என் மலர்
நீங்கள் தேடியது "ஊழல்"
- NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ளது
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
8ம் வகுப்பு NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து நீதித்துறையின் தலைவராக தனது எதிர்ப்பை பதிவு செய்வதாக பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும், இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனவும் இது ஒரு திட்டமிட்ட சதி போலத் தோன்றுவதாகவும் காட்டமாக தெரிவித்தார்.
- இந்தியா 100-க்கு 39 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
- 28 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 136வது இடத்திலும், 24 மதிப்பெண்ணுடன் வங்கதேசம் 150வது இடத்திலும் உள்ளது.
உலகளவில் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்த Corruption Perceptions Index - CPI குறியீடு 2025 அறிக்கையை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில், அதிக மதிப்பெண் பெற்றால் அரசு நிர்வாகத்தில் ஊழல் குறைந்து பட்டியலில் முன்னேறி இருப்பதாகவும், குறைந்த மதிப்பெண் பெற்றால் ஊழல் மலிந்த நாடுகளாக பின்தங்கி இருப்பதாவும் வரையறுக்கப்படுகிறது.
மொத்தம் 182 நாடுகளின் பட்டியலில் உலகின் மிகக் குறைந்த ஊழல் கொண்ட நாடாக டென்மார்க் 100-க்கு 89 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 84 மதிப்பெண்ணுடன் 3வது இடத்தில் உள்ளது.
பட்டியலில் இந்தியா 91-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் 96-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 5 இடங்கள் முன்னேறி 91-வது இடத்திற்கு வந்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியா 100-க்கு 39 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதேநேரம் 28 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 136வது இடத்திலும், 24 மதிப்பெண்ணுடன் வங்கதேசம் 150வது இடத்திலும் உள்ளது.
ஊழல் குறித்த இந்தப் பட்டியலில் டென்மார்க் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், சோமாலியா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன.
உலகளாவிய சராசரி மதிப்பெண் 42 ஆகவும், ஆசிய-பசிபிக் பிராந்திய சராசரி 45 ஆகவும் உள்ளது.
இந்தியாவின் 39 மதிப்பெண் இந்த இரண்டு சராசரிகளை விடவும் குறைவாகவே உள்ளது.
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் நிலவும் ஊழல், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பலவீனமான சட்டங்கள், பொறுப்பற்ற தலைமைத்துவம் மற்றும் அரசியல் நிதியுதவியில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஆகியவை பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் நல்லாட்சியை பலவீனப்படுத்துகின்றன" என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆசிய பசிபிக் ஆலோசகர் இல்ஹாம் முகமது ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.
- தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதி உதாரணமாகியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் அதிகாரி பாபுபாய் பிரஜாபதி (64).
1996-ஆம் ஆண்டு, லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் பாபுபாய் பிரஜாபதி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு பின் 2004 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
4 ஆண்டுகள் கடந்து விடுதலை ஆன போதும் தன் மீதான களங்கத்தை துடைக்க அவர் செய்த மேல்முறையீடு மேல்முறையீடு குஜராத் உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.
கடந்த புதன்கிழமை, குஜராத் உயர் நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை நிரபராதி என அறிவித்து வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் தீர்ப்பு வந்த மறுநாளே (வியாழக்கிழமை) அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதியின் நிலை மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது.
- ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது.
- இளைஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.
ஊழலை கட்டுப்படுத்த நாட்டின் இளைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் ஊழல் வழிகளில் ஈட்டும் செல்வத்தைத் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.
2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பிரிவு 17A அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதி பி.வி. நாகரத்னா தீர்ப்பளித்தார். இருப்பினும், மற்றொரு நீதிபதி விஸ்வநாதன் இது அரசியலமைப்பிற்கு எதிராக வில்லை என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அப்போது பேசிய நாகரத்னா, "நம் நாட்டின் இளைஞர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோர்கள் வருமானத்திற்கு அப்பால் ஊழல் மூலம் சம்பாதிக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். அது தேசத்திற்கும் செய்யும் ஒரு சிறந்த சேவையாக இருக்கும்
ஒருவரின் பேராசை மற்றும் பொறாமை மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி, மனதிலிருந்து அழிக்க வேண்டும். இல்லையெனில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதற்கு வழிவகுக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது. இத்தகைய போக்குகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிகளில் ஒன்று, ஆன்மீக மனநிலையை வளர்த்து மேம்படுத்துவதாகும். இதன் விளைவாக பொருள் சார்ந்த ஆசையில் இருந்து விடுபட்டு தேசத்திற்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த வைக்கும்" என்று தெரிவித்தார்.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் கூட இதே போன்றதொரு கருத்தை தான் கூறியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது.
- பாஜக ஆட்சியில் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது
மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக - அஜித் பவார் தலைமையிலான என்சிபி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஆளும் கூட்டணியில் ஒன்றாக இருந்தாலும், எதிர்வரும், மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக ஓரணியாகவும் மற்றும் அஜித் பவார் என்சிபி, இந்தியா கூட்டணியில் உள்ள சரத் பாவர் என்சிபியுடன் கூட்டணி வைத்து எதிராணியாகவும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பஜகவை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ், "தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது. அஜித் தாதா வெறும் பேச்சிலேயே நேரத்தை வீணடிக்கிறார், ஆனால் நான் களத்தில் வேலை செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
பட்நாவிஸின் கருத்துக்குப் பதிலளித்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், "நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை, அரசின் தோல்விகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.
சின்ச்வாட் மாநகராட்சியில் பாஜக செய்த ஊழல்கள் மற்றும் தவறுகளைச் சொல்வது விமர்சனம் ஆகாது" என்று கூறினார்.
மேலும், பாஜக ஆட்சியில் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது உட்படப் பல முறைகேடுகளை அஜித் பவார் கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் துணை முதல்வர், முதல்வரின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது பேசுபொருளாகி உள்ளது.
- பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.
- ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரியானா மாநில தொழிலாளர் நலத்துறையில் சுமார் ரூ.1,500 கோடி ஊழல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.
இந்தியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற வேண்டுமானால், அவர்கள் ஒரு வருடத்தில் குறைந்தது 90 நாட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கான ஆதாரமே ஒர்க் ஸ்லிப் ஆகும்.
இந்நிலையில் அரியானாவில் தொழிலாளர் நல வாரியத்தில் இருக்கும் நிதியைப் பெறுவதற்காக, கட்டுமானப் பணியில் ஈடுபடாத ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் ரூ.1,500 கோடி ரூபாய் நலத்திட்ட நிதி முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போலிப் பதிவுகளைக் கண்டறிய அனில் விஜ் உத்தரவிட்டதை அடுத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல மாவட்டங்களில் தகுதியற்றவர்களுக்குத் திட்டப் பயன்கள் சென்றடைந்தது தெரியவந்தது.
இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த அரியானா முதல்வர் நாயப் சிங் சைனி 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
- லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது.
- ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.
ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 7 சொகுசு பிஎம்டபிள்யூ கார்களை வாங்குவதற்கான சர்ச்சைக்குரிய டெண்டரை ரத்து செய்துள்ளது.
லோக்பால் உடைய தலைவர் மற்றும் அதன் 6 உறுப்பினர்களுகளின் அலுவலக பயன்பாட்டிற்காக மொத்தம் 7 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வாங்குவதற்கான டெண்டர் கடந்த 2025 அக்டோபரில் வெளியிடப்பட்டது.
லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது. தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.
ஊழலை ஒழிப்பதற்கான ஒரு அமைப்பு, இவ்வளவு பெரிய தொகையில் சொகுசு கார்களை வாங்குவது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, சொகுசு கார்கள் வாங்கும் முடிவு குறித்துலோக்பால் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இந்த கொள்முதல் திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 12.72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தனர்.
- சொத்துகளின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் மூட் கிஷன். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது அவர் ரூ.12.72 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை வாங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் அவர் வாங்கிய சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடி வரை செல்லலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் 13 (1), (பி) மற்றும் 13 (2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
- குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.
அரசுக்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மேலாளர், லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று தூக்கிலிடப்பட்டதாக நிறைவேற்றப்பட்டதாக சீன அரசு அறிவித்துள்ளது.
சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018 க்கு இடையில் பல திட்டங்களை வாங்குவதற்கும் நிதியளிப்பதற்கும் ஆதரவாக அவர் பெரும் அளவில் லஞ்சம் பெற்றதாகக் கண்டறியப்பட்டது.
அவர் 156 மில்லியன் டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,300 கோடி) லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் நேற்று காலை பாய் தியான்ஹுய், குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.
- டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் கடிதம்.
- 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரூ. 1,020,00,00,000 !!!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் கே.என்.நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.
கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இதெல்லாம் "Tip of the Iceberg" தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.
வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.
ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.
திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,
-மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.
-ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.
-பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.
அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.
இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்?
காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.
உண்மையிலேயே திரு. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
- நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளர்களிடம் பேசினார்.
திருச்சி:
என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
அதில் காணொளி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளர்களிடம் பேசினார்.
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,
அமலாக்கத்துறை இரண்டாம் முறையாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பதில் அளித்து அங்கிருந்து அமைச்சர் புறப்பட்டு சென்றார்.
- பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அதானி பவர் லிமிடெட் அமைக்கிறது.
- பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதானி பவர் லிமிடெட் நிறுவனம் பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் 2,400 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது. இந்தத் திட்டத்திற்காக, பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறுவப்படும். 5 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த ஒப்பந்தத்தில் மின்சாரம் பீகார் மாநிலத்துக்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் வழங்கப்படும்.
இந்நிலையில், பீகார் அரசுக்கும் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான மின்சார ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் அரசு அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துடன் 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் என்ற அதிகமான விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
2017-2024 க்கு இடையில் ஆர்.கே. சிங் மத்திய மின்சார அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






