search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGNREGA"

    • எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
    • திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

    "100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதியை விடுவிக்க வேண்டும் என பொங்கலுக்கு முன்பே பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், நிதி விடுக்காத பாஜகவை கண்டிக்காமல், தமிழ்நாடு அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி அவதூறு பரப்பி வருகிறார்" என்று தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.

    100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த நயவஞ்சக செயலை கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய MGNREGS நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திப் பொங்கலுக்கு முன்பே 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய பழனிசாமி , தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.

    ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?

    எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.

    புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி , 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு , ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்?

    தனது இயலாமையை மறைக்கவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனுதினமும் செயல்பட்டுவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • MGNREGS என்பது கிராமப்புற இந்தியாவிற்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும்.
    • தமிழ்நாட்டில் சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் இந்த திட்டப் பணிகளில் பங்கேற்று வருகின்றனர்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற இந்தியாவிற்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும். இது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமியப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடங்கப்பட்ட நாள் முதல் தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பல்வேறு அளவுகோல்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டில் 76 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர் என்றும், 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 29% தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இத்திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டில், 06.01.2025 வரை 20 கோடி மனித உழைப்பு நாட்களாக இருந்த நிலையில், தமிழ்நாடு ஏற்கனவே 23.36 கோடி மனித உழைப்பு நாட்களை எட்டியுள்ளது என்றும் தமிழ்நாட்டிற்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாட்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கனவே 23.11.2024 அன்று ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    தற்போது தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்து விட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 1,056 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அத்துடன் தமிழ் மக்களின் முதன்மையான மற்றும் முக்கியமானதுமானதுமான அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை, ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது என்பதை தாம் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், இத்திட்டத்தின் கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமரை தாம் கேட்டுக்கொள்வதாகவும், தமிழ்நாட்டில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போன்று ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் இருந்து வேலை செய்தவர்களுக்கு சம்பளம் மறுப்பு
    • மத்திய மந்திரி வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி கேட்டு கடிதம்

    100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஏற்கனவே பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களுக்கு சம்பளத் தொகை வழங்காமல் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. 6,366 கோடி ரூபாய் 18 மாநிலங்களுக்க வழங்காமல் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே கடந்த மாதம் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைப் பார்த்தவர்களுக்கு சம்பளம் மறுக்கப்படுவதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் வீட்டிற்கு வெளிப்புறம், ஜந்தர் மந்தர் மற்றும் கிரிஷி பவன் ஆகிய மூன்று இடங்களில் அக்டோபர் 2-ந்தேதி மற்றும் 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் திரணாமுல் காங்கிரஸ் கட்சி பேராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என, மேற்கு வங்காள எம்.பி.யும், திரிணாமுல் கட்சியை சேர்ந்தவருமான தெரிக் ஓ'பிரைன் டெல்லி போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து ஏற்கனவே கடந்த மாதம் 31-ந்தேதி கடிதம் எழுதியுள்ள நிலையில், காவல்துறை பதில் அளிக்காத நிலையில், தற்போது மீண்டும் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

    ×