என் மலர்
நீங்கள் தேடியது "மக்களவை"
- இந்தியா- அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி.
- அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அத்துடன் முதற்கட்ட அமர்வு நிறைவு பெற்றது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் எம்.பி. பகவன்தாஸ் ரத்தோருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கோஷமிட்டனர். அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் கோப்புகளில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றதாக கூறி அவர் ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் அமளியால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மதியம் 12 மணிக்கு சபை கூடியபோது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவடைந்தது. 3 வார விடுமுறைக்குப் பிறகு மக்களவை வருகிற மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மத்திய பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடுகளை நிலைக்குழுக்கள் ஆராயும்.
இதற்கிடையே அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆவணங்களில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் எப்ஸ்டீனின் படங்களுடன் கூடிய பெரிய பதாகையையும் வைத்திருந்தனர். மத்திய மந்திரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் முதல்கட்ட அமர்வு நிறைவடைந்தது. 3 வார விடுமுறைக்குப் பிறகு மாநிலங்களவை வருகிற மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்.
- பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்தனர்
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
பிபர்வரி 4 ஆம் தேதி குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்ற இருந்தபோது காங்கிரஸ் எம்.பிக்கள் அவரை தாக்க முயன்றனர் என்றும் பாதுகாப்பு கருதி அடுத்த நாள் அவைக்கு வரவேண்டாம் என்று பிரதமரை கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது முற்றிலும் பொய் என மறுத்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி பெண் எம்பிக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாக கிரண் ரிஜிஜு இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் இருக்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரிஜிஜு, "காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், 20-25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசியதும், பிரதமரை மிரட்டியதும் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்ததாக கூறிய ரிஜிஜு, அவர்கள் நேரடியாகச் சபாநாயகரைத் திட்டவில்லை என்றாலும், மற்ற எம்.பி.க்கள் மிரட்டுவதையும் தாக்குவதையும் அவர்கள் ஊக்குவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் மக்களவையில், 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய வெளியிடப்படாத சுயசரிதையின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிகிறது.
இதற்கிடையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மோடி அரசு ஏன் பொறுப்புக்கூறலுக்கு அஞ்சுகிறது?
- இது நாடாளுமன்றத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல்
PM CARES, பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (NDF) ஆகிய குறிப்பிட்ட மூன்று நிதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப முடியாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திற்குத் தெரிவித்துள்ளது.
இதற்கு இவை அரசு நிதி அல்ல என விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த நிதிகள் அனைத்தும் மக்களின் தன்னார்வப் பங்களிப்புகள் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இவை இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து ஒதுக்கப்படுபவை அல்ல என்றும் கூறியுள்ளது.
இதற்கு பிரதமர் அலுவலகம் இரண்டு விதிகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.
- விதி 41(2)(viii): நாடாளுமன்றக் கேள்விகள் இந்திய அரசின் நேரடிக் கவலைக்குரிய (primarily the concern of the Government) விஷயமாக இருக்க வேண்டும்.
- விதி 41(2)(xvii): இந்திய அரசுக்கு நேரடியாகப் பொறுப்பில்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பக்கூடாது. என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிதிகள் பொது தொண்டு அறக்கட்டளையாக (Public Charitable Trust) பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமை எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில்,
"பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் நிவாரணம் (PM CARES Fund), பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (NDF) குறித்த கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியாது."
இந்த உத்தரவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திலிருந்து நேரடியாக மக்களவை செயலகத்திற்கு வந்துள்ளன. இதன்மூலம் இந்த நிதிகள் குறித்து கேள்விகள் கேட்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது:
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அப்படியிருக்கையில் பொதுநலன் சார்ந்த கேள்விகளைக் கேட்பதிலிருந்து அவர்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்?
- மோடி அரசு ஏன் பொறுப்புக்கூறலுக்கு அஞ்சுகிறது?
- ஆயிரக்கணக்கான கோடி பொதுப் பணம் குறித்த கேள்விகளை ஏன் முடக்க வேண்டும்?
- மக்களிடமிருந்து அரசு எதைமறைக்க முயல்கிறது?
- இனி நாடாளுமன்றம் அரசியலமைப்பின்படி செயல்படுமா அல்லது மோடியின் உத்தரவுகளின்படி செயல்படுமா?
இது வெளிப்படைத்தன்மை அல்ல.
இது சர்வாதிகாரக் கட்டுப்பாடு.
இது நாடாளுமன்றத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல். " எனக் குறிப்பிட்டுள்ளது.
- பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டது.
- முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்க்கப்படவில்லை.
கடந்த ஜனவரி 28 தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே கூட்டத்தொடர் தொடக்கத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்றைய மக்களவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் உரை இல்லாமலேயே தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டு அவை நிறைவுற்றது.
இன்று சபை தொடங்கிய பிறகு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்காததால் பிரதமர் மோடி பேச இருக்கும்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.
- இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனா உடனான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பிரதமர் உரையாற்றாமலேயே மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனா உடனான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேலும் முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள கருத்துகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
"சரணடைந்த மோடி" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய மக்களவை, பகல் 12 மணி, மதியம் 2 மணி மற்றும் மாலை 5 மணி எனப் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மக்களவையில் இன்று பேசுவதற்கான ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.
- தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் என்னைப் பேசவிடாமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்தது.
புதுடெல்லி:
எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
மக்களவையில் இன்று பேசுவதற்கான ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.
என்னை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுத்தது ஜனநாயகம் மீதான கரும்புள்ளி.
எதிர்க்கட்சி தலைவரான என்னை மத்திய அரசின் அழுத்தத்தால் சபாநாயகர் பேச விடவில்லை.
தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் என்னைப் பேசவிடாமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்துள்ளது.
மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்தின்மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
- மாணிக்கம் தாகூர் உள்பட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.
- மீதமுள்ள இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க இயலாது.
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கம் தாகூர் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், சு. வெங்கடேசன் உள்பட மற்ற எதிர்க்கட்சிகளை சேர்ந்த 3 எம்.பி.க்களும் இதில் அடங்குவர்.
சபாநாயகரை நோக்கி பேப்பரை கிழித்து எறிந்ததாக இவர்களுக்கு எதிராக கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த 9 பேரும் மீதமுள்ள இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.
கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.
அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்ட நிலையில் இருக்கைக்கு செல்ல சபாநாயகர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளியால் மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
- தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை.
- இங்கு சர்வதேச விமானங்களின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி கிஞ்சராப்பு ராம்மோகன் நாயுடு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை. எனவே, இதை கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையத்தின் மேம்பாட்டுக்காக அரசு குறிப்பாக விமானப் போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தற்போது விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி சர்வதேச விமானங்களின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையத்துக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிர பரிசீலனையில் உள்ளது.
மதுரை-சென்னை மற்றும் மதுரை-பெங்களூரு விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் நிச்சயம் பேசப்படும். அந்த நிறுவனங்களின் திறனுக்கு உட்பட்டு நிச்சயம் அது அமல்படுத்தப்படும்.
மதுரை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து இரண்டையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்களைப் பொறுத்தவரை மதுரை விமான நிலையம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான இடம். எனவே, அதை மேம்படுத்தும் நோக்கில் எங்கள் பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
- மசோதா நகலை அமைச்சருக்கு எதிரே கிழித்து வீசி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
- மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் எஞ்சிய 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என மாறுகிறது.
பாராளுமன்ற மக்களவையில் இன்று 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் ஜி ராம் ஜி மசோதா நகலை அமைச்சருக்கு எதிரே கிழித்து வீசி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் பெயர் விக்சித் பாரத்-ரோஜ்கர் வாழ்வாதார திட்ட உத்தரவாதம் என மாற்றம் செய்யப்படுகிறது.
விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்படி 100 நாள் வேலை உறுதித்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட உள்ளது.புதிய ஜி ராம் ஜி திட்டத்தின் செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் எஞ்சிய 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என மாறுகிறது.
மகாதாமா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட செலவில் 10 சதவீதம் மாநில அரசின் பங்காக இருந்த நிலையில் தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முன்னதாக பத்திரங்கள் சந்தை குறியீடு மசோதாவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு மிக மோசமாக இருக்கிறது. இதுகுறித்து மக்களவையில் இன்று பிற்பகலில் விவாதிக்கப்பட இருந்தது. தற்போது அதற்கான விவாதம் நடத்தப்படமாட்டாது என்று தெரிய வந்துள்ளது.
- விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
- நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா மீதான விவாதம் நேற்றிரவு மக்களவையில் நடைபெற்றது.
மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று மசோதாவைத் தாக்கல் செய்தார்.
திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே பேரணியாக நடந்து சென்று காங்கிரசின் கார்கே, கேசி வேணுகோபால், பா. சிதம்பரம், திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி, மற்ற பிற கட்சிகளின் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
- பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
- 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நாளை டிசம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கீர்த்தி ஆசாத் மக்களவையில் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பிடித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பயன்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தார். அப்போது அவர் அந்த உறுப்பினரின் பெயரை குறிப்பிடவில்லை.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அனுராக் தாக்கூர் தனது புகாரில் சுட்டிக்காட்டினார்.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.
இந்நிலையில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கைக்குள் இ-சிகரெட்டை மறைத்து வைத்துப் புகைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவையின் சிசிடிவி பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்த பிறகு, விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






