாவை கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடியது. அந்த சமயத்தில் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த புதிய திட்டத்தை இண்டிகோ அறிவித்திருந்தது.
We're all set to #IndiGoStretch. Stay tuned. #goIndiGo pic.twitter.com/T94dawYwb9
— IndiGo (@IndiGo6E) November 13, 2024
இதன்படி புதிய பிசினஸ் கிளாஸ் உடன் கூடிய இண்டிகோ ஏர்லைன்ஸ் 6E6814 விமானம் இன்று [நவம்பர் 14] டெல்லி விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.08 மணி அளவில் புறப்பட்டு காலை 8:48 மணியளவில் மும்பை விமான நிலையம் வந்து சேர்ந்தது.
விமானத்தில் பயணித்த அந்நிறுவனத்தின் சிஇஓ பியட்டர் எல்பர்ஸ் [Pieter Elbers] தனது அனுபவம் க்குறித்து பகிர்ந்துள்ளார். இந்த பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டின் தொடக்க விலையாக ரூ.18,018 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் 2 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் தவித்தன.
- சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து 2 இண்டிகோ விமானங்கள் இன்று 9 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தன.
மதுரையில் கனமழை பெய்து வருவதால் 2 விமானங்களும் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இரு விமானங்களும் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழையால் நடுவானில் வட்டமடித்துக்கொண்டிருந்த இரு இண்டிகோ விமானங்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.
- விமான டிக்கெட்டுகளில் 15% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவிப்பு.
- இச்சலுகை செப் 30ம் தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் கிராண்ட் ரன்வே பெஃஸ்ட் சேல்-ஐ இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது.
இச்சலுகையில் பாங்க் ஆப் பரோடா, ஃபெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் 15% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சலுகை செப் 30ம் தேதி வரை இருக்கும். அடுத்தாண்டு ஜன. 1 முதல் மார்ச் 31 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாட்களில் சலுகை விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் இருந்து கத்தார் செல்லவிருந்த இண்டிகோ விமானம் ரத்து
- சுமார் 250 முதல் 300 பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.
மும்பையில் இருந்து கத்தாரின் தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், 5 மணிநேரத்திற்கு மேலாக தாமதம் ஆனதால் பயணிகள் விரக்தி அடைந்தனர்.
அதிகாலை 3:55 மணிக்கு இந்த விமானம் புறப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படவில்லை. விமானத்திற்குள் 5 மணிநேரம் பயணிகள் காத்திருந்தனர்.
பின்னர் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறக்கி விடுமாறு வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் பயணிகள் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஹோல்டிங் ஏரியாவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
சுமார் 250 முதல் 300 பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு எதுவும் வழங்கப்படவில்லை என்று விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
5 மணிநேர தாமதத்திற்கு பிறகு இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கோரியது.
வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் தங்குமிடங்கள் வழங்குவதாகவும் அவர்கள் செல்லும் இடங்களுக்கு மீண்டும் விமான டிக்கெட் முன்பதிவு செய்து தரப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மும்பையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.
- விமானம் மீண்டும் பயன்பாட்டு பகுதிக்கு அனுப்பப்படும்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் வீண் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் தெரிவித்த இண்டிகோ, "சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம் 6E 5149-க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானம் மும்பையில் தரையிறங்கியதும், பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன."
"முதற்கட்டமாக விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தினர். சோதனை முழுமை பெற்றதும், விமானம் மீண்டும் பயன்பாட்டு பகுதிக்கு அனுப்பப்படும்," என்று தெரிவித்தது.
கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பயணிகள் என பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
- விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டது.
- இதனால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது.
தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள், போலீசார் விமானத்தை தனி இடத்துக்கு கொண்டு சென்றனர். பயணிகள் அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.
- சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார்.
ஆலந்தூர்:
டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் இருந்தனர். விமானத்தை விமானி இயக்க ஆரம்பித்த போது திடீரென, விமானத்தின் அவசரகால கதவை திறக்கக்கூடிய அலாரம் ஒலித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்தினர். மேலும் அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.
அப்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சரோஸ்(27) என்பவர் அவசர கால கதவை திறந்து இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவசரகால கதவை திறக்க வேண்டும் என்று அதில் இருந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி விட்டேன். முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார்.
எனினும் விமானிகள் அவருடைய விளக்கத்தை ஏற்கவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் சரோசின் விமான பயணத்தை ரத்து செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்த அழைத்து சென்றனர்.
சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார். வரும்போது ரெயிலில் வந்த அவர் திரும்பி செல்லும் போது விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தார். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தபோது தெரியாமல் அவசர கால கதவு பட்டனை அழுத்தி தற்போது விசாரணையில் உள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
- டெல்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது.
- விமானத்தில் திடீரென துர்நாற்றம் வீசியதால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது விமானத்திற்குள் திடீரென துர்நாற்றம் வீசியது.
இதனால் பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க அனுமதிக்கும்படி விமானி கேட்டுக் கொண்டார். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக, விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் சில நிமிடம் துர்நாற்றம் வீசியதால் முன் எச்சரிக்கையாக, விமானி மீண்டும் டெல்லியில் தரையிறக்கினார். அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துர்நாற்றம் காரணமாக புறப்பட்ட இடத்துக்கே விமானம் திரும்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது.
- விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள்.
மும்பை:
டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் சில விமானங்கள் தரை இறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்படுவதில் பல மணி நேரம் தாமதமாகிறது.
கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது. டெல்லியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் தரை இறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள். உடனே அவர்கள் விமான ரன்வேயின் அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு சென்று அமர்ந்தனர்.
உடனே குடும்பத்துடன் அவர்கள் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சுமார் 12 மணி நேரம் விமான பயணிகள் தவித்தனர்.