search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union minister"

    • ரஷியாவில் தயாரான ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் துஷில் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.
    • இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    மாஸ்கோ:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று ரஷியா சென்றுள்ளார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐ.என்.எஸ். துஷில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. கலினின்கிராட்டில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார்.

    உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் ஐ.என்.எஸ். துஷில் போர்க்கப்பல், இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், மாஸ்கோவில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-ரஷியா அரசு ஆணையத்தின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.

    கடந்த 5 மாதத்துக்கு முன் பிரதமர் மோடி ரஷியாவிற்கு பயணம் செய்து அந்நாட்டின் அதிபர் புதினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழும் கலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
    • அரசியலில் ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்

    அரசியல் என்பது எதிலும் திருப்தியடையாத ஆத்மாக்களின் கடல் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரான நிதின் கட்கரி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவியில் உள்ளவர். நேற்று [ஞாயிற்றுக்கிழமை] நாக்பூரில் நடந்த '50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேடையில் அவர் பேசியதாவது,

    ஒரு நபர் குடும்பம், சமூகம், அரசியல் அல்லது கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தாலும், வாழ்க்கை சவால்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் "வாழும் கலையை" அந்த நபர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

     

    அதற்கு உதாரணம் கூறிய அவர், அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்களின் கடல், அங்கு ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்.. உறுப்பினராக வருபவர் தனக்கு எம்எல்ஏ ஆக வாய்ப்பு கிடைக்காததால் வருத்தப்படுகிறார்.

    அமைச்சர் பதவி கிடைக்காததால், எம்.எல்.ஏ., வருத்தத்தில் உள்ளார். அமைச்சர் ஆனவர், அமைச்சரவையில் நல்ல துறை கிடைக்காமலும், முதல்வராக முடியாமலும் தவிக்கிறார்.

    முதல்வரோ, எப்பொழுது மேலிடம் பதவியை விட்டு போக சொல்லுமோ என்று தெரியாமல் டென்ஷனில் இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியின் பதவிக்கு ஆர்எஸ்எஸ் செல்வாக்கு அதிகம் உள்ள நிதின் கட்கரி காய் நகர்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

     

    • லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரை மீட்க கோரிக்கை.
    • குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை.

    திமுக எம்.பி கனிமொழி இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது, லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரையும், குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி கடிதம் ஒன்றை வழங்கிானர்.

    இதுகுறித்து, கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • லாரியின் அடியில் சிக்கிய திவ்யஸ்ரீயின் தலைமுடி மீது லாரியின் டயர் எறியுள்ளது.
    • அப்போது அவ்வழியே மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தனது காரில் வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் லாரிக்கு அடியில் சிக்கிய பெண்ணை உள்ளூர் மக்கள் உதவியுடன் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் காப்பாற்றியுள்ளார்.

    திவ்யஸ்ரீ என்ற பெண் மீது லாரி மோதியுள்ளது. இதனால் தடுமாறிய அப்பெண் லாரியின் சக்கரத்திற்கு அருகில் விழுந்துள்ளார். உடனே சுதாரித்த ஓட்டுநர் லாரியை நிறுத்தியுள்ளார். ஆனால் லாரியின் அடியில் சிக்கிய திவ்யஸ்ரீயின் தலைமுடி மீது லாரியின் டயர் எறியுள்ளது. நூலிழையில் உயிர்பிழைத்த அப்பெண்ணின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கும் கூடியுள்ளனர்.

    அப்போது அவ்வழியே மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தனது காரில் வந்துள்ளார். அப்போது கூட்டமாக மக்கள் இருப்பதை கண்ட அவர் காரை விட்டு கீழே இறங்கி, அப்பெண்ணின் நிலையை கண்டு அதிகாரிகளிடம் அவரை மீட்க உத்தரவிட்டார்.

    பின்னர் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் லாரியை சக்கரத்தை உயர்த்தியும் பெண்ணின் தலைமுடியை வெட்டியும் அப்பெண்ணை பத்திரமாக மீட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாரிகள் அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
    • சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் விஜய் டாடா புகாரில் மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விஜய் டாடா அளித்த புகாரில், "மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ரமேஷ் கவுடா ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமிக்கு போன் போட்டு என்னிடம் கொடுத்தார். என்னிடம் போனில் பேசிய குமாரசாமி சன்னபட்னா இடைத்தேர்தலுக்காக ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டினார். பணம் ஏற்பாடு செய்யவில்லை என்றால், ரியல் எஸ்டேட் தொழிலை நடத்த முடியாது என்றும் பெங்களூரில் பிழைப்பு கூட நடத்த முடியாது என்று மிரட்டினார்.

    சன்னபட்னா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி (எச்.டி. குமாரசாமியின் மகன்) போட்டியிட உள்ளதாகவும் அதற்கு ரூ.50 கோடி தேவை என்று ரமேஷ் கவுடா மிரட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.

    சன்னபட்னா சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    • ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றினார்
    • அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

    மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுரை இணை அமைச்சர் சதீஸ் சந்திர தூபேவின் ஷூவை கழற்றி அவரின் கால் சட்டையை மற்றொருவர் சரி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர் சதீஸ் சந்திர தூபே தன்பாத் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றை பார்வையிட சிறப்பு  உபகரணங்கள் அணிந்து தயாராகியுள்ளார்.

    பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) என்ற அரசின் நிலக்கரி நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றி அவர் அணிந்திருந்த பைஜாமா கால் சட்டையின் கயிறை அட்ஜஸ்ட் செய்து பணிவிடை ஆற்றியுள்ளார்.

    அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டங்களை குவித்து வருகிறது. பிசிசிஎல் அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காக இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதாக தன்பாத் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    • குற்றவாளி சஞ்சய் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்த மத்திய அமைச்சர்
    • மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

    கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், உச்சநீதிமன்றத்தின் தலையீடு, சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மம்தா தலைமையிலான மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் அரசு மெத்தனப் போக்கில் செய்யப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன.

    குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தை முன்வைத்து மம்தா அரசை கடுமையாக சாடி வருகிறது. இந்நிலையில் பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய் , கொல்கத்தா துணை காவல் ஆய்வாளர் அனூப் குப்தா மற்றும் தென் தின்ஜாபூர் [Dinajpur] மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் உள்ளதாக  புகைப்படம் ஒன்றை மத்திய அமைச்சரும் மேற்கு வங்காள பாஜக தலைவருமான சுகந்தா மஜூம்தார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் முதல்வர் மம்தா பானர்ஜியைக் கடுமையாக சாடிய அவர், மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2000 -த்தை கடந்துள்ளது.
    • ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் ஜூல் ஓரம் இன் மனைவி ஜிங்கியா [58 வயது] டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஒடிசாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தை கடந்துள்ளது.

    இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் ஜூல் ஓரம் மனைவி ஜிங்கியா டெங்கு காய்ச்சலுக்கு தலைநகர் புவனேஷ்வரில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜூல் ஓரம் மனைவியின் மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜூல் ஓரமின் அரசியல் பயணத்தில் ஜிங்கியா முக்கிய பங்காற்றினார் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜூல் ஓரம்-ஜிங்கியா தம்பதிக்கு 2 மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளைக் கேட்கும்படி கோஷம் எழுப்பினர்.
    • கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மத்திய பாஜக அமைச்சரவையில் ஜவுளித்  துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகாரில் அவரது சொந்தத் தொகுதியான பெகுசாராய் [Begusarai] தொகுதியில் மனு கொடுக்க வந்தவர்கள் சூழ்ந்ததால் காரில் இருந்து இறங்கி பைக்கில் அங்கிருந்து அவர் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

     

    அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே பூங்கா ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்காகத் தனது காரில் வந்துகொண்டிருந்த கிரிராஜ் சிங் பள்ளியை நெருங்கியதும் அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளைக் கேட்கும்படி கோஷம் எழுப்பினர்.

    அவர்கள் தங்களின் மனுக்களை அமைச்சரிடம் கொடுக்க நெருக்கியடித்த நிலையில், காரில் இருந்து இறங்கி, பைக் ஒன்றின் பின்னால் அமர்ந்து அங்கிருந்து தப்பினார். இதனால் தங்களது கோரிக்கை மனுக்களைக் கொடுக்க வந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.
    • குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை.

    மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.

    மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை.

    குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தேசிய பங்குச்சந்தை மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கியதால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கஜேந்திர சிங் செகாவத் ஸ்கை டைவிங் செய்யும் வீடுயோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
    • நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் பாஜக வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றவர் கஜேந்திர சிங் செகாவத்.

    மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள பாஜக மூத்த தலைவர் கஜேந்திர சிங் செகாவத் ஸ்கை டைவிங் செய்யும் வீடுயோ இணையத்தைக் கலக்கி வருகிறது. இன்று [ஜூலை 13] உலக ஸ்கைடிவிங் தினம் [WORLD SKYDIVING DAY] கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதை ஊக்குவிக்கும் வகையில் 56 வயதான கஜேந்திர சிங் செகாவத் ஹரியானா மாநிலம் நார்நவுல் பகுதியில் நிபுணர் உதவியுடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

    மிகவும் பயத்தை ஏற்படுத்தும் ஸ்கை டைவிங் ஸ்டன்டை மத்திய அமைச்சர் துணித்து செய்துள்ளதை நெட்டிஸின்கள் பாராட்டி வருகின்றனர். இந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் பாஜக வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றவர் கஜேந்திர சிங் செகாவத். பாஜகவின் கடந்த ஆட்சியில் [2019 முதல் 2024 வரை] ஜல் சக்தி அமைச்சராக கஜேந்திர சிங் செகாவத் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை.
    • இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.

    ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அந்த கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:-

    1974ம் ஆண்டில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த பிரச்சினை தொடங்கியது.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×