என் மலர்
உள்ளூர் செய்திகள்

துப்பாக்கியுடன் 2 பேர் கைது: வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முடிவு
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அவர்கள் 2 துப்பாக்கிகள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களும் வைத்திருந்தது தெரிய வந்தது.
- வீடு எடுத்து துப்பாக்கி தயாரித்து வந்ததும் அதனை பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு டிஎஸ்பி சங்கீதா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அவர்கள் 2 பேரும் 2 துப்பாக்கிகள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களும் வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி–யதில் சேலம் செவ்வாய்ப்–பேட்டையை சேர்ந்த என்ஜி–னீயர் சஞ்சய் பிரகாஷ் (வயது 24) என்பதும் மற்றொருவர் எருமாபாளையத்தைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25) என்பதும் பெரிய வந்தது. இவர்கள் சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா அருகே வீடு எடுத்து துப்பாக்கி தயாரித்து வந்ததும் அதனை பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு மாவட்ட காவல் துறையிடம் இருந்து உளவுதுறையான க்யூ பிராஞ்சிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 பேர் சேலம் மாவட்டத்திற்கு வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.






