என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight service cancel"

    • புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிட்வா புயல் எச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரியில் நாளை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை அடுத்து, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

    • விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
    • பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விமான பயணிகள் மற்றும் ரெயில் பயணிகள் கடந்த சில நாட்களாகவே கடும் கவதி அடைந்து வருகிறார்கள்.

    அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 564 விமானங்கள் தாமதமாக வந்து தரையிறங்கின. மேலும் 95 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இந்த நிலையில் டெல்லி யில் இன்றும் கடும் பனி மூட்டம் நீடித்தது. இதன் காரணமாக இன்றும் விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக் கப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணிவரை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக டெல்லிக்கு வந்தன.

    ×