என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவையில் புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மசோதா நிறைவேற்றம்
    X

    எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவையில் புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மசோதா நிறைவேற்றம்

    • மசோதா நகலை அமைச்சருக்கு எதிரே கிழித்து வீசி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் எஞ்சிய 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என மாறுகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மக்களவையில் ஜி ராம் ஜி மசோதா நகலை அமைச்சருக்கு எதிரே கிழித்து வீசி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் பெயர் விக்சித் பாரத்-ரோஜ்கர் வாழ்வாதார திட்ட உத்தரவாதம் என மாற்றம் செய்யப்படுகிறது.

    விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்படி 100 நாள் வேலை உறுதித்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட உள்ளது.புதிய ஜி ராம் ஜி திட்டத்தின் செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் எஞ்சிய 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என மாறுகிறது.

    மகாதாமா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட செலவில் 10 சதவீதம் மாநில அரசின் பங்காக இருந்த நிலையில் தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    முன்னதாக பத்திரங்கள் சந்தை குறியீடு மசோதாவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.

    டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு மிக மோசமாக இருக்கிறது. இதுகுறித்து மக்களவையில் இன்று பிற்பகலில் விவாதிக்கப்பட இருந்தது. தற்போது அதற்கான விவாதம் நடத்தப்படமாட்டாது என்று தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×