என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "an intelligence agency"

    • அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

    மத்திய வேளாண் அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    உளவுத்துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் ஐ.எஸ்.ஐ.யால் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த எச்சரிக்கைகளால் போபாலில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்புக்கு கூடுதலாக மேலும் சில வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இன்று, போபாலில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ், 10க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுடன், தற்காப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்ற மொத்தம் 55 பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அவர்கள் 2 துப்பாக்கிகள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களும் வைத்திருந்தது தெரிய வந்தது.
    • வீடு எடுத்து துப்பாக்கி தயாரித்து வந்ததும் அதனை பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு டிஎஸ்பி சங்கீதா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அவர்கள் 2 பேரும் 2 துப்பாக்கிகள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களும் வைத்திருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி–யதில் சேலம் செவ்வாய்ப்–பேட்டையை சேர்ந்த என்ஜி–னீயர் சஞ்சய் பிரகாஷ் (வயது 24) என்பதும் மற்றொருவர் எருமாபாளையத்தைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25) என்பதும் பெரிய வந்தது. இவர்கள் சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா அருகே வீடு எடுத்து துப்பாக்கி தயாரித்து வந்ததும் அதனை பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு மாவட்ட காவல் துறையிடம் இருந்து உளவுதுறையான க்யூ பிராஞ்சிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 பேர் சேலம் மாவட்டத்திற்கு வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    ×