என் மலர்

  நீங்கள் தேடியது "bad weather"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டது.
  சிம்லா:

  இமாசல பிரதேச மாநிலத்தில் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாண்டி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆஷ்ரே சர்மாவை ஆதரித்து சுந்தர்நகர் பகுதியில் அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

  இதேபோல் சிம்லா பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாண்டிலை ஆதரித்து தியோங் என்ற இடத்திலும் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய இருந்தார்.

  ஆனால் மோசமான தட்பவெப்ப நிலையால் தரம்சாலா அருகே உள்ள ககல் விமான நிலையத்தில் பிரியங்கா காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

  இது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாததால் தன்னை காண பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த மக்களிடம் பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் அவர் சுந்தர்நகர் பகுதிக்கு மீண்டும் வந்து பிரசாரம் செய்வார் என தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடும் பனிமூட்டம் காரணமாக இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. #DelhiAirport #FlightsDelayed
  புதுடெல்லி:

  டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.

  பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இன்று விமான போக்குவரத்து முடங்கியது. காலை 7.30 மணி முதல் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. டெல்லிக்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன.  டெல்லியில் இருந்து வெளியூர் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்கள் சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக, பயணம் செய்யவேண்டிய விமானத்தின் நிலவரத்தை சரிபார்த்துக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. வானிலை சீரடைந்ததும் விமானங்கள் இயக்கப்படும்.

  இதேபோல் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 ரெயில்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #DelhiAirport #FlightsDelayed
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்முவில் மழையுடன் மோசமான வானிலை நிலவுவதால் பகவதிநகர் முகாமில் இருந்து புறப்பட்டு செல்லும் அமர்நாத் யாத்திரை தொடர்ந்து இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. #AmarnathYatra
  ஜம்மு:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

  இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 535 யாத்திரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். மேலும் பலர் தரிசனத்துக்காக ஜம்மு மாவட்டத்தில் உள்ள பகவதிநகர் மலையடிவார முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


  இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைப்பொழிவு உள்ளதால் யாத்திரை பாதையில் உள்ள நெடுஞ்சாலை மூடப்பட்டது.

  பகவதிநகர் மலையடிவார முகாமில் இருந்து நேற்று யாத்ரீகர்கள் புறப்பட்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்றும் மோசமான வானிலை நிலவுவதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. #AmarnathYatra #AmarnathYatrasuspended  #Yatrasuspended  
  ×