என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம்
    X

    மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம்

    • விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
    • நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா மீதான விவாதம் நேற்றிரவு மக்களவையில் நடைபெற்றது.

    மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.

    மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று மசோதாவைத் தாக்கல் செய்தார்.

    திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே பேரணியாக நடந்து சென்று காங்கிரசின் கார்கே, கேசி வேணுகோபால், பா. சிதம்பரம், திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி, மற்ற பிற கட்சிகளின் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    Next Story
    ×