என் மலர்
நீங்கள் தேடியது "விமான சேவைகள் பாதிப்பு"
- வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
- விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 131 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாநிலங்களில் பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் நாடு முழுவதும் நிலவிய மோசமான வானிலை காரணமாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படும் 4 விமான சேவை, 7 வருகை விமான சேவை ரத்து செய்யப்பட்டன.
கொல்கத்தா, ஜெய்ப்பூர், காசியாபாத் நகரங்களுக்கான புறப்பாடு, வருகை விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் இடி, மின்னலுடன் இன்று மாலை பெய்துவரும் கனமழை காரணமாக தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது.
மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.
சூறைக்காற்றை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதும், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் இருந்து பிறபகுதிகளுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் பிறபகுதிகளில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted






