என் மலர்
நீங்கள் தேடியது "Indigo flights"
- இண்டிகோ விமான நிறுவனம் ஒரே நாளில் முக்கிய 3 நகரங்களில் விமானங்களின் சேவையை ரத்துசெய்தது.
- மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மும்பை:
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக இன்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.
மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்களும், பெங்களூருவில் 73 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த நவம்பரில் மட்டும் ,1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டது. ஊழியர்கள் வேலைநிறுத்தம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு கோளாறு மற்றும் விமானம், விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகியவற்றால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ரத்து தொடர்பாக இண்டிகோ நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
- மதுரையில் 2 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் தவித்தன.
- சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து 2 இண்டிகோ விமானங்கள் இன்று 9 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தன.
மதுரையில் கனமழை பெய்து வருவதால் 2 விமானங்களும் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இரு விமானங்களும் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழையால் நடுவானில் வட்டமடித்துக்கொண்டிருந்த இரு இண்டிகோ விமானங்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.
இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 10-ந் தேதி கோவையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து கொச்சி நோக்கி மற்றொரு இண்டிகோ விமானம் புறப்பட்டது. ஐதராபாத் விமானத்தில் 162 பயணிகளும், கொச்சி விமானத்தில் 166 பேருமாக சுமார் 330 பயணிகள் இருந்தனர்.
இந்த 2 விமானங்களும் பெங்களூரு வான்பரப்பில் எதிரெதிரே வந்து கொண்டிருந்தன. இதில் ஒரு விமானம் 27,500 அடி உயரத்திலும், மற்றொன்று 27,300 அடி உயரத்திலுமாக வேகமாக சென்று கொண்டிருந்தன. இதனால் இரு விமானங்களுக்கும் இடையிலான உயரம் வெறும் 200 அடியாக இருந்தது.
இரு விமானங்களுக்கும் இடையே 4 நாட்டிக்கல் மைல் தொலைவு இருந்தபோது, அங்கே பெரும் விபத்து நிகழ இருப்பதை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் கட்டுப்பாட்டு அறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அவர்கள் துரிதமாக செயல்பட்டு 2 விமானங்களின் விமானிகளுக்கும் தகவல் அனுப்பினர். அதன்படி ஐதராபாத் செல்லும் விமானத்தை 36,000 அடிக்கு மேலே எழுப்புமாறும், கொச்சி விமானத்தை 28,000 அடியில் இயக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி இரு விமானிகளும், விமானத்தின் பாதையை மாற்றி அமைத்தனர். இதனால் கடைசி நேரத்தில் இரு விமானங்களும் மோதிக்கொள்ளுவது தவிர்க்கப்பட்டதுடன், சுமார் 330 பயணிகளின் உயிரும் அதிர்ஷ்டவசமாக காக்கப்பட்டது.
பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள இண்டிகோ நிறுவனம், இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக தெரிவித்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.






