என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Luxury Car"

    • அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.
    • அல்லு அர்ஜுன் நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

    இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

    இந்நிலையில், அட்லி விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழசினிமாவில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், இயக்குனர் சங்கர், ஹன்சிகா, லெஜண்ட் சரவணன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோல்ஸ் ராய்ஸ் காரை அட்லி வாங்கியுள்ளார்.

    இந்த காரின் விலை 7, முதல் 9.5 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    • ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • கேரளாவில் சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    பூடான் ராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

    • சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

    கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சொகுசு கார்களை பூட்டன் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டுவரப்பட்டதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனால் இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

    கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து எம்புரான் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பிரித்விராஜுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டது
    • 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    அதே போல் சில பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அவ்வகையில் பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மற்றும் கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும், 1,500 சிசி திறனுக்கு மேல் உள்ள சொகுசு பைக்குகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களுக்கு 40% வரி விதிக்கபட்டுள்ளது. 

    • ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் வழங்கினர்.
    • 2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

    பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரும், அமீர் கான் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் பெங்களூரு நகரில் சில ஆண்டுகளாக இயங்கி வந்தன.

    இதில் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரை பெங்களூரு வசந்தம் நகரில் வசிக்கும் தொழிலதிபர் கே.ஜி.எப். பாபு ஒரு திரைப்பட நடிகரிடமிருந்து வாங்கியிருந்தார்.

    அப்போது, வாங்குபவர் 15 நாட்களுக்குள் ஆவணங்களை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு கடிதம் வழங்கப்பட்டது.

    இருப்பினும், வாங்கிய பிறகு கே.ஜி.எப். பாபு அதை தனது பெயரில் பதிவு செய்யவில்லை. மேலும் இந்த காருக்கு உரிய வரி செலுத்தாமலும் ஓட்டி வந்தார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவின் வழிகாட்டுதலின் கீழ் அதிகாரிகள் வசந்தம் நகரில் உள்ள தொழிலதிபர் கே.ஜி.எ.ப் பாபுவின் வீட்டில் சோதனை நடத்தினர்.

    அங்கு நிறுத்தி வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் அவரிடம் வழங்கினர்.

    உரிய கட்டணம் செலுத்தாமல் 2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அமிதாப் பச்சனுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த கார் தற்காலிகமாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • துமாஸ் கடற்கரையில் இளைஞர்கள் சாகசம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • காரை கடற்கரை மணலில் இருந்து எடுக்க இளைஞர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள துமாஸ் கடற்கரையில் சாகசம் செய்வதற்காக ஓட்டிச் சென்ற சொகுசுக் கார், கடல் மணலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் கடற்கரை மணலில் சொகுசு கார் பாதி அளவு சிக்கியுள்ளது.

    துமாஸ் கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள் சாகசம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரை கடற்கரை மணலில் இருந்து எடுக்க இளைஞர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

    • உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பிரபல சொகுசு கார் நிறுவனமான லம்போர்கினி குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியான Stroller-களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    லிமிட்டட் எடிசனாக உருவாகியுள்ள உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பெற்றோர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன.
    • இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார்.

    இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான் சமீபத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கி இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் காரின் விலை ரூ. 8.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இவர் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் ஆர்க்டிக் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் காரின் இண்டீரியர் முழுக்க ஆல்-வைட் லெதர் மற்றும் கோபால்டோ புளூ அக்செண்ட்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார். முன்னதாக ஐதராபாத்தை சேர்ந்த நசீர் கான் என்பவருக்கும், இரண்டாவதாக புவனேஷ்வரை சேர்ந்த நபருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் டெலிவரி செய்யப்பட்டது.

     

    ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு கலினன் மாடலில் இருப்பதை விட பிளாக் பேட்ஜ் மாடலின் ஸ்பிரிட் ஆஃப் எக்டசி சின்னம் மற்றும் இரட்டை R பேட்ஜ் உள்ளிட்டவைகளில் டார்க் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று முன்புற கிரில் சரவுண்ட், பக்கவாட்டு ஃபிரேம் ஃபினிஷர்கள், பூட் ஹேண்டில், பூட் ட்ரிம், லோயர் ஏர் இண்டேக் ஃபினிஷர் மற்றும் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவைகளில் டார்கென்டு க்ரோம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி-இல் 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் உள்ளன.

    கலினன் பிளாக் பேட்ஜ் மாடலிலும் 6.75 லிட்டர், டுவின் டர்போ வி12 எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் வழக்கமான கலினன் மாடலை விட 29 ஹெச்பி மற்றும் 50 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • கர்நாடகாவில் பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலாமக நடைபெற்றது.
    • கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர்.

    இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலாமக நடைபெற்றது. முதலில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    தொடர்ந்து அமைச்சர்களாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றார்கள். அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ. 1 கோடியில் புதிய சொகுசு கார் ( டொயோட்டா வெல்ஃபயர் ) கர்நாடக அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது. 

    • உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.
    • 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.திருமணம் முடிந்து வந்த போது அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவரது வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரன்ஸ் வீட்டின் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    சிசிடிவி., காட்சிகள் அடிப்படையில் மங்கலம் போலீசார் திருடர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து திருடி செல்லும் சிசிடிவி., காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மெர்சிடிஸ் AMG GLC 43 4மேடிக் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய மெர்சிடிஸ் AMG GLC மாடலில் 4-வீல் டிரைவ், AMG டைனமிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய AMG GLC மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் AMG GLC மாடலில் மேம்பட்ட டிசைன், டிரைவிங் டைனமிக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த காரில் 680 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    என்ட்ரி லெவல் மெர்சிடிஸ் AMG GLC 43 4மேடிக் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 421 ஹெச்பி பவர், 499 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.

    AMG GLC 63 S e-பெர்பார்மன்ஸ் பிளாக்ஷிப் மாடலிலும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 204 ஹெச்பி பவர் கொண்ட மோட்டார் மற்றும் 6.1 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது 680 ஹெச்பி பவர், 1020 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 274 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மின்சக்தியில் அதிகபட்சம் 12 கிலோமீட்டர்கள் வரை மட்டுமே செல்லும்.

    புதிய மெர்சிடிஸ் AMG GLC மாடலில் 4-வீல் டிரைவ், AMG டைனமிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை காரின் எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி மற்றும் ஸ்டீரிங் ரெஸ்பான்ஸ் உள்ளிட்டவைகளை சிறப்பாக கன்ட்ரோல் செய்யும் திறன் வழங்குகின்றன. AMG ரைடு கன்ட்ரோல் இந்த காரின் ஸ்டான்டர்டு அம்சம் ஆகும். இத்துடன் ஸ்போர்ட்ஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய AMG GLC மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை GLC எஸ்யுவி ஸ்டான்டர்டு மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
    • மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வானூர்:

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .

    அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×