என் மலர்

  நீங்கள் தேடியது "Shivraj Singh Chouhan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேருந்து விபத்தில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல்
  • உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் சிவராஜ் சிங் சவுகான்.

  டேராடூன்:

  உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கிய நிலையில் டம்டாவில் இருந்து யமுனோத்ரி நோக்கி 28 பக்தர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

  இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மாநில காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

  பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இது குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

  பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.

  முன்னதாக உத்தரகாண்ட் விபத்து குறித்து வருத்த தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் உத்தர காண்ட் விபத்தில் உயிரிழந்த பக்தர்களுக்கு, மத்திய பிரதேச அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  உத்தரகாண்ட் அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உடல்களை மத்திய பிரதேசத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் போது ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


  மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவு தலைப்பில் பிரதமர் மோடியின் பாதுகாவலர் சிவராஜ் சிங் சவுகானை தடுத்து நிறுத்தினார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  வைரல் பதிவு குறித்த இணைய தேடல்களில், வீடியோவில் சிவராஜ் சிங் சவுகானுடன் பேசிய போபால் மாவட்ட கலெக்டர் அவினாஷ் லாவினா வைரல் பதிவுகளில் உண்மையில்லை என தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கலெக்டர் அவினாஷை பிரதமரின் பாதுகாவலர் என வைரல் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

   வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

  பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 15 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று இருந்தார். அங்கு பிர்சா முண்டா பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட வீடியோவே தவறான தலைப்பில் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து, பா.ஜ.க. தலைவர் சிவராஜ்சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்காள அரசு அனுமதி மறுத்துள்ளது. #MamataBanerjee #ShivrajSinghChouhan
  கொல்கத்தா:

  வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என பா.ஜ.க தீவிரமாக வேலை செய்துவருகிறது. இதற்காக, பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கி வருகின்றனர்.

  இதற்கிடையே, மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஹராம்பூர், கரக்பூர் ஆகிய இரு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் திட்டமிட்டு இருந்தார்.

  ஆனால் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் பஹராம்பூர் கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது.  இந்நிலையில், கரக்பூர் பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில்  சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது மம்தாவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மாநில அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது என தெரிவித்தார்.

  ஏற்கனவே, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  #MamataBanerjee #ShivrajSinghChouhan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக தலைவர்களான சிவராஜ்சிங் சவுகான், ரமண்சிங் மற்றும் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோரை தேசிய துணை தலைவர்களாக நியமனம் செய்துள்ளது. #BjP #NationalVicePresident #ShivrajSinghChouhan #RamanSingh #VasundharaRaje
  புதுடெல்லி:

  சமீபத்தில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியில் இருந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ம.பி., ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  இந்நிலையில், சிவராஜ்சிங் சவுகான், ரமண்சிங் மற்றும் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோரை பாஜக தேசிய துணை தலைவர்களாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #BjP #NationalVicePresident #ShivrajSinghChouhan #RamanSingh #VasundharaRaje
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தன் பதவியை ராஜினாமா செய்தார். #MadhyaPradeshElections2018 #Mayawati #BSPSupportCongress
  போபால்:

  மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

  மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மெஜாரிட்டியை நெருங்கிய காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.  பாஜக ஆட்சியை இழந்துள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று மதியம் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுகான், ‘நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளேன். பாஜகவின் தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். கமல் நாத்துக்கு என் வாழ்த்துக்கள்’ என கூறினார். #MadhyaPradeshElections2018 #Mayawati #BSPSupportCongress
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ்நவ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #BJP #MadhyaPradeshAssemblyElection
  போபால்:

  மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜக. ஆட்சி நடந்து வருகிறது.

  அம்மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

  மத்திய பிரதேசத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று சமீபத்தில் சிவோட்டர் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

  இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் இணைந்து வார்ரூம் ஸ்ட்ரடெஜிஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தின. அந்த சர்வே முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

  அந்த கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜ.க. 142 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் 77 தொகுதியிலும், மற்ற கட்சிகள் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

  2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 166 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை 24 இடங்கள் குறைந்துவிடும் என்று சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 20 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


  தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 44 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  முதல் மந்திரியாக யார் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் சிவராஜ் சிங்சவுகானை தேர்வு செய்துள்ளனர். காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை 17 சதவீதம், திக்விஜய்சிங்கை 25 சதவீதம், கமல்நாத்தை 6 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.

  மத்திய பிரதேசம் போல சத்தீஸ்கரிலும் ராமன்சிங் தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  #BJP #MadhyaPradeshAssemblyElection #Congress
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் மோடியின் செயல்திறனால் மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும். முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் பதவி ஏற்பார் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். #MPpolls
  போபால்:

  பிரதமர் மோடியின் செயல்திறனால் மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும். முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் பதவி ஏற்பார் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

  நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

  சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 12-ம் வாக்குப்பதிவு  நடைபெறும். இரண்டாம் கட்டமாக நவம்பர் 20-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

  தர்மேந்திர பிரதான்

  மத்தியப்பிரதேசம், மிஜோரம் மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படும்.  அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையர்  தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று அறிவித்துள்ளார்.

  இந்நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மத்தியப்பிரதேசம் மாநில பா.ஜ.க. தேர்தல் குழு பொறுப்பாளரும் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியுமான தர்மேந்திர பிரதான், மத்தியப்பிரதேசம் சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, பிரதமர் மோடியின் செயல்திறனால் மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும். முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் பதவி ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MPpolls #ShivrajSinghChouhan #MPCM #DharmendraPradhan 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியப்பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChauhan #BlackScarves
  போபால்:

  மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
  அங்குள்ள பெடுல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முல்டாய் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ  வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

  அவர்கள் கருப்பு துப்பாட்டாக்களை அணிந்திருந்ததை பார்த்த பெண் போலீசார், அவர்களிடம் இருந்த் துப்பட்டாக்களை நிகழ்ச்சி முடிந்ததும் தருவதாக கூறி வாங்கி வைத்துள்ளனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.  முதல் மந்திரி பேசும்போது கருப்பு கொடியாக பயன்படுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் போலீசார் துப்பாட்டாக்களை வாங்கி வைத்துள்ளனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

  ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

  முதல் மந்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் துப்பட்டாக்களை போலீசார் வாங்கி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #ShivrajSinghChauhan #BlackScarves
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChouhan
  இந்தூர்:

  மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேருந்தில் தனது பிரச்சார யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவ்வகையில் இன்று சிதி மாவட்டத்தில் மக்களை நேரில் சந்திப்பதற்காக பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ புறப்பட்டுச் சென்றார்.  அப்போது சர்கட் தொகுதியில் அவரது வாகனம் சென்றபோது, அவருக்கு எதிராக சிலர் முழக்கங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மர்ம நபர்கள், முதல்வரின் வாகனம் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் முதல்வர் சவுகான் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. இந்த  தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான அஜய் சிங்கின் தொகுதியில் முதலமைச்சரை தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்குப்பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார். அஜய் சிங்கிற்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து மோதும்படி சவால் விடுத்தார்.

  இதற்கு பதிலளித்துள்ள அஜய் சிங், இந்த தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், வன்முறைக் கலாச்சாரத்தை காங்கிரஸ் பின்பற்றாது என்றும் கூறினார்.  #ShivrajSinghChouhan
  ×